Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தின் சாட்சிகளாக இருக்கும் கிளிநொச்சி மக்கள் தர்மத்தை நிலைநாட்ட பாடுபட வேண்டும்

Featured Replies

யுத்தத்தின் சாட்சிகளாக இருக்கும் கிளிநொச்சி மக்கள் தர்மத்தை நிலைநாட்டுவதற்குப் பாடுபட வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்

உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழர்கள் இந்நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாது; பிரதம மந்தியாக வர முடியாது; சபாநாயகராக வர முடியாது. நாங்கள் யாராக வர முடியும் என்றால், வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வரலாம்; எமது பிரதேசத்தில் நகரசபைத் தலைவராக வரலாம்; மாநகர சபை முதல்வராக வரலாம் அல்லது பிரதேச சபைத் தலைவராக வரலாம். இத்தகை பதவிகளுக்கான தேர்தலில் மாத்திரம் தான் நாம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்.

ஆனால், தெற்கில் இருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கட்சிதான் இவற்றைக்கூட ஆளவேண்டுமாம்.

இதற்காகவா நாங்கள் அறுபத்தி மூன்று வருட காலம் அஹிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களை நடத்தி மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொடுத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கை, கால்களை இழந்து ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆகியுள்ளனர்? தமிழ்ப் பெண்களில் பலருக்கு இன்று நெற்றியில் பொட்டில்லை; கழுத்தில் தாலியில்லை. கணவன் இருக்கின்றாரா இல்லையா என்பது கூடத் தெயாமல் பலர் இருக்கின்றனர். இத்தகைய நிலையைத் தோற்றுவித்த ஆட்சியாளர்கள் இலங்கையில் இனி இரண்டு கட்சிகள் தான் இருக்க முடியும். ஒன்று, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு; மற்றது ஐக்கிய தேசியக் கட்சி என்று சொல்கிறார்கள்.

தமிழனுக்கு கட்சி தேவையில்லை.

தாங்கள் தான் ஆளவேண்டும் என்கிறார்கள்.

இது வரை காலம் அடிமைகளாக வாழ்ந்தது போல் இனியும் வாழவேண்டுமாம்.இதனை நாம் ஒவ்வொருவரும் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இன்று காலை எழுபத்தைந்து வயதையுடைய ஒரு ஐயா என்னை சந்தித்தார். ஏ9 வீதியின் ஓரமாக பரந்தன் சந்தியிலிருந்து அந்த வீதியில் மத்திய தர வகுப்பினருக்கு வழங்கப்பட்ட காணிகளில் 1995-2005 வரையிலான காலப் பகுதிவரை பயிர்ச் செய்கை மேற் கொள்ளப்படவில்லை என்று காரணம் கூறி, அந்தக் காணிகளை அரசாங்கம் அபகரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்தக் காலப் பகுதியில் இந்த கிளிநொச்சி மாவட்டம் என்ன நிலையில் இருந்தது. என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. இந்த நாட்டின் அதியுயர் பதவியில் இருப்பவரும் அவரது குடும்பத்தினரும் இங்கு வந்து தையல் மெசின், சைக்கிள் மற்றும் ஏனைய பொருட்களைக் கொடுத்து விட்டு காலா காலமாக நாம் உருண்டுபிரண்டு விளையாடி, உழுது விதைத்து அறுவடை செய்து ஆண்டு அனுபவித்து வந்த எமது மண்ணை அபகரிக்கப் பார்க்கிறார்கள்.

இன்று இந்த அரசாங்கத்திற்கு ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை ஏ9 வீதி யின் இரு மருங்கிலும் உள்ள காணிகளின் மீதுதான் முழுக் கவனம் இருக்கின்றது.

நூற்றுக்கம் மேற்பட்டவர்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகள் பறிபோகப் போகின்றன. எப்படியாவது தடுத்துநிறுத்துங்கள்.

இதனை மேல் மட்டங்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று என்னிடம் ஆதங்கப் பட்டுக் கொண்டார்.

எனவே, இந்த மண்ணைக் காப்பதற்கு இப்பிரதேசத்தின் ஆட்சியதிகாரம் எங்களுடைய கைகளில் தான் இருக்கவேண்டும். நாம் மதவாச்சியிலும் அனுராதபுரத்திலும் போய் ஒரு நகர சபை, பிரதேச சபை உறுப்பினருக்கான தேர்தல்களில் போட்டியிட முடியாது. அவர்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

ஆனால், இன்று எங்களுடைய புத்திஜீவிகளைக் கொண்டும் எங்களுடைய அரசியல் போலிகளைக் கொண்டும் எமது பிரதே சங்களின் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக் கின்றனர். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வன்னி மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து நகரசபை மற்றும் பிரதேச சபைகளையும் நாங்கள் கைப்பற்றினோம்.

நீங்கள் இப்பிரதேசத்தில் யுத்த மழையில் நனைந்து தோய்ந்து எழுந்துவந்தவர்கள்.எனவே, உங்களுக்கு யுத்தத்தின் கொடூரம் பற்றியும் அரசியல் நிலைவரம் பற்றியும் அதிகம் சொல்லத் தேவையில்லை. சனல்4 ஒருபுறம் தருஸ்மனின் அறிக்கை மறுபுறமாக இந்த அரசாங்கத்தின் கழுத்தை நெரித்துள்ளன.

எனவே இத்தேர்தல், யுத்த களத்தில் சாட்சிகளாக நின்ற நீங்கள் என்ன மனோ நிலையில் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப்படுகின்ற தேர்தலாகும்.

தர்மத்தின் சாட்சிகளாக நீங்கள் இருக்கும் போதே ஜனாதிபதி, ஒரு பொதுமகன் கூட யுத்தத்தில் மரணிக்கவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.

ஆகவே, கவனக்குறைவாகவோ அல்லது அக்கறையின்றியோ நீங்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதனைச் சொல்கின்றேன். நாம் வெற்றிலைக்கு அளிக்கும் வாக்கு ஜனாதிபதியின் கூற்றை மெய்ப்பிப்பதற்கே உதவும் என்பதை நாம் எம் மனத்தில் ஆழப்பதித்துக்கொள்ள வேண்டும்.

அதற்காகவே அரசாங்கம் இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்களை இப்பகுதிக்கு அனுப்பி முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு அனுப்பியுள்ளது.

இத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால், அதனை தமிழ் மக்கள் பெரும்பான்மை யினரின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றும், தங்களால் தான் இந்த வெற்றி பெறப்பட்டது என்றும் மார்தட்டப் போவதுடன் எமது கல்லறைகளின் மீது மற்று மொரு வெற்றிவிழாவையும் கொண்டாடும். அதுமட்டுமின்றி, தனது செல்லப் பிள்ளைகளான டக்ளஸ் போன்றவர்களையும் ஓரங்கட்டிவிடும்.

எனவே, நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து எமது வரலாற்றுக் கடமையைச் செய்வேண்டும் அதற்காக எதிர்க்கட்சியில் போட்டியிடுகின்ற எமது உறவுகளை எமது பக்கம் மாற்றி யெடுத்து, பெரும்பான்மையினக் கட்சியின் வெற்றிக் கனவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

இதுவே யுத்தத்தில் மரணித்த எம் உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அத்துடன், தர்மம் நிலைநாட்டப்படுவதற்கு நாம் அளிக்கும் பங்களிப்பாகவும் இருக்கும் என்றார்.

http://akkinikkunchu.com/new/

யுத்தத்தின் சாட்சிகளாக இருக்கும் கிளிநொச்சி மக்கள் தர்மத்தை நிலைநாட்டுவதற்குப் பாடுபட வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்

அவர்கள் தர்மத்தை நிலைநாட்ட பாடுபடவேண்டும். ஆனால் உன்னைப் போன்றவர்கள் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு சவாலாக இருக்கலாம் என்ற கனவோ! விரைவில் திருந்தாவிட்டால்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.