Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பியினரின் அட்டகாசத்துக்கு இராணுவத்தினரும் பக்கபலம்: சரவணபவன் சரமாரிக் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பியினரின் அட்டகாசத்துக்கு இராணுவத்தினரும் பக்கபலம்: சரவணபவன் சரமாரிக் குற்றச்சாட்டு

[Thursday, 2011-07-14 11:34:04]

யாழ்.மாவட்டத்தில் நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெறும் என்று பிரதித் தேர்தல் ஆணையாளரும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் உத்தரவாதம் அளிக்க முடியுமா?இங்கு நடைபெறும் அரசியல் அடாவடித்தனங்களையும் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளையும் தடுத்து அவர்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்படுமா?

இவ்வாறு கேள்விக் கணைகளைத் தொடுத்தார் யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன். யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல் அராஜகச் செயல்கள் பாதுகாப்புப் படையினரின் பாரபட்சமான நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல்கள் ஆணையாளரை நேரடியாகச் சந்தித்து முறைப்பாடு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்பின் பேரில் பிரதித்தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் யாழ்ப்பாணத்துக்கு அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று யாழ். செயலகத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருந்தார்.

யாழ். மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இராணுவ உயர் அதிகாரிகளும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் யாழ். மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதியும் கலந்துகொண்டனர். ஆளும்கட்சி வேட்பாளர்களான ஈ.பி.டி.பி. பிரதிநிதிகளும் அங்கு வந்திருந்தனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் கூட்டமைப்பினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களை எழுத்து மூலமாகச் சமர்ப்பித்தார்.

அதேவேளை, அரச அதிபரும் பிரதித் தேர்தல் ஆணையாளரும் வன்முறைகள் அற்ற சுதந்திரமான தேர்தலை நடத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.அரச அதிபரின் கூற்றை வரவேற்ற சரவணபவன், ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக எம்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறை சம்பவங்களை தேர்தல்கள் ஆணையாளர், அரச அதிபர், ஜனாதிபதி, பொலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கும் செயலகம் என அனைத்துத் தரப்பினரிடமும் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. நான் நேரடியாகவே பாதிக்கப்பட்டவன். பொலிஸாரும் பாரபட்சமாகவே செயற்படுகின்றனர். ஈ.பி.டி.பியினரின் அட்டகாசம் ஓயவில்லை. குறிப்பாக தீவகப் பகுதிகளுக்கு எங்களால் செல்லவும் முடிய வில்லை. வேட்பாளர்கள் அச்சு \றுத்தப்படுகின்றனர். ஈ.பி.டி.பி.யினரின் இச்செயலுக்கு இராணுவத்தினரும் பக்கபலமாக இருக்கின்றனர் என நேரடியாகவே குற்றம் சுமத்தினார் சரவணபவன்.

இதற்குப் பதிலளித்த யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியான திருமதி இமெல்டா சுகுமார், முறைப்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது. தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.நீங்கள் அரசாங்க அதிபர் மட்டுமல்ல தெரிவத்தாட்சி அதிகாரியும் கூட. தேர்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கூடிய அனைத்து அதிகாரங்களும் உங்களுக்கே உண்டு. நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் சரவணபவன். இதனை ஏற்றுக்கொண்ட அரச அதிபர் இவ்விடயத்தில் தான் பக்கசார்பின்றி நேர்மையாகவே செயற்படுவதாகவும் தனக்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். நான் அரச அதிபராகப் பெறுப்பேற்று நடத்தும் முதலாவது தேர்தல் இது.

இதனை வன்முறைகளற்ற நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலாக நடத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அச்சம், பீதி இல்லாமல் அனைத்து வாக்காளர்களும் தாம் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிலைமை ஏற்பட வேண்டும். இதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அரச அதிபர் கேட்டுக்கொண்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46463&category=TamilNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.