Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றிபெறப்போவது கொள்கையா அல்லது அரசாங்க செல்வாக்கா ?

Featured Replies

வடமாகாணத்தில் உள்ள 20 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்னும் மூன்று வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தல் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தல் சுதந்திரமான முறையில் நடைபெறுமா? என்று பலமான கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில், அங்கு பல்வேறு அச்சுறுத்தல் சம்பவங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே பிரசாரங்கள் ஆரம்பமாகி விட்டன. இந்தத் தேர்தலில் ஈ.பி.டி.பி.யை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தான் பிரதான போட்டி இருக்கப்போகிறது.

ஐ.தே.க. மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. வெற்றிலைச் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியில் குதித்துள்ள ஈ.பி.டி.பி. இந்தத் தேர்தலில் அதிகளவு சபைகளைக் கைப்பற்றும் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

உள்ளூராட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி விட்டால், அதன் மூலம் இலகுவாக பொதுமக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விடலாம் என்பது ஈ.பி.டி.பி.யினது கனவு மட்டுமன்றி அரசாங்கத்தின் எண்ணம் கூட. ஆளும் கட்சியின் சார்பில் ஈ.பி.டி.பி. தான் வெற்றிலைச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஆனால், அரசாங்கத்தை மீறி ஈ.பி.டி.பி. செயற்படப் போவதில்லை. அரசின் பிரதிநிதியாகவே அது இயங்கப் போகிறது. வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு அரசுடனான இணக்கப்பாடு அவசியம் என்பதே ஈ.பி.டி.பி.யின் நிலைப்பாடு.

எனவே அரசுடன் எந்த முரண்பாட்டையும் ஏற்படுத்தாமல் அரசியல் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதில் அது உறுதியாக உள்ளது. இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான கட்சி அமைப்பைக் கொண்டிராத போதும், மக்களின் அடிப்படைச் செல்வாக்கின் மீது அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது.

கொள்கை ரீதியான அரசியல் தான் இதன் பலம். கொள்கைக்கான வாக்குகளை நம்பியே கூட்டமைப்பு இந்தத் தேர்தலைச் சந்திக்கப் போகிறதேயன்றி அதற்கு அப்பாற்பட்ட விடயங்களில் இதன் செயற்பாடுகள் பூச்சியம் தான்.

அதாவது பொதுமக்கள் முன்னிலையில் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் இறங்குதல் என்ற விடயத்தில் கூட்டமைப்பு நிறையவே கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு கடுமையான சவாலை ஈ.பி.டி.பி.யிடம் இருந்து சந்திக்கப் போகிறது என்பது உண்மை. ஏற்கெனவே வடக்கு, கிழக்கில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 15 சபைகளில் 12 கைப்பற்றி கூட்டமைப்பின் பலம் நிரூபிக்கப்பட்டது.

அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் இம் முறை அதைவிட அதிகமான சபைகளுக்குத் தேர்தல் நடக்கப் போகிறது.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் 16 சபைகளுக்கும், கிளிநொச்சியில் 3 சபைகளுக்கும், முல்லைத்தீவில் துணுக்காய் பிரதேசசபைக்குமாக 20 சபைகளில் கூட்டமைப்பு கடும் போட்டியைச் சந்திக்கப் போகிறது.

அதேவேளை, திருகோணமலையில் பட்டணம் சூழலும் பிரதேசசபை, சேருவில், குச்சவெளி ஆகிய பிரதேசசபைகளிலும் அம்பாறையில் காரைதீவு, திருக்கோவில் பிரதேச சபைகளிலும் அது போட்டியிடுகிறது.

இந்த 25 சபைகளிலும் கூட்டமைப்பு தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் வெளிப்படவுள்ள கருத்து சர்வதேச அரங்கில் முக்கியத்துவப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. அதாவது தமிழ் மக்களின் கருத்து என்ன வென்றே அது கூறப்படும். அரசதரப்புடன் தமிழ் மக்கள் உள்ளனரா அல்லது தமிழ்த் தேசியத்தின் மீது அவர்களின் சார்பு தென்படுகிறதா என்று பலதரப்புகளும் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளன.

இந்தத் தேர்தலில் அரசதரப்பு வெற்றி பெற்று விட்டால் அது தமிழ்த் தேசியத்தின் வீழ்ச்சியாக மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் நிராகத்து விட்டார்கள் என்றும் சர்வதேச அரங்கில் பிரசாரங்கள் செய்யப்படும்.

அத்தகையதொரு நிலை ஏற்படுமானால் அது இப்போது நடக்கின்ற பேச்சுக்களை மட்டு மன்றி அரசியல் தீர்வு தொடர்பான முனைப்பு களிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

அதேவேளை கூட்டமைப்பு வெற்றி பெற்று விட்டால் அரசதரப்பினால் சில விடயங்களைத் தவிர்க்க முடியாது போகலாம்.

ஆனாலும் அதன் நிலைப்பாட்டில் பெரிதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது, இந்தநிலையில் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போவது கொள்கையா அல்லது அரசாங்க செல்வாக்கா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

ஈ.பி.டி.பி.யும் அரசாங்கத் தரப்பும் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அரசியல் அதிகாரச் செல்வாக்கை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே நடந்த தேர்தல்களின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புகள், அரசாங்க நியமனங்கள், நேர் முகத்தேர்வு, பதவி உயர்வு, பணி நிரந்தரம் என்பன போன்ற ஆயுதங்களை தேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொள்வதில் ஈ.பி.டி.பி.க்கு நீண்டகால அனுபவம் உள்ளது.

அத்துடன் ஆலயங்கள், பொது அமைப்புகளுக்கு நிதியுதவிகளை வழங்கி மடக்குவதிலும் அதற்கு போதிய அனுபவம் இருக்கிறது.

இப்போதும் இதுபோன்ற காரியங்கள் தாராளமாகவே நடந்தேறி வருகின்றன. இவையெல்லாம் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் தடை செய்யப்பட்டுள்ள போதும் அரச அதிகாரத்துக்கு முன்பாக இத்தகைய நடைறைகள் நின்று பிடிப்பதில்லை.

ஏற்கனவே பல தேர்தல் விதி மீறல்கள் நடந்து விட்டன. இனிமேலும் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் அரசாங்கமோ ஈ.பி.டி.பி.யோ இல்லை.

சுதந்திரமான தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்று பொது அமைப்புகள் கூறுவதை ஊடகங்கள் தவிர வேறெவரும் கருத்திலெடுப்பதாகவே தெரியவில்லை. இன்னமும் ஜனநாயகம் முழுமையாக உறுதி செய்யப்படாத நிலையில் சுதந்திரமான, நீதியான தேர்தலுக்கு வாய்ப்பு ஏற்படாதுள்ள நிலையில் வடக்கில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் சவாலை எதிர்கொள்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

அதிகார பலத்தை வெறும் கொள்கைகளால் சந்திப்பது என்பது சாதாரணமானதோ அல்லது அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவது சுலப மானதோ அல்ல.ஆனால் இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என் பது கூட்டமைப்புக்கு மிக மிக அவசியமான தேவையாக உள்ளது.

அதன் மூலம் தான் கூட்டமைப்பின் அரசியல் பலத்தை வெளிப்படுத்த முடியும்.அதிகாரபலத்துடன் மோதி இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது கூட்டமைப்புக்கு கிட்டத் தட்ட ஒரு அக்கினிப் பிரவேசமாகவே இருக்கப் போகிறது.

சகல அரச வளங்களும் எதிர்த்துக் களமிறக்கப்பட வாய்ப்புள்ள சூழலில் தனியாக அதை எதிர்கொள்கின்ற சவாலை கூட்டமைப்பு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற கேள்விக்கு எதிர்வரும் 23ஆம் திகதி பதில் கிடைத்து விடும்.

ஜுலை மாதம் எப்போதும் தமிழர்களுக்கு முக்கியத்துவம் மிக்கதொன்றாகவே இருந்து வந்துள்ளது. பல வரலாற்று துயரங்கள் நடந்ததும் ஜுலையில் தான். அதேவேளை. பல சாதனைகள் நிகழ்ந்ததும் ஜுலையில் தான்.

அதிலும் 1983 ஜுலை 23 வரலாற்றில் மிக முக்கியமானதொரு நாள். அன்று தான் திருநெல்வேலியில் 13 படை யினர் கொல்லப்பட்ட தாக்குதல் நடந்தது. அதன் பின் ஏற்பட்ட ஜுலைக் கலவரம், தமிழன் விடுதலை கோரிய ஆயுதப் போராட்டத்தில் பெரும் திருப்பமாக அமைந்தது.

அதே ஜீலை 23 இல் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், அரசியல் ரீதியான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெறப்போவது கொள்கையா அல்லது அரசாங்க செல்வாக்கா ?

வழக்கம் போலக் கள்ள வோட்டும், சுத்து மாத்தும் தான்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.