Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லா சிங்களவர்களும் கெட்டவர்கள் அல்ல - எல்லா தமிழர்களும் புனிதர்களும் அல்ல: இந்திய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சிங்களவர்களும் கெட்டவர்கள் அல்ல - எல்லா தமிழர்களும் புனிதர்களும் அல்ல: இந்திய ஊடகம்

[ புதன்கிழமை, 20 யூலை 2011, 09:05 GMT ] [ நித்தியபாரதி ]

'கொழும்பு' சுயநலம் மிக்க ஒரு நாடாக விளங்குகின்றது. தன்னைப் பற்றிய சாதகமான, நல்ல விடயங்கள் வெளிவரவேண்டும் என்பதையே சிறிலங்கா விரும்புகின்றது. மாறாக தன் தொடர்பான விமர்சனங்களை ஏற்பதற்கு அது தயாராக இருக்கவில்லை.

இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Weekend Leader இணைய ஊடகத்தில் அதன் ஆசிரியர் P C Vinoj Kumar எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

எல்லா சிங்களவர்களும் கெட்டவர்கள் அல்ல. எல்லா தமிழர்களும் புனிதர்களும் அல்ல. ஆனால், விடுதலைப் புலிகளிற்கு எதிராக 2008-2009 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா அரச படையில் பங்கு கொண்ட எல்லா இராணுவ வீரர்களும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.

தனது சொந்த நாட்டு மக்களிடம் சிறிலங்கா இராணுவம் எவ்வாறு கொடூரமாக நடந்து கொண்டது என்பதை தமிழரல்லாத ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்வதற்கு இந்தப் பின்னணித் தகவல் மிகவும் அவசியமானதாகும். சிறிலங்காவில், சிங்கள மக்களைப் போல தமிழர்கள் நடாத்தப்படுவதில்லை.

தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்திற்குள் உள்வாங்கப்படவுமில்லை. சிறிலங்கா இராணுவப் படையானது முற்று முழுதாக அதாவது 100 வீதமும் சிங்கள இனத்தைச் சேர்ந்த வீரர்களைக் கொண்டுள்ளது. உண்மையில் சிறிலங்கா இராணுவப் படைக்குள் தமிழ் வீரர் ஒருவரேனும் உள்ளாரா?

2007 ல் அப்போது சென்னையில் கடமையாற்றிய சிறிலங்கா பிரதி உயர் ஆணையாளர் பி.எம்.அம்சாவுடன் நான் நேர்காணல் ஒன்றை மேற்கொண்ட போது, சிறிலங்கா இராணுவப் படைக்குள் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள்? என்ற எனது கேள்விக்கு, அவர் பதில் தர மறுத்துவிட்டார்.

அப்போது நான் Tehelka என்ற சஞ்சிகையின் ஊடகவியலாளராகக் கடமையாற்றினேன். சிறிலங்காத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பல ஆண்டு காலமாக செய்திகளைத் தொகுத்து வழங்கியவன் என்ற வகையில், சிறிலங்காவில் வாழும் சிங்களவர்களிடமிருந்து தமிழ் மக்கள் பல வழிகளிலும் இனவொதுக்கலுக்கு உள்ளாவதை என்னால் அவதானிக்க முடிந்தது.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதால் உடனடியாக கொழும்பிற்குச் சென்று கள நிலவரம் தொடர்பாக ஆராய்ந்து தகவல் அனுப்புமாறு ஏப்ரல் 2009ல் Tehelka வின் ஆசிரியரான கரிண்டர் பவஜே [Harinder Baweja, Tehelka’s Editor] என்னிடம் கேட்டுக்கொண்டார்.

நான் சிறிலங்கா நுழைவிசைவைப் பெற விண்ணப்பித்த போது அதனை நான் பெற்றுக்கொள்வதற்கு ஒரு வாரம் வரை அலைய வேண்டி ஏற்பட்டது.

கொழும்பிலுள்ள தமது வெளியுறவு அமைச்சின் செயலகத்தைத் தொடர்பு கொண்டு எனது நுழைவிசைவுக்கான கால தாமதம் தொடர்பாகக் கேட்குமாறு சென்னையிலிருந்த சிறிலங்காத் தூதரக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

நான் இது தொடர்பாகப் பல அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோதம் எனக்கு எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கரிண்டரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே பல இந்திய ஊடகவியலாளர்கள் கொழும்பைச் சென்றடைந்து விட்டதாகவும், ஆனால் எனக்கான நுழைவிசைவு மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும் அவரால் அனுமானிக்க முடியவில்லை.

பல இந்திய ஊடகவியலாளர்களுக்கு கொழும்பு செங்கம்பள வரவேற்பு அளித்தமை உண்மையாகும். ஆனால் இவர்களில் பெரும்பான்மையானோர் சிறிலங்கா இராணுவத்தின் முன்னரங்க நிலைக்குச் சென்று வந்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் உலங்குவானூர்திகளில் பயணம் செய்து களமுனைகளைப் பார்வையிட்ட இந்த ஊடகவியலாளர்கள் அங்கே இராணுவ அதிகாரிகள் தெரிவித்த கள நிலவரம் தொடர்பான கருத்துக்களை மட்டும் வெளியிட்டனர்.

சிறிலங்கா தொடர்பான விடயங்கள் தொடர்பாக நான் செய்திகளைத் தொகுத்து வழங்கும்போது அவை எப்போதும் உண்மைத்தன்மையானதாகவே இருக்கும். நான் தமிழ்ப் புலிகள், சிறிலங்கா இராணுவத்தினர் ஆகிய இரு தரப்புக்கள் தொடர்பான உண்மைத் தன்மை வாய்ந்த எவ்வித பக்கச் சார்பின்றிய செய்திகளை தொகுத்து வழங்கினேன்.

எனது பக்கச்சார்பற்ற செய்திகள் சிறிலங்கா அதிகாரரிகள் மத்தியில் என் தொடர்பான கசப்பை ஏற்படுத்தியிருந்தது. எனது நுழைவிசைவு மறுக்கப்பட்டதற்கான காரணம் இதுதானா? அல்லது நான் ஒரு தமிழன் என்பதால் மறுக்கப்பட்டதா?

'கொழும்பு' சுயநலம் மிக்க ஒரு நாடாக விளங்குகின்றது. தன்னைப் பற்றிய சாதகமான, நல்ல விடயங்கள் வெளிவரவேண்டும் என்பதையே சிறிலங்கா விரும்புகின்றது. மாறாக தன் தொடர்பான விமர்சனங்களை ஏற்பதற்கு அது தயாராக இருக்கவில்லை.

சிறிலங்காவானது அதன் பூகோள அரசியல் ரீதியான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் அமைந்திருப்பது உள்ளடங்கலாக, அதன் உள்நாட்டு வளங்கல் மீது தமது அதிக கவனத்தைக் கொண்டுள்ள சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் செல்லப் பிள்ளையாக சிறிலங்கா மாறியுள்ளது.

இவ்விரு நாடுகளின் நிதி உதவியிலேயே சிறிலங்கா தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மிகக் கொடுமைக்கார எஜமானி போன்று காணப்படும் சிறிலங்காவானது தற்போது மனிதப் படுகொலையைக் கூட செய்யக் கூடிய ஒரு கொடுமைக்கார எஜமானியாக சிறிலங்கா விளங்குகின்றமை தற்போது நம்பக்கூடியதாகவுள்ளது.

ஆனால் சிறிலங்காவானது தனது நட்பு நாடுகளின் தன் மீதான செல்வாக்குத் தொடர்பாக தப்புக் கணக்கொன்றைப் போட்டுள்ளது. இதன் மூளையானது எப்போதும் மங்கலானதாகவே இருந்துள்ளது.

சிறிலங்காவைப் பாதுகாக்கின்ற விடயத்தில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் ஒரு எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது என்பதை இது விளங்கிக் கொள்ளத் தவறியுள்ளது.

கொழும்பால் மேற்கொள்ளப்பட்ட பல்வெறு யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஆவணமாக, பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் அமைந்துள்ளது.

இந்த ஆவணப்படத்தில், சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிப்பகுதியில் சிங்கள இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கர யுத்த மீறல் சம்பவங்களை உள்ளடக்கிய உண்மைக் காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் காட்சிகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை யுத்த மீறல்கள் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் கொண்டு வந்து நிறுத்தப் போதுமானதாகும்.

சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படத்தில், பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக உள்ள தமிழ்ப் பெண்களின் உடலங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

"என்னைச் சுற்றி ஒருவரும் நின்றிருக்காவிட்டால் உண்மையில் நான் அவளின் மார்புகளை வெட்டியிருப்பேன்" என நிர்வாணக் கோலத்தில் கிடந்த அந்த தமிழ்ப் பெண்ணொருவரின் உடலைச் சுற்றி நின்ற வக்கிரம்மிக்க சிறிலங்கா இராணுவ வீரரின் ஆழமான மன உணர்வை லியூட் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

நாட்கள் கடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அனைத்துலக சமூகமானது சிறிலங்கா மீதான தனது பொறுமையை இழந்து வருகின்றது.

"சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது முடிவிற்கு வந்ததிலிருந்து, அங்கு இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் முகங்கொடுக்க முன்வரவேண்டும் என பிரிட்டன் அரசாங்கம் சிறிலங்காவைக் கோரி நிற்கிறது.

இதனை சிறிலங்கா செய்யத் தவறும் பட்சத்தில், சிறிலங்கா தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கான அழுத்தங்களை அனைத்துலக சமூகமானது பிரயோகிக்கும்" என சனல் 04 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காணொலியைப் பார்த்த பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் அலிஸ்ரெயார் பேற் பதிலளித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதில் The Weekend Leader ஏனைய இந்திய ஊடகங்களுக்குள் முதன்மை நிலையிலுள்ள ஒரு ஊடகமாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் வல்லுனர் குழுவானது சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்ட பின்னர், நாம் "மகிந்த ராஜபக்சாவின் தலைவிதியைத் தீர்மானிப்பதற்கான அடித்தளம் இடப்படுகிறது" என்ற தலைப்பில் ஆக்கமொன்றை பிரசுரித்திருந்தோம்.

இதேபோன்று தமிழர்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கும் வரை சிறிலங்கா விடயம் தொடர்பாக நாம் தொடர்ந்தும் எமது ஊடகத்தில் முக்கியத்துவம் கொடுப்போம்.

http://www.puthinappalakai.com/view.php?20110720104320

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இந்தியர்களும் ௬ டாது என்று இல்லை காங்கிரசு காரர்களும் சோனியாவுக்கு சேவகம் செய்யும் சில மலையாளிக்களும்தான் ௬டாதவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.