Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் குற்றச்சாட்டிற்கு மறுத்தான் போடுகிறார் யாழ்.கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் குற்றச்சாட்டிற்கு மறுத்தான் போடுகிறார் யாழ்.கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க:

[Wednesday, 2011-07-13 21:29:15]

தமக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுவதாக பிரசாரம் செய்து கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியல் பிழைப்பு நடத்திவந்த கூட்டமைப்பு தற்போது இராணுவத்தினருக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்த முயற்சிக்கின்றது இவ்வாறு யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டுகின்றார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது இராணுவத்தினர் திட்டமிட்டு இடையூறு விளைவிக்கின்றனர் என அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுவத்தினர் உண்மையாகவே இவ்வாறு அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனரா? கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களின் பதில் என்ன? எனக் கேட்டபோதே யாழ். இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் யாழ்.ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்தவை வருமாறு:

கடந்த மூன்று தசாப்தங்களாக சில தமிழ்த் தலைமைகள் பிரிவினவாதம் பற்றிப் பேசியே அரசியல் நடத்திவந்தன. அவர்களால் அக்காலப் பகுதிக்குள் ஒன்றும் செய்துகொள்ள முடியாமல் போனது. இதனை நன்கு உணர்ந்த மக்கள் இன்று அரசுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பீதி கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. இப்பொழுது அவர்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. எனவே, இராணுவத்தினர் அடாவடியில் ஈடுபடுகின்றனர் எனப் பொய்ப் பிரசாரம் செய்து அனுதாப வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது இராணுவம் இடையூறு விளைவித்தது எனக் கூறப்படுவதாவது அப்பட்டமான பொய். நாம் பாதுகாப்புக் கடமைகளிலேயே ஈடுபடுகின்றோம்.

நாட்டில் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது. நாடு அபிவிருத்திப் பாதையில் செல்கின்றது. இந்த நிலையில் இராணுவத்தினருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் எதையும் கூறி மக்களின் அனுதாபத்தைத் திரட்டமுயலலாம். என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46445&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.