Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசு மீது ஐசிஜி கடும் விமர்சனம்

Featured Replies

இலங்கை அரசு மீது ஐசிஜி கடும் விமர்சனம்

பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் இண்டர்னேஷனல் க்ரைஸிஸ் குரூப் என்ற சர்வதேச நெருக்கடிகள் குறித்த அமைப்பு இலங்கை அரசின் மூர்க்கத்தனம் மற்றும் கருத்து மாறுபடுபவர்களை சகித்துக்கொள்ளாத தன்மை காரணமாக அங்கு மீண்டும் மோதல் எழக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறுகிறது.

இலங்கை அரசு தமிழ்ப் புலிகளை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோற்கடித்ததிலிருந்து,சிறுபான்மை தமிழர்களின் குறைகளை அங்கீகரிக்கவோ அல்லது தீர்க்கவோ தவறிவிட்டது என்று அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஒரு புதிய அறிக்கையில் கூறியிருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்துள்ளதன் பின்னணியில் அங்கு பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச நெருக்கடிகள் பற்றி ஆராயும் குழுவான ஐசிஜி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், பரந்துபட்ட அளவிலான விமர்சனங்களை இலங்கை அரசின் மீது முன்வைத்துள்ள ஐசிஜி, கடந்தகால முரண்பாடுகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதை விட, இலங்கை அதன் கொள்கைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நல்லிணக்க முயற்சிகளிலிருந்து தொலைவிலேயே தள்ளி வைத்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளது.

'வெற்றிக் களிப்பு மனோபாவம்'

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், வெற்றிக்களிப்புடன் மமதை மனோபாவத்துடனேயே இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள சர்வதேச நெருக்கடிகள் பற்றி ஆராயும் குழு, சிறுபான்மை மக்கள் அவர்களின் எதிர்காலம் பற்றிய தீர்மானங்களின் போது ஒதுக்கப்படுவதாகவும், தேர்தல்களில் மோசடிகள் செய்து, சிவில் சமுகத்தினர் வாய்கள் கட்டப்பட்டு மௌனிகளாக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்முறைகளிலும் மோசடிகளிலும் ஈடுபடும் தமிழ் துணைக் குழுக்களைப் பயன்படுத்தி, முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகள் நசுக்கப்பட்டு வருவதாக பிரசல்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் ஐசிஜி அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் நீண்டகாலம் நடந்த போரை, வெறுமனே மோசமான பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்று மட்டும் கருதாமல், அதனை அநீதி, அடக்குமுறைகளால் உருவான ஒரு பெரும் இன முரண்பாட்டின் பகுதி எனவும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சர்வதேச நெருக்கடிகள் பற்றி ஆராயும் குழுவின் நிலைப்பாடு.

அரசாங்கம் நிராகரிப்பு

இதேவேளை, இலங்கை தொடர்பில் ஐசிஜி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை ‘முட்டாள் தனமானது’ என்று நிராகரித்துள்ளார் அரசாங்க தரப்பு நடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மகிந்தவின் ஆலோசகருமான ரஜீவ விஜேசிங்க.

அண்மைக் கால தேர்தல்கள் எல்லாம் நியாயமாக நடந்ததாகவே பொதுவாகப் பார்க்கப்படுவதாகவும், போர்க்காலத்தில் நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் கொடூரங்கள் பற்றி வலியுறுத்துகின்ற ஐசிஜி, பழைய ஏற்பாட்டு சித்தாந்தங்களுடன் பழிக்குப் பழி என்ற தோரணையில் செயற்படுவதாகவும் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐசிஜி வெளியிட்டுள்ள அறிக்கை, இலங்கையின் தற்போதைய நிலைமையைப் பிரதிபலிப்பதாகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து

அரசியல் நல்லிணக்க முயற்சிகளில் இலங்கை அரசின் அக்கறையின்மை பற்றிய ஐசிஜியின் கருத்துப் பற்றி தமிழோசைக்கு செவ்வியளித்த சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளும் காலத்தை இழுத்தடிக்கும் விதமாகவே இருப்பதாகக் கூறினார்.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் இந்தப் பேச்சுக்களை நடத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனால், அரசாங்கத்துக்கும் தமது கட்சிக்கும் இடையில் அரசியல் தீர்வுகள் குறித்து கருத்தொற்றுமைகள் ஏற்பட்டுவருவதாகவும், பல முக்கிய விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது.

ஆளுந் தரப்புக்குள்ளேயே நிலவுகின்ற முரண்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதாகவும், காலத்தை இழுத்தடிக்காமல் தீர்வுக்கு வருமாறு அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110719_icgonlanka.shtml

--------------------------------------------------------

1. இலங்கை சுமுகமாக்கலில் இருந்து தள்ளி போகின்றது - சர்வதேச நெருக்கடிகள் அமைப்பு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=89065

2 :இலங்கையில் யதார்த்தமான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை – ICG: http://www.yarl.com/forum3/index.php?showtopic=89122.

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த ஞானம்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கடந்த ஞானம்.

இன்னும் பிந்தேல்லை எண்டு நான் நினக்கிறன் :rolleyes:

  • தொடங்கியவர்

காலம் கடந்த ஞானம்.

இந்த அமைப்பு ஊடகவியாலளர் தொடங்கி அரசியல்வாதிகள் வரை கொள்கை வகுப்பதில் (புலிகளின் தடைக்கும் இவர்கள் அறிக்கைகள் காரணமாக இருந்தன) முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த அறிக்கையை வைத்து என்ன செய்யலாம் என ஆராய்ந்து எமது மக்களின் விடிவுக்கு பாவிப்பது காலத்தின் தேவை.

உதாரணத்திற்கு இந்தோனேசியாவில் இருந்து நியூசிலாந்திற்கு ஏதிலிகளாக வந்துள்ளவர்களுக்கு ஆதரவு சேர்க்க பாவிக்கலாம்.

இந்த அறிக்கையை அந்த நாட்டு பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மனித ஆர்வலர்கள் என பலருக்கும் அனுப்பி இதன் மூலம் தாயக நிலைமைகளை அவர்கள் பார்வைக்கு கொண்டுவரலாம்.

இது அவர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.