Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் நடைபெற கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் நடைபெற கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

[Wednesday, 2011-07-20 11:31:06]

சிறிலங்காவில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களில் உங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் வாக்களிக்குமாறு கோருமாறு கனடியத் தமிழர்கள் அனைவரையும் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகின்றது. எதிர்வரும் ஜுலை மாதம் 23ம் திகதி சிறிலங்காவில் 65 உள்ளுர் அரசாங்கத் தேர்தல் மாவட்டங்களில் வாக்கெடுப்பு நடைபெற ள்ளது. இது நீதியானதாகவும் சுதந்திரமானதாகவும் அமைய வேண்டியது அவசியமானதாகவும் உள்ளது.

மிரட்டல்கள் வன்முறை மற்றும் மோசடிகள் மூலம் தமிழர்களின் ஜனநாயக வாக்குரிமை பாரிய நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை அறிவுறுத்தும் CAFFE போன்ற குழுக்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி இராணுவமும் காவல்துறையும் இணைந்து வேட்பாளர்களைத் தொடர்ச்சியாகப் பயமுறுத்தி வருவதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளடக்கிய குறிப்பிட்ட சில கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரைகளுக்கு முட்டுக்கட்டைகளை இட்டு வருகின்றனர். இலங்கை அரசாங்கம் இத்தகைய குற்றச்சாட்டுக்களை வெறுமனே தட்டிக்கழித்து வருவது மக்களின் ஆணையை வெளிக்கொணரக்கூடிய சுதந்திரமான நீதியான வாக்கெடுப்புக்கு நிச்சயமாக வழி கோலாது எனக் கனடியத் தமிழர் பேரவை நம்புகின்றது.

நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையிலும் சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் மாத்திரமே வன்முறைச் சம்பவங்களும் மிரட்டல்களும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும் கூட்டங்களின் உள்ளே இறந்த நாய்களின் துண்டங்கள் வீசப்பட்டு வருவதாக பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பவரும் பெண்களின் அரசியல் கல்லூரியின் இயக்குனருமான நிமல்கா பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று சிறிலங்காவில் வாழும் தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாசைகளை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயமுறுத்தும் நோக்கில் நடாத்தப்படும் இத்தகைய செயற்பாடுகளை கனடியத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது.

தேர்தல்களை வன்முறையற்ற ரீதியில் மிரட்டல்களுக்கும் மோசடிகளுக்கும் இடமளிக்காத வகையில் எதிர்கொண்டு வாக்களிக்கும் சந்தர்ப்பம் சிறிலங்காவில் வாழும் தமிழ் சமூகத்துக்கு வழங்கப்படவேண்டும் என கனடியத் தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளரான டேவிட் பூபாலப்பிள்ளை கூறினார். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு தமது நாட்டில் இந்த அடிப்படை உரிமையை சரியாகப் பேணுவதற்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவது பன்னாட்டு சமூகத்தின் கடப்பாடு ஆகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வன்முறைகள், வாக்கு மோசடிகள், சீர்கேடுகள் அற்று தமது சனநாயக உரிமையைச் சரிவரச் செய்வதற்கு நீதியான தேர்தல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனக் கனடியத் தமிழர் பேரவை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு 416-240-0078 என்னும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46796&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.