Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை விற்று அரசியல் நடத்தும் இந்திய தலைவர்கள் - புலம்பும் எம்.பி.அஸ்வர்..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விற்று அரசியல் நடத்தும் இந்திய தலைவர்கள் - புலம்பும் எம்.பி.அஸ்வர்..?! ஈழதேசம் செய்தி..!

ஈழம் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கோசமிடும் இந்திய அரசியல் தலைவர்கள்...? ஒருவேளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை சொல்கிறாரோ, சொல்லட்டும் சொல்லிவிட்டுப் போகட்டுமே, தற்பொழுது இலங்கைப் பிரச்சனைகளை விற்று அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆளும் கட்சியின் எம்.பி. அஸ்வர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் நான் தமிழகம் சென்று அங்கு உள்ள காயல் பட்டினத்திற்கு சென்றிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள அரசியல் தலைவர்கள் இலங்கைப் பிரச்சனை தொடர்பில் பேசுகையில் ஈழம் மலர்வது வெகு தொலைவில் இல்லை என்று பேசினர். அதாவது அங்கு தேர்தல் முடிந்த பின்னரும் கூட இவ்வாறு ஒரு எண்ணம் கொண்டு பேசுகின்றனர் என்றார்.

தேர்தல் வரைக்கும் ஈழம் குறித்து பேசுவார்கள், பிறகு ஈழமா..? அப்படி ஒரு படம் இருந்தால் சி.டி. கொடுங்கள் என்பார்கள், என்பதை எவ்வளவு நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள் இலங்கை அரசியல்வாதிகள். முன்பு கூட ஜெயலலிதா அம்மையார் பேசினார் எம்.பி. தேர்தலில், அப்புறம் தமிழ் குடிதாங்கி தொடங்கி தமிழகத்து தொல்காப்பியர் திருமா ( இவ்வாறு ஒரு பட்டதை சமீபத்தில் வழங்கி பேசினார் பழனிசாமி என்ற பேரா அன்பழகன்..! ) தமிழகத்து தொல்காப்பியர் என்றால் என்ன அர்த்தம். அர்த்தமும் கிடையாது ஒரு புடலங்காயும் கிடையாது, யாருமே பேச கூப்பிட மாட்டார்கள் இந்த பேரா.அன்பழகனை, நம்ம தென்னகத்து தொல்காப்பியர் கூப்பிட்டவுடன் கொடுத்து விட்டார் பட்டதை, தொல்காப்பியரை கேவலப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் பிறகு வள்ளுவர் என்ன..? காப்பியர் என்ன..? அகத்தியர் என்ன..!

தமிழ் மொழியை கண்டுபிடித்த தி.மு.க.வினர் தேர்தலில் சொன்னதும், ஆட்சிக்கு வந்ததும் ராஜபக்சேவுக்கு வெண்சாமரம் வீசியதும் கண்டு இந்த அஸ்வர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். இதில் ஒன்றுமே சொல்லாமல் இருந்த வலது இடது கம்யூனிஸ்ட்கள் இருவரில் வலது கம்யூனிஸ்ட் கட்சி தனது கட்சி மாநாட்டில் தீர்மானம் போட்டு, பிறகு இந்திய முழுதும் போர்க்குற்றம் புரிந்த நாடு இலங்கை என்று பிரச்சாரம் செய்தார்கள். இடது கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை இலங்கை குறித்து கள்ள மௌனம் கடைப்பிடிக்கின்றனர். எப்படியெனில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளைப் போலவே, இவர்களுக்கும் ஒரு தெளிவான பார்வை உண்டு வெளிநாட்டு கொள்கையில். பா.ஜ.க. கூட தமிழகத்தில் ஒரு நாக்கும் மற்ற மாநிலங்களில் வேறு வேறு நாக்கும் கொண்டு பேசுபவர்கள்.

இந்த இடது கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்கெல்லாம் இந்த காங் ஐ மற்றும் பா.ஜ.க. பார்ப்பனியத்தில், பார்ப்பனியத்திற்கு இடையூறு வருகிறதோ அப்போது பரமாத்மா போல ஓடோடி வந்து எச்சரிக்கை செய்வார்கள் இந்த இருவரையும். அந்த அளவிற்கு பார்ப்பனியத்தை கட்டிக் காப்போம் என்று மார்க்ஸ், லெனின் மீது சத்தியம் செய்தவர்கள் இந்த இடதுகள். சரி அஸ்வர் மேட்டருக்கு வருவோம்.

ஜெயலலிதா அம்மையார் இந்த முறை சட்டசபையில் தீர்மானம் போட்டு விட்டாரே, இந்த தீர்மானத்தால் ஈழம் கிடைத்து விடுமா என்று புரட்சி கேள்வி கேட்கும் 'வினவு' க்ரூப்புக்கு ஒன்றை சொல்லிக் கொள்வோம். இந்த தீர்மானத்தின் எதிர்வினை தான் 'இலங்கையின் கொலைக்களம்' இந்திய டி.வி.க்களில், வேறு வழியே இல்லாமல் நிருபமா சொல்கிறார், தமிழகத்தின் உணர்வுபூர்வ உரிமைகள் என்று. மெல்ல இந்திய ஆட்சியாளர்களின் இலங்கை வெளியுறவு குறித்து பேச ஆரம்பித்து விட்டார்கள், இவையெல்லாம் இந்த தீர்மானத்தின் உடனடி விளைவுகள். தமிழ் நெட் கூறுவது போல ஜெ அம்மையார் ஏன்..? இந்திரா காந்தி பங்களாதேஷ் நாடு உருவாவதற்கு பாடுபட்டதைப் போல, ஈழம் அமைக்க பாடுபடக் கூடாது என்று கேட்டிருக்கிறார்கள்.

நாளை நடக்கலாம், ஜெ அம்மையார் இந்தியா முழுதும் பரப்புரை செய்யலாம், ஈழம் ஒன்று தான் தீர்வு என்று. ஈழம் அமைக்கும் பணியில் ஒரு மைல் கல்லாகக் கூட இருக்கலாம். உலகத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெறலாம்.

தமிழ் பேசும் த.தே.கூ அமைப்பினர் தவிர அஸ்வர் எம்.பி. மற்றும் ஏனைய கட்சிகள் மகிந்தா ராஜபக்சே எரியும் எலும்புத் துண்டுக்கு தன் ஆயுளை அடகு வைத்தவர்கள், தன் எஜமானனுக்கு வாலை வெட்டிக் கொண்டவர்கள். இவர்கள் குரைப்பிற்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. போகட்டும் இவையெல்லாம்..! காயல்பட்டினத்தில் இந்த அஸ்வர் எம்.பி. யை கூட்டி வந்து கூட்டம் போட்டவர்களை எதைக் கழட்டி அடிப்பது..? அது எந்தக் கூட்டம் என்றாலும்..!

சங்கிலிக்கருப்பு

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.