Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை ஒழுங்கு செய்யும் வாய்ப்பை ஹம்பாந்தோட்டை இழக்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை ஒழுங்கு செய்யும் வாய்ப்பை ஹம்பாந்தோட்டை இழக்கலாம்?

11 ஜூலை 2011

பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை ஒழுங்கு செய்யும் வாய்ப்பை ஹம்பாந்தோட்டை இழக்கலாம்?

2018ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டித் தொடரை ஒழுங்கு செய்யும் சந்தர்ப்பத்தை ஹம்பாந்தோட்டை நகரம் இழக்கக் கூடும் என அவுஸ்திரேலிய பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

2018ம் போட்டித் தொடரை நடாத்தும் சந்தர்ப்பத்திற்காக அவுஸ்திரேலியாவும் தீவிரமாக போட்டியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி அடைந்து வரும் நகரம் ஒன்றுக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்குவது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்ட அனுபவங்களை நினைவில் நிறுத்திக் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென பொதுநலவாய நாடுகள் அமைப்பு உறுப்பு நாடுகளிடம் அவுஸ்திரேலியா கோரியுள்ளது.

பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் அபிவிருத்தி அடைந்து வருபவை எனவும், இவை அரசியல் ரீதியான காரணங்ளை முன்னிலைப்படுத்தி தீர்மானம் எடுக்கக் கூடும் எனவும் அவுஸ்திரேலிய பேராசிரியர் கிறிஸ்டின் தூஹீ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடரை நடாத்துவதன் மூலம் ஹம்பாந்தோட்டை நகரை பாரியளவில் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாத போதிலும் அதனை விடவும், காத்திரமான விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதே முதனிலை நோக்கமாக அமைய வேண்டுமென அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.

போட்டியை நடாத்துவதற்கு தேவையான சகல வசதிகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும், ஹம்பாந்தோட்டையில் இன்னமும் ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63906/language/ta-IN/article.aspx

- பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை ஒழுங்கு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்த பெரும்செலவில் அமர்த்தப்பட்ட நிறுவனமே அவுஸ்திரேலிய நகருக்கும் செயல்படுகின்றது.

- இந்த நிறுவனத்திற்கு 'விளையாட்டுக்கு' என தரப்படும் பணம் அரசியல் பரப்புரைகளுக்கே பயன்படுகின்றது.

'ஹம்பாந்தோட்டை 2018' பிரசாரத்திற்காக பிரித்தானிய நிறுவனத்தி​ற்கு 26 கோடி ரூபா http://www.yarl.com/forum3/index.php?showtopic=85534

பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த கலாநிதி விக்கிரமபாகுவின் பொதுக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரை முகவர்களான Bell Potinger நிறுவனத்தின் பிரதிநிதிகள் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78106

அனுதாப வாக்குகள் எமக்கு தேவையில்லை: ஹம்பாந்தோட்டை

2018 ஆம் ஆண்டின் பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்தும் உரிமையைப் பெறுவதில் அனுதாப வாக்குகள் தேவையில்லை எனவும் தகுதி அடிப்படையில்  அதற்கு போட்டியிட விரும்புவதாகவும் ஹம்பாந்தோட்டை 2018 பிரச்சாரக்குழு தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரமும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தியடைந்துவரும் பல நாடுகள் அரசியல் காரணங்கக்காக இலங்கைக்கு வாக்களிக்கக்கூடும் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை பிரச்சாரக்கு குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நளின் ஆட்டிகல டெய்லி மிரருக்கு கருத்துத் தெரிவிக்கையில், எந்தவொரு அபிவிருத்தியடைந்துவரும் நாட்டையும் குறைத்துமதிப்பிடக்கூடாது. குறிப்பாக பொதுநலவாய போட்டிகளுக்கு தயார்படுத்தல் விடயத்தில் குறைத்துமதிப்பிடக்கூடாது. இலங்கை எந்தவொரு நாட்டினதும் அனுதாப வாக்குகளை தேடவில்லை. மாறாக, நாம் பெறும் வாக்குகள் தகுதி அடிப்படையிலானதாக இருக்கும் என்றார்.

அதேவேளை, இப்போட்டிகளை நடத்தும் உரிமை இலங்கைக்கு கிடைத்தால் 2016 ஆண்டிற்குள் இதற்கான நிர்மாணங்கள் பூர்த்தியடைந்திருக்கும் எனவும் அவர் கூறினார்.

17 விளையாட்டுக்களில் 15 விளையாட்டுக்களை ஒரே விளையாட்டு அரங்கத் தொகுதியில் கொண்டிருக்கும் அனுகூலத்தையும் நாம் பெற்றிருப்போம் என அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/24575-2011-07-11-15-50-42.html

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நிபுணர்.. அறிஞ்சர்.. தோழர் அகூதா வந்து சொன்னால் தான் பிரியுது... அம்மாந்தோட்டை பெரிய கம்மாந்தொட்டையாக கிடக்கும் போலதெரியுது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.