Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டத்துக்கு வராவிடின் மீண்டும் தடுப்பு முகாம் செல்ல நேரிடும் – படையினர் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்துக்கு வராவிடின் மீண்டும் தடுப்பு முகாம் செல்ல நேரிடும் – படையினர் எச்சரிக்கை

Tuesday, July 12, 2011, 10:47

சிறீலங்கா, தமிழீழம்

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாவில் நேற்று (10-07-2011) நடாத்தப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு இளையோர்கள் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரால் மிரட்டி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்திற்கு தமிழ் இளையோர்கள், குறிப்பாக சிறீலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பலர் மிரட்டி அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமல் ராஜபக்ச கிளிநொச்சியில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் அந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் உட்பட வெறும் 6 பேர் மட்டுமே கலந்துகொண்டிருந்தமை நாமலை மிகவும் கோபம் கொள்ளச் செய்திருந்தது.

இதனையடுத்து சிறீலங்கா படையினருக்கு வழங்கிய இறுக்கமான உத்தரவின் அடிப்படையில் நேற்றைய கூட்டத்தை சிறீலங்கா படையினர் ஏற்பாடு செய்த அதேவேளை, விடுதலை செய்த முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியலை வைத்து அவர்களைக் கண்காணித்து வருவதுடன், இவ்வாறான கூட்டங்களிற்கும் அவர்களின் விருப்பம் இன்றி பலவந்தமாக அழைத்துச் செல்லுகின்றனர்.

சிறீலங்கா படையினரோ, காவல்துறையினரோ தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை ஒழுங்கு செய்வதோ அன்றி அவற்றில் கலந்துகொள்வதோ தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக இருக்கும் நிலையில், தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையினர் நிருவாகத்தை நடத்துவது மட்டுமன்றி இவ்வாறான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளுராட்சி தேர்தலை எப்படியாவது வென்றுவிட வேண்டும் எனக் கங்கணம்கட்டி நிற்கும் சிறீலங்கா அரசாங்கமும், அதன் அடிவருடிக் கட்சிகளும், தேர்தல் வாக்குகள் எண்ணும் அலுவலகத்தை வழமைக்கு மாறாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு மாற்றியிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன.

சிறீலங்கா படையினரது இந்த அடாவடித்தனங்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரியாதவாறு அங்கு படைத்துறை நிருவாகக் கட்டமைப்பும், கண்காணிப்பும் நிலவி வருவதுடன், மேற்குலக ஊடகங்கள் இந்தப் பிரதேசங்களுக்குச் செல்ல தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், விருப்பமின்றி அழைத்துச் செல்லப்பட்ட இளையோரின் கைத்தொலைபேசிகளையும் படையினர் பறித்து வைத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

14 இற்கும் மேற்பட்ட பேரூந்துகளில் முன்னாள் போராளிகள் கொண்டு சென்று இறக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரையும் ஒரு சில மணி நேரங்களுக்குள் அழைத்துச் செல்லும் அளவிற்கு, அவர்கள் பற்றிய விபரங்களை படையினர் வைத்திருந்து கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உருத்திரபுரம் கூழாவடியில் அச்சுறுத்தல் மத்தியில் திரண்ட மக்கள்

கிளிநொச்சி உருத்திரபுரும் கூழாவடிப்பகுதியில் இன்று (11-07-2011) நடாத்தப்பட்ட தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரின் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 500 பேர் வரையில் திரண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்;, சிறீலங்கா படையினரின் அட்டூழியங்கள்

மற்றும் அடாவடித்தனங்களைச் சுட்டிக்காட்டிதாக, கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சீருடை தரித்த சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினர், சீருடை தரிக்காத படைப் புலனாய்வாளர்கள் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்புக்கு மத்தியில் இவ் பரப்புரை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதே இடத்தில் கடந்த 6ஆம் (06-07-2011) சிறீலங்காவின் ஆளும் கட்சி நடாத்திய கூட்டம் ஒன்றில் 6 பேர் மட்டுமே கலந்து கொண்டமையும் அதில் பேசிய நாமல் ராஜபக்ச பல வாக்குறுதிகளை வழங்கியது பற்றிய செய்தியை நாம் வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

நன்றி : ஈழம் டெய்லி

http://www.tamilthai.com/?p=21546

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.