Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிலாரியுடன் ஜெயலலிதா பேசியது என்ன? அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி காலச் சூழலைப் போன்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் - ரொபர்ட் ஓ பிளேக்.

24 ஜூலை 2011

இந்தியாவிற்கு சென்றிருந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலிதாவைச் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பாக கலந்துரையாடியமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவாகரங்களுக்கான இணை அமைச்சர் ரொபர்ட் பிளேக், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஹில்லாரியும் தமிழக முதல்வரும் அக்கறையோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.இலங்கையில் நிலவும் சூழலை மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையோடும் அணுக வேண்டும் என்று இருவரும் ஒப்புக் கொண்டனர்.இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இலங்கை இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படுவது குறித்து இருவரும் விவாதித்தார்கள். இறுதிப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட வீடீயோ ஆவணம்.அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ காட்சிகளில் உள்ள மீறல்கள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். காணாமல் போனோர், கொல்லப்பட்டோர் தொடர்பாகவும், முகாம்களில் உள்ள மக்களின் மறுவாழ்வு தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர்.

மனித உரிமை தொடர்பான சில முன்னேற்றங்களை இலங்கை அரசு செய்ய வேண்டும். குறிப்பாக நெருக்கடி கால நிலை போன்ற சூழலை உடனடியாக இலங்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். ஊடகச் சுதந்திரம் இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிலை தொடர்பாக இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களிடம் ஆழமான கவலைகளும், அக்கறைகளும் காணப்படுகின்றது. அது போன்ற கவலைகள் எங்களுக்கும் உண்டு. அது போன்ற ஒரு ஆர்வத்தையே ஹில்லாரி கிளிண்டனும், தமிழக முதல்வர் ஜெயலிதாவும் வெளிப்படுத்தினார்கள்' என்று தனது நேர்காணலில் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64560/language/ta-IN/article.aspx

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிலாரியுடன் ஜெயலலிதா பேசியது என்ன? அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் தகவல்!

[sunday, 2011-07-24 08:28:04]

"இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், விரிவாக விவாதித்தனர்' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறினார்.கடந்த வாரம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, சென்னை வந்தபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது:

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நீண்ட நேரம் ஆலோசித்தனர். இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து, நாம் என்ன கவலைப்படுகிறோமோ, அதே மாதிரியான கவலையைத் தான், இருவரும் பகிர்ந்து கொண்டனர்.சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்பட, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை இரு மடங்காக தீவிரப்படுத்தி, தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் என்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.இறுதிக் கட்டப் போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி, "சேனல் 4' தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம், அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் இலங்கை மீது திரும்பியுள்ளது.

இதன் வெளிப்பாடே, ஹிலாரி மற்றும் ஜெயலலிதா இடையேயான சந்திப்பு."சேனல் 4' வீடியோ குறித்து, இலங்கை அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும். அதற்கு காரணமான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்க வேண்டும். இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் ராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான விஷயங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ராணுவ முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் மக்களையும் உடனே விடுவிப்பதுடன், அவர்களை மறுகுடியமர்த்துவதில் இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இதில், அமெரிக்கா இயன்ற அளவு உதவி செய்து வருகிறது. இலங்கையில் அவசர கால சட்டம், நீண்ட நாட்களாக அமலில் உள்ளது. இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மனித உரிமைகள் விவகாரத்தில், முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஊடகச் சுதந்திரம் குறித்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மனித உரிமை மீறல் பிரச்னைகளுக்கு துணை ராணுவப் படையினர் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, படை குறைப்பு நடவடிக்கைகளும் அவசியம். தமிழகத்தில் உள்ள தமிழர்களின் விருப்பமும் இதுதான். முதல்வர் ஜெயலலிதாவும், இந்த விஷயத்தை தான் வெளிப்படுத்தினார்.இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=47049&category=TamilNews&language=tamil

தமிழகத்தில் பாரிய முதலீட்டுக்களை அமெரிக்க நிறுவனங்கள் செய்து வருகின்றன. ( Ford has a big plant near Chennai; John Deere has a new joint venture; Caterpillar has a big set-up down there as well. So American companies are very much part of that economic dynamism down there.)

இந்த பொருளாதார உறவை தமிழக தலைவர்கள், தமிழர்களுக்கான அரசியல் வெற்றியாக்க வேண்டும். ( "The other issue probably is going to be about Sri Lanka, to say the 70 million Tamils in Tamil Nadu are still very concerned about the situation in Sri Lanka. There's 70,000 Tamil refugees from Sri Lanka that are still in Tamil Nadu.)

சிங்களத்திற்கு ஆதரவாக இருக்கும் மத்திக்கும் சிங்களத்திற்கும் இடையில் ஒரு சாதுரியமான அரசியலை நடத்தவேண்டும், அதை இன்றைய முதலைமைச்சர் செய்வார்.

( Jayalalithaa is learnt to have pointed out to Kariyavasam that the issues in Sri Lanka were the second main reason why she won the Tamil Nadu state elections convincingly. She had said that whatever steps she would take in regard to Sri Lanka would be in consultation with her people and the constituent partners of her government. This is because of the assurances she had given the people in Tamil Nadu during her polls campaign.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.