Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயரும் தங்க விலையும் அதிகரிக்கும் கொள்ளைகளும்

Featured Replies

உச்சத்தை தொட்டது தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு சவரன் ரூ.18 ஆயிரத்தை எட்டியது.

தங்கத்தின் விலை கடந்த பல மாதங்களாக உயர்ந்து வந்தது. இடையில் சற்றே சரிவு இருந்த போதிலும் தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தால், சவரன் விலை ரூ.17 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னர் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 அதிகரித்து, ரூ.2250 என்ற அளவை எட்டியது.

இதன்படி 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.18 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டி இருக்கிறது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.64.55 ஆக இன்று இருந்தது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.64,550 ஆக இருந்தது.

தங்கம் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்காத போதிலும் அடுத்தடுத்து வரும் மாதங்களுக்காக நகை வாங்குவது அதிகரித்து வந்தது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டதாக வியாபாரிகள் கூறினார்கள்.

http://www.maalaisudar.com/newsindex.php?id=36640%20&%20section=1

சென்னையில் டாடா நிறுவன அதிகாரி வீட்டில் 85 சவரன் நகை திருட்டு

http://www.dailythanthi.com/article.asp?NewsID=664418&disdate=8/3/2011

இரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் கைவரிசை: 2 வீடுகளில் 68 பவுன் நகை திருட்டுhttp://www.dailythanthi.com/article.asp?NewsID=664503&disdate=8/3/2011&advt=2

  • தொடங்கியவர்

இந்த தளத்தை பார்க்கலாம் உலக விலைகளுக்கு

http://www.kitco.com/

How to Explain the Current Gold Rush

After a sharp rise in the first quarter of 2011, gold prices in the second quarter reached a new record in excess of $1,670 an ounce, driven by worsening fears about EU sovereign debt and the prospect of a Quantitative Easing III (QE3) plan in the United States.

The cash injection which has been part of rescue plans in the EU and US can explain most of the recent rise in gold prices. In addition, a return to responsible fiscal policies may limit the tendency of investors to seek safe havens such as gold investments that offer an alternative to cash.

In Europe, as long as the EU efforts do not confront the long-term fiscal balance issues in countries such as Greece, Portugal and Ireland in order to postpone the prospect of a default, the market will continue to worry about sovereign risk and the threat of

contagion to Spain and Italy will remain.

In the United States, the debate on the debt ceiling highlighted the wide gulf between the Republicans’ and Democrats’ political goals. As in Europe, painful truths must be accepted before remedies can be adopted by political institutions to confront years of overspending. Until now, the American political system seems firmly established in the denial of painful truths about deficit reduction. Thus, any delay in reducing the deficit, especially if accompanied by a third quantitative easing plan, will be considered a vote for further public spending – which will only further increase the deficit – and lead to high demand for precious metals in the short term.

Ultimately, we believe that common sense will prevail, both in Europe and the United States, which will lead to a long-term bearish view on gold. But, in the short term, precious metals could rise further if governments prefer cash injections to fiscal balance over time.

Governments must choose between overspending which will increase the demand for precious metals and fiscal balance.

http://forexnewsnow.com/forex-analysis/how-to-explain-the-current-gold-rush-us-debt-crisis-debate-obama-eu

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஆன்- லைன்' வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்க விலை

---------------------------------------------------------------------------------------

தங்களிடம் ஒரு குண்டுமணி அளவிலாவது தங்கம் வீட்டில் இருக்க வேண்டும். தங்கத்தால் மட்டுமே வீட்டில் செல்வம் தங்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நம்நாட்டுப் பெண்கள்.

இன்றைய நிலையில், தங்கத்தின் விலை விண்ணைத்தாண்டிச் செல்லும் அளவில் உயர்ந்து வருவது அவர்களை மட்டுமன்றி, பெற்றோர்களிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணச் சீர்வரிசைகளில் தங்கம் முக்கிய பங்கு வகித்தாலும், பிறந்தநாள், காதணி, பூப்புனித நீராட்டு, திருமணம், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை, விழாக்கள் என பல்வேறு விழாக்களிலும் பரிசளிக்கப்படும் முக்கிய ஆபரணமாக தங்கம் விளங்குகிறது.

விழாக்காலங்களில் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு வீதிகளில் நடமாடும்போது அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அளவை வைத்தே அவர்களது குடும்பத்தின் கௌரவம் நிர்ணயிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

இதனால்தான், கிராம மக்கள் ஒரு குண்டுமணி அளவு தங்கமாவது வீட்டில் வாங்கி வைப்பது வழக்கம். அதுவும் பெண் குழந்தை பிறந்து விட்டால், பிறந்தநாள் முதலே அந்தக் குழந்தைக்காகப் படிப்படியாகத் தங்கம் வாங்குவதை நடைமுறைப்படுத்திக் கொள்வர்.

முந்தைய காலங்களில் அவரவர் தகுதிக்கேற்ப ஆபரணங்கள் செய்வதற்கு தங்கம் வாங்குவர். இதனால் தங்கத்தின் விலை கட்டுக்குள் இருந்தது. எனவே, அன்றாடம் கூலி வேலை செய்யும் பாமரர்கள் கூட குண்டுமணி அளவிலாவது தங்கம் வாங்க முடிந்தது.

ஆனால், இன்று தங்கத்தின் விலை "ஆன் -லைன்' ஆசியால் கடுமையாக ஆட்டம் போட்டு வருகிறது. ஆன்- லைன் வர்த்தகம் மூலம் தங்கம் அதிக அளவில் வாங்கப்படுவதுதான் இன்று தங்கத்தின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதற்குக் காரணம்.

குறைந்த அளவில் "மார்ஜின்' பணம் செலுத்தி, அதிக அளவில் தங்கம் வாங்கும் வசதி ஆன்- லைனில் உள்ளது. அதாவது, ஒருவர் 100 கிராம் தங்கம் கடையில் வாங்க வேண்டுமானால், தங்கத்தின் அன்றைய விலைக்கு ஏற்ப மொத்தப் பணத்தையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்க முடியும். ஆனால், ஆன்- லைனில் 100 கிராம் தங்கத்தின் விலையில் 10 சதவீத அளவு "மார்ஜின்' பணம் செலுத்தினாலேயே 100 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம். இது ஆன்- லைன் வர்த்தகத்தில் மட்டுமே சாத்தியம்.

ஆன்- லைனில் தங்கம் வாங்குவோர் அவர்களது தேவையைத் தாண்டி பல கோடி ரூபாய்க்கு ஆன்- லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்கின்றனர். இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பது போன்ற மாயத்தோற்றம் உருவாகி தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்கிறது.

ஆனால், உண்மையிலேயே தங்கத்தை ஆபரணமாகச் செய்து பயன்படுத்த நினைக்கும் பொதுமக்களோ, தங்கத்தின் விலை ஏற்றத்தை எண்ணி ஏக்கப்பெருமூச்சு மட்டுமே விடமுடிகிறது.

தற்போது அமெரிக்கப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையால் உலகப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. எனவே, பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனமும் ஆன்- லைன் தங்கத்தின் மீது திரும்பியதால், தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 2,500ஐ நெருங்குகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலையேற்றம் மக்களின் சமூக - பொருளாதாரப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கத்துக்காகக்கூட கொலை செய்யும் சமூக விரோதிகள் பெருகி வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல், ஆன்- லைனில் தங்கம் வாங்குபவர்கள் நீண்டநாள்கள் வைத்திருப்பதில்லை. உடனடியாக அதை விற்றுக் காசாக்கி விடுவர். இது தேசத்துக்கு ஆபத்து. ஆனால், பொதுமக்கள் தங்கள் தேவைக்காக வாங்கும் தங்கத்தை நீண்டநாள்களுக்கு சேமித்து வைத்திருப்பர். இது தேசத்துக்குப் பாதுகாப்பு.

தங்கத்தின் விலை ஏற்றம் இதேபோல் நீடித்தால், யாராலும் தங்கத்தை எளிதில் வாங்க முடியாத நிலை ஏற்படும். அப்போது ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்கும் கட்டாயம் ஏற்படும். அப்படி ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கம் நீக்கப்பட்டால், தங்கத்தின் விலை தலைகீழாகச் சரிந்துவிடும்.

அப்போது ஏற்படும் நஷ்டம் அனைத்தும் சிறுகச்சிறுகச் சேர்ந்து, தற்போது தங்கம் வாங்கி சேமித்து வைக்கும் சாதாரணப் பொதுமக்களின் தலையில்தான் விழும். இது நம் தேசத்தின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும்.

எனவே, நமது தேச மக்களின் வாழ்வோடும், கலாசாரத்தோடும் ஒன்றிவிட்ட தங்கம், பாமரனுக்கு காட்சிப்பொருளாக மட்டும் மாறிவிடாமல் தடுக்க, அதன் விலையைக் கட்டுப்படுத்தி நிலைப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, ஆன்- லைனில் இருந்து உடனடியாக தங்கத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

http://dinamani.com/...es&artid=459319

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.