Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளால் தகர்க்கப்பட்ட தொண்டமனாறு பாலம் மீண்டும் திறக்கப்பட்டமை யாழ் அபிவிருத்தியின் முக்கிய பங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் தகர்க்கப்பட்ட தொண்டமனாறு பாலம் மீண்டும் திறக்கப்பட்டமை யாழ் அபிவிருத்தியின் முக்கிய பங்கு

12 ஜூலை 2011

மகிந்தவுக்கும் பசிலுக்கும் நன்றி கூறுகிறார் தயாமாஸ்ரர் - செவ்வி காணொளியாக இணைப்பு:-

http://youtu.be/5NW7Rl-4Uhk

புலிகளால் தகர்க்கப்பட்ட தொண்டமனாறு பாலம் மீண்டும் திறக்கப்பட்டமை யாழ் அபிவிருத்தியின் முக்கிய பங்கு –

மகிந்தவுக்கும் பசிலுக்கும் நன்றி கூறுகிறார் தயாமாஸ்ரர் - செவ்வி காணொளியாக இணைப்பு:-

ஓப்பரேசன் லிபரேசன் காலப்பகுதியான 1987ல் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்ட தொண்டமனாறு பாலம் மீண்டும் திறக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு பெரும் நன்மையாக அமைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் தற்போதய ஊடகவியலாளருமான தயாமாஸ்ரர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் மீள் அமைக்கப்பட்ட இந்த பாலம் ஏறத்தாள 26 வருடங்களின் பின் மதிப்பிற்குரிய அமைச்சர் பசில் ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொண்டமனாறு அச்சுவேலி பருத்தித்துறைக்கான போக்குவரத்தின் தூரங்கள் குறைக்கப்பட்டு மக்கள் இலகுவாகப் பயனம் செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது யாழ்ப்பாண அபிவிருத்தியின் முக்கிய பங்கு என தெரிவித்துள்ள தயா மாஸ்ரர் இதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மீள்கட்டுமானத்தில் அரசாங்கமும் ஜனாதிபதியும் கூடுதல் அக்கறைகாட்டியிருப்பதாக கூறுகிறார் பசில்

மோதல்களால் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் வடபகுதியே மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் அதன் மீள்கட்டுமானத்தில் அரசாங்கமும் ஜனாதிபதியும் கூடுதல் அக்கறை காட்டியிருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுமார் 30 வருடங்களின் பின்னர் தொண்டமனாறு அச்சுவேலி பிரதான வீதி முழுமையாக மக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பகுதிகளில் மீள்குடியேற்றங்கள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சிய இடங்களில் கூடிய விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறும்.

தொண்டமனாறு செல்வச்சன்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கடந்த காலத்தில் இவ்வீதியூடாகவே சென்றனர்.

இப்பகுதியில் விவசாயிகளின் நிலப்பரப்புக்குள் உவர்நீர் வருவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவூம் கூறினார்.

இதேவேளை கடந்த யுத்த காலத்தில் தென்மராட்சி தனங்கிளப்பு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் 271 குடும்பங்களைச் சேர்ந்த 850 பேர் நேற்று மீள்குடியமர்த்தப்பட்டனர்.

இவர்களுக்கான அனுமதிப் பத்திரத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வழங்கியதுடன், இப்பகுதிக்கான மின்சார இணைப்புக்களை வழங்குவதற்கான மின்கம்பங்கள் அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்துவைத்தார்.

பூநகரி பகுதிக்குச் செல்வதற்கான பஸ் தரிப்பிடமொன்றுக்கும் அமைச்சர் அங்கு அடிக்கல் நாட்டிவைத்தார். இந்த நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில்முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் தயா மாஸ்டரை சந்தித்து கலந்துரையாடினார்.

தொண்டமானாறு அச்சுவேலி வீதி திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இந்த விஜயத்தின்போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிறைவு செய்யப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்தார்.

வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி மற்றும் பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வூகளில் கலந்துகொண்டனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63968/language/ta-IN/article.aspx

சிங்களப் பயங்கரவாதிகளுக்கு இதைப் புனரமைக்க 16 வருடங்கள் எடுத்தது ஒருபுறமிருக்க, ஒருவருடத்துக்குள் இரண்டு தடவைகள் திறந்துவைத்து ஏமாற்றுகிறார்கள்.

மூன்றாவது திறப்புவிழா எப்போது? கடத்தல், கொலை, கப்பம் மன்னன் டக்லஸ் எங்கே?

புலிகளால் தகர்க்கப்பட்ட தொண்டமனாறு பாலம் மீண்டும் திறக்கப்பட்டமை யாழ் அபிவிருத்தியின் முக்கிய பங்கு

12 ஜூலை 2011

மகிந்தவுக்கும் பசிலுக்கும் நன்றி கூறுகிறார் தயாமாஸ்ரர் - செவ்வி காணொளியாக இணைப்பு:-

மகிந்தவுக்கும் பசிலுக்கும் நன்றி கூறுகிறார் தயாமாஸ்ரர் - செவ்வி காணொளியாக இணைப்பு:-

ஓப்பரேசன் லிபரேசன் காலப்பகுதியான 1987ல் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்ட தொண்டமனாறு பாலம் மீண்டும் திறக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு பெரும் நன்மையாக அமைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் தற்போதய ஊடகவியலாளருமான தயாமாஸ்ரர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63968/language/ta-IN/article.aspx

திடு திடுப்பென அடிவருடிகளூம் அரசியல் கைதிகளும் மகிந்தாவின் புகழ் பாடுவது அதிகரித்து வருகிறது. இதன் கருத்து அரசியல் கைதிகள் கொடூர சித்திரவதைக்கு உள்ளாகுகிறார்கள் போலுல்லது. இது ஒரு போர்க்குற்றம். இதை நாம் ஐ நா அறிக்கையில் சேர்க்கும்படி குரல் கொடுக்கவேண்டும். இல்லையேல் சித்திரவதை அளவு கடக்க அதிகரிக்கும்

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.