Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அரசாங்கத்தின்: நகர்வுகளை முறியடிக்கின்ற ஆற்றல் “தமிழர்தரப்புக்கு மட்டுமன்றி” “இந்தியாவுக்கும் கூட” உள்ளதா…….?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசாங்கத்தின்: நகர்வுகளை முறியடிக்கின்ற ஆற்றல் “தமிழர்தரப்புக்கு மட்டுமன்றி” “இந்தியாவுக்கும் கூட” உள்ளதா…….?

பிரசுரித்தவர்: admin July 9, 2011

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம்அரசாங்கம் சாதிக்க நினைப்பது என்ன?

இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வைக் காணும் பொறுப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்து விட்டது.

இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை- அதுவே இறுதியானது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

எந்தவொரு தீர்வானாலும் அதை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் தீர்வைத் தாம் ஏற்றுக் கொள்ளத்

தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் தன்னிடம் ஒரு தீர்வு யோசனை உள்ளதாகக் கூறிவந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இப்போது சடுதியாக அந்தப் பந்தை நாடாளுமன்றத்தின் மீது போட்டு விட்டுத் தான் தப்பிக் கொள்ள எத்தனிக்கிறார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியிலும், அதன்பின்னர் சரியாக ஒரு ஆண்டு கழித்து அளித்த பேட்டியிலும் தன்னிடம்

ஒரு தீர்வு யோசனை உள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமன்றி கடந்த ஆண்டு இறுதியில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் சமூகத்தில் உரையாற்ற முடியாமல் திரும்பிய பின்னர் கூட அவர், அங்கு அரசியல்தீர்வை

வெளியிடவிருந்ததாகவும், அதற்கான சந்தர்ப்பத்தைக் கெடுத்து விட்டார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

இப்போது அவர் தன்னிடம் எதுவுமில்லை என்பதை மறைமுகமான ஒப்புக் கொண்டு நாடாளுமன்றத் தெரிவுக்குழு பற்றிப் பேசத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து அரசியல்தீர்வு என்ற ஆட்டத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும், நாடாளுமன்றமும் பிரதான காய்களாக மாறத் தொடங்கியுள்ளன.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்தால் அதில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசுடன் நடத்தும் பேச்சுக்களில் இருந்தும் விலக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

அதுபோலவே ஐதேகவும் இதில் பங்கேற்பது சந்தேகம் தான்.

ஜேவிபியும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒரு பித்தலாட்டம் என்று விமர்சித்துள்ளதுடன், அதில் பங்கேற்கத் தயாரில்லை எனறு கூறிவிட்டது.

இந்தநிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் ஆளும்கட்சியின் ஆலோசனைக் கூட்டமாகவே நடந்து முடியப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து அரசியல் தீர்வு காணும் யோசனை எப்படி அரசாங்கத்துக்கு வந்தது என்பது இங்கு விடை காணப்பட வேண்டிய முக்கியமான

கேள்வியாகும்.

இது ஒன்றும் அரசாங்கத்தின் யோசனையே அல்ல. டக்ளஸ் தேவானந்தா தான் இதை இந்தியாவின் மூவரணியிடம் கூறியுள்ளார்.

அதனை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தான் தன்னிடம் கூறினார் என்றெல்லாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது ஒன்றும் தமது திட்டமில்லை, தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பு என்று அவர் கூற வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஏற்கனவே பல தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. சர்வகட்சிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அனைத்துக்கட்சி மாநாடுகள் கூட்டப்பட்டன. எல்லாமே கூடிக் கலைவது

அல்லது அறிக்கையைக் கொடுத்து பின்னர் அது குப்பைக்குள் போடப்படுவதாகவே இருந்துள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் யோசனையை முன்வைத்தால், அது காலத்தை இழுத்தடிக்கும் செயல் என்ற விமர்சனம் வரும் என்பது

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நன்கு தெரியும்.

எனவே தான் இதை டக்ளஸ் தேவானந்தாவின் வாயால் இந்தியதரப்புக்கு கூற வைத்து, அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டுள்ளது போன்று காட்ட முனைகிறார்.

திடீரென நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் இந்தப் பணியை ஒப்படைக்க மகிந்த ராஜபக்ஸ முடிவு செய்தது ஏன் என்ற கேள்வி வருகிறது.

அங்கே தான் இருக்கிறது விவகாரம். அண்மைக்காலமாக இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவிடம் இருந்து தமக்கு அப்படியான எந்த அழுத்தங்களும் வரவில்லை என்று, ஜனாதிபதி கூறினாலும், இந்தியதரப்பு வெளியிட்ட

அறிக்கைகளில் இருந்து அதை தெளிவுபடுத்த முடிகிறது.

அண்மையில் கொழும்பு வந்த சிவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்தியக்குழு இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கும்

என்ற எதிர்பார்ப்பு முன்னரே ஏற்பட்டிருந்தது. குறிப்பாக இந்தியா 13வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி வந்தது.

அதிலிருந்து தப்பிக் கொள்ள மகிந்த ராஜபக்ஸவுக்கு வேறு வழியிருக்கவில்லை.13வது திருத்தத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பகிர முடியாது என்று கூறிவிட்ட அவர், 13வது

திருத்தத்தின் படியான அல்லது அதற்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றியோ சிந்திக்க கூடத்த யாராக இல்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் தான், இந்தியாவின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்க ஒருமாற்று உபாயம் தேவைப்பட்டது. அதுதான் இந்த நாடாளுமன்றத்

தெரிவுக்குழு.அதை டக்ளஸ் தேவானந்தா முன்வைத்ததன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை நெருக்கடியில் இருந்து காப்பாற்றி விட்டார்.

அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு தீர்வுத்திட்டத்தை தான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறிவந்த மகிந்த ராஜபக்ஸ, இப்போது நாடாளுமன்றம் ஏற்கின்ற தீர்வை நடைமுறைப்படுத்த தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய அரசியல் சூழலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கையில் தான் எல்லாமே இருக்கிறது. அவர் நினைத்தால் தான் எதுவும் நடக்கும்.

முன்னொரு காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி குறித்தும் கருத்து வெளியிட்ட ஜேஆர், தன்னிடம் எல்லா அதிகாரமும் உள்ளதாக கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஆனால் இப்போது ஜே.ஆரிடம் கூட இல்லாத அதிகாரங்கள் அனைத்தும் மகிந்த ராஜபக்ஸவிடம் உள்ளது. அவர் நினைத்தால்- எந்தவொரு தீர்வையும் நிறைவேற்றலாம்.

நடைமுறைப்படுத்தலாம்.நாடாளுமன்றத்தில் கூட அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது.அப்படியிருக்க மிகச் சுலபமாகவே அரசாங்கம் அரசியல்

தீர்வை எட்ட முடியும்.

ஆனால் அதற்கான எண்ணப்பாடு இருந்தால் தான் அதைச் செய்யலாம். அதை விரும்பாத மகிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்றத் தெரிவுக்குழு, நாடாளுமன்ற

அங்கீகாரம் என்று அலைக்கழிக்க முடிவு செய்துள்ளார்.

இதன்மூலம் மீண்டுமொரு சிக்கல் இனப்பிரச்சினைக்குள் உருவாக்கப்படவுள்ளது.ஒருபக்கத்தில் கூட்டமைப்புடன்

பேச்சு நடக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஈபிடிபியுடன் பேச்சு நடக்கிறது.

இந்த நிலையில் தான் இவையெல்லாவற்றையும் வெட்டிப் பேச்சாக்கும் வகையில் தெரிவுக்குழு அமைக்கப் போவதாக அரசாங்கம் கூறியுள்ளது. இதன்மூலம் மகிந்த ராஜபக்ஸ தன்னிடம்

எதுவுமில்லை என்று கையை விரிக்க முனைகிறார்.

அவருக்கு தேவையானதோர் தீர்மானத்தை நிறைவேற்றவும் தெரியும், தேவையற்றதை தட்டிக் கழிக்கவும் முடியும்.

இப்படித் தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் இழுபறிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை தள்ளிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவைப் புறக்கணிக்கும் முடிவு எடுத்தால், அரசாங்கம் என்ன செய்யப்

போகிறது?.

அப்படியான தெரிவுக்குழுவின் மூலம் எடுக்கப்படும் தீர்வை ஒருபோதும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது போகலாம்.

ஏற்கனவே திஸ்ஸ விதாரண குழுவின் அறிக்கை குப்பைக்குள் வீசப்பட்டதற்கு- ஐதேக அதில் இருந்து விலகிக் கொண்டதே காரணம் என்று இப்போது கூறியுள்ளது அரசாங்கம்.

அதேநிலை தான் புதிதாக அமையும் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கும் நடக்கப் போகிறது.

எதிர்க்கட்சிகள் இல்லாமல் எந்தவொரு தீர்வையும் நடைமுறைப்படுத்த மகிந்த ராஜபக்ஸ தயாரில்லை. ஏனென்றால் அது தமது

அரசியல் வாழ்வுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்று அவர் கருதுகிறார்.

இந்தநிலையில் அரசியல்தீர்வு என்பது எட்டாத கனியாகவே இருக்கப் போகிறது. அதற்கான வியூகத்தை அரசாங்கம் வகுத்துவிட்டது.

இந்தநிலையில், அரசாங்கத்தின் நகர்வுகளை முறியடிக்கின்ற ஆற்றல் தமிழர்தரப்புக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் கூட உள்ளதா என்பதே இப்போதுள்ள முக்கியமான வினாவாகும்.

http://mykathiravan.com/ta-news/?p=11602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.