Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசிலாந்துக்குள் கடல் வழியாக பிரவேசிக்க முயன்ற 87 தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்துக்குள் கடல் வழியாக பிரவேசிக்க முயன்ற 87 தமிழர்கள்!

நியூசிலாந்துக்குள் கப்பல் மூலம் சட்டவிரோதமான முறையில் உட்பிரவேசிக்க முயன்ற இலங்கைத் தமிழர்கள் 87 பேர் கடலில் இன்று மதியம் இடைமறித்துப் பிடிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்கள் அலிசியா என்கிற கப்பலில் சில நாட்களுக்கு முன்னர் புறப்பட்டு இருந்தனர்.

நியூசிலாந்தை ஓரளவு நெருங்கி இருந்தனர். ஆனால் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இந்தோனேசிய கடல் படையினர் இவர்களை மடக்கிப் பிடித்தார்கள். கப்பலை கைப்பற்றினார்கள். பற்றன் என்கிற இடத்துக்கு அருகில் வைத்து கைது இடம்பெற்றது.

கைது செய்யப்பட்டவர்களையும், கைப்பற்றப்பட்ட கப்பலையும் இந்தோனேசிய கடல் படையினர் இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்கின்றனர். இத்தமிழர்களில் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். நியூசிலாந்து அரசு பொறுப்பேற்று அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும் என்பது இத்தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8429:-----87-&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

'அலிசியா' கப்பலில் விடுதலைப் புலிகளின் உறவினர்கள், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் உள்ளனர் என்கிறார் அகதி

[Monday, 2011-07-11 22:45:41]

இலங்கைத் தமிழர்கள் 87 பேரை நியூசிலாந்து நோக்கி ஏற்றிச் சென்று கொண்டிருந்த கப்பலொன்று இந்தோனேசிய துறைமுகத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில் இந்தோனேசியக் கடற்பரப்பில் நின்று கொண்டிருந்த போதே எம்.வி.அலிசியா என்ற இந்தக் கப்பலை சனிக்கிழமை இந்தோனேசிய கடற்பரப்பு காவல் துறையினர் மற்றும் கடற்படையினர், டான் ஜுங் பினாங்என்ற துறைமுகத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த கப்பலில் இருந்தவர்களில் சிலரிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ள நிலையில், தங்களை ஐ.நா மன்றமோ அல்லது நியுசிலாந்து நாடோ பொறுப்பேற்றுக் கொள்ளும் வரை தாங்கள் கப்பலை விட்டு இறங்கப் போவதில்லை என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் உறவினர்கள், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கப்பலில் இருப்பதாக கப்பலிலிருந்து செல்வக்குமார் என்பவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

கப்பலிலுள்ள பெரும்பாலானவர்கள் மலேஷியாவிலிருந்தே, புறப்பட்டதாகவும், கப்பல் இந்தோனேஷியாவிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டதென்றும் செல்வக்குமார் மேலும் கூறினார்.

போரின் பின்னர் இலங்கையில் இன்னும் சுமுக நிலை திரும்ப வில்லையென்றும் அங்கு தாம் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்து காரணமாகவே வெளிநாட்டுக்கு தஞ்சம் கோரிச் செல்வதாகவும் கப்பலிலுள்ளவர்கள் கூறுகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46330&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் 87 பேர் கப்பலில் இருந்து இறங்க மறுப்பு

இந்தோனேசியக் கடலில் முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல்

refugeeboat1.jpg

இந்தோனேசிய கடற்படையினரால் பிடித்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், தம்மை நியுசிலாந்து அரசோ, ஐநா மன்றமோ பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் 87 பேரை நியூசிலாந்து நோக்கி ஏற்றிச் சென்று கொண்டிருந்த கப்பலொன்று இந்தோனேசிய துறைமுகத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில் இந்தோனேசியக் கடற்பரப்பில் நின்று கொண்டிருந்த போதே எம்.வி.அலிசியா என்ற இந்தக் கப்பலை சனிக்கிழமை இந்தோனேசிய கடற்பரப்பு காவல் துறையினர் மற்றும் கடற்படையினர், டான் ஜுங் பினாங்

என்ற துறைமுகத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த கப்பலில் இருந்தவர்களில் சிலரிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ள நிலையில், தங்களை ஐ.நா மன்றமோ அல்லது நியுசிலாந்து நாடோ பொறுப்பேற்றுக் கொள்ளும் வரை தாங்கள் கப்பலை விட்டு இறங்கப் போவதில்லை என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் உறவினர்கள், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கப்பலில் இருப்பதாக கப்பலிலிருந்து செல்வக்குமார் என்பவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

கப்பலிலுள்ள பெரும்பாலானவர்கள் மலேஷியாவிலிருந்தே, புறப்பட்டதாகவும், கப்பல் இந்தோனேஷியாவிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டதென்றும் செல்வக்குமார் மேலும் கூறினார்.

போரின் பின்னர் இலங்கையில் இன்னும் சுமுக நிலை திரும்ப வில்லையென்றும் அங்கு தாம் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்து காரணமாகவே வெளிநாட்டுக்கு தஞ்சம் கோரிச் செல்வதாகவும் கப்பலிலுள்ளவர்கள் கூறுகின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110711_tamilsdetainedindonasia.shtml

நியூசிலாந்து அகதிகளை வரவேற்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.