Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் ஹிட்லரின் நாஸிஸவாத ஆட்சி

Featured Replies

வடக்கில் ஹிட்லரின் நாஸிஸவாத ஆட்சி: அனுரகுமார

வடக்கில் ஹிட்லரின் நாஸிஸவாத ஆட்சியே இடம்பெறுகின்றது. அங்கு மரபுரிமை, நாகரிகத்தை அழித்து சின்னாபின்னமான தமிழினம் ஒன்றை உருவாக்கும் முயற்சியிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுபவர்களை அடக்கும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. மேற்கத்தைய நாடுகளின் சூழ்ச்சிகளை தோற்கடிக்க வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.வடக்கில் தாய், தந்தையரை இழந்த 5,000 சிறுவர்களும் தாய் அல்லது தந்தையை இழந்த 12,000 சிறுவர்களும் உள்ளனர்.

வடக்கில் 46,000 விதவைகளும் இருகின்றனர். விதவை பெண்களுக்கு வாழ்வாதாரத்திட்டங்கள் எதனையும் அரசு முன்னெடுக்காமையினால் அவர்கள் தமது குடும்பத்தை கொண்டுநடத்த முடியாதுள்ளனர். இதனால், சமூகசீரழிவுக்கு ஆளாகின்றனர். தமது கற்பை தாரைவார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கில் வாழ்கின்ற மக்களை குடும்பம் குடும்பமாகப் படமெடுத்து அதனை வீட்டு சுவரில் பார்வைக்குத் தொங்கவிட வேண்டும். மற்றொரு பிரதியை இராணுவ முகாமுக்குக் கொடுக்கவேண்டும்.

இராணுவத்தினர் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது அந்த புகைப்படத்தில் இல்லாதவர்கள் வீட்டில் இருந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். இது ஹிட்லரின் நாஸிஸவாதம் அல்லவா? தமிழர்களை சின்னாபின்னப்படுத்த வேண்டும் என்ற ஒரு விஷமத்தனமான அற்ப சிந்தனை நிலையிலேயே அரசு செயற்படுகின்றது.

அந்த மக்களின் மரபுரிமைகள், நாகரீக த்தை மதிக்காமல் இந்த அரசு செயற்படுகி ன்றது.

காணியை சட்டப்படி சுவீகரிப்பதற்கு 72 வாரகாலம் அவகாசம் தேவை. எனினும், வடக்கில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றனவா? அபிவிருத்தி என்ற மாயைக்குள் வடக்கு மக்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். திட்டம் இல்லை. அபிவிருத்தி என்று மட்டுமே கூறிக் கொண்டிருக்கின்றனர்.

http://www.alaikal.com/news/?p=75835

  • தொடங்கியவர்

அரசாங்கம் மன்னிப்பு கோரவேண்டும்

மக்கள் கொல்லப்பட்டமையை ஏற்று அரசாங்கம் மன்னிப்பு கோரவேண்டும்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை உறுதியாகும். இதனை ஏற்றுக்கொள்வதுடன் அந்த சந்தர்ப்பத்தில் அது தவிர்க்க முடியாதது என்பதை எடுத்துக்கூறி மன்னிப்புக்கோர அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று சபையில் தெரிவித்தார்.

தமிழர் பிரச்சினையை சர்வதேசம் உன்னிப்பாத அவதானித்துவருகின்றது. இந்நிலையில் இனியும் ஏமாற்ற முடியாது. கூட்டமைப்புடன் இணக்கத்தை ஏற்படுத்தி, எட்டப்படுகின்ற தீர்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவினை வழங்கக் காத்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கு நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு மற்று சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஆகியவற்றின் தீர்வு யோசனைகளை பேச்சுக்கான அடிப்டைகளாக ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன ஏற்றுக்கொண்டன. எனினும் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தி விட்டது.

தற்போது இன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும் அரசியல் தீர்வினை எட்டுவறத்கும் தெரிவுக்குழு அமைக்கப்போவதாகக் கூறப்படுகின்றது. சகல கட்சிகளினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கே இந்த தெரிவுக்குழு என்றும் கூறப்படுகின்றது. இவ்வறிருக்கையில், பாராளுமன்றத்தில் சகலரும் ஆதரவளித்து நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு எந்தத் தெரிவுக்குழுவும் அமைக்கப்படவில்லை. அரசு அவ்விடயத்தில் தனது பெரும்பான்மையை மாத்திரமே பயன்படுத்தியது.

பெரும்பான்மையைப் பயன்படுத்தி அரசாங்கம் தனக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்கின்ற அதேவேளை, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினதும் சர்வகட்சிக் குழுவினதும் யோசனைகளைப் பயன்படுத்தி ஏன் தீர்வொன்றினை முன்வைக்க முடியாது? அரசு அதனைச் செய்யாது.ஏனெனில் அதற்கான தேவையோ அக்கறையோ அரசியடம் இல்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அதன் கூடடணிக் கட்சிகளும் அதிகாரப்பகிர்வுக்கு எதிர்ப்பினையே தெரிவித்துள்ளன. காரணம் என்னவெனில் தீர்வு ஒன்றை வழங்கிவிட்டால் கூட்டணிக்குள் பிளவுகள் வந்துவிடும் என்ற அச்சமேயாகும்.

இதேவேளை, அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்குமானால் அதற்கு ஒத்துழைக்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஏற்படுத்திக் கொள்கின்ற இணக்கப்பாட்டுக்கு பூரண ஆதரவளிப்பதற்குப் ஐ.தே.க. தயாராகவே இருக்கின்றது. பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் சரி. வெளியிலும் சரி நாம் ஆதரவளிப்போம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுமா,அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்று சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. தீர்வு என்பது 30 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் இனியும் காலம் தாழ்த்த முடியாது.

இவ்வருட இறுதிக்குள் தீர்வ தொடர்பில் முடிவொன்று எட்டப்பட வேண்டும். அது நடைபெறாவிடில் சர்வதேச வலைக்குள் சிக்கிக்கொள்ளும் நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டு விடும். அரசாத்துக்கு ஏற்பட்டிருக்கும் பயங்கர நிலை இங்குள்ள அமைச்சர்களுக்குப் புரியாதுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் இடம்பெறவில்லையென அரசாங்கம் கூறுகின்றது. பொய்யைக் கூறுகின்ற சந்தர்ப்பத்தில் அது நம்பும்படியாக கூற வேண்டும். இவ்வாறு பொய்கூறுவதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்குவது யாரென்று தெரியாதுள்ளது.

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உறுதியாகியுள்ளது. இருந்தபோது எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியாது. எவ்வாறிருப்பினும் அரசாங்கம் என்றவகையில் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

அத்துடன் பொதுமக்கள்கொல்லப்பட்மையை ஏற்றுக்கொண்டு அதற்கான காரணத்தையும் விளக்கி மன்னிப்புக் கோருவதுடன் நட்டஈடுகளையும் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

http://www.alaikal.com/news/?p=75841

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.