Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலைமைகள் எப்போதும் மாறலாம்; இதை உணர்வதே புத்திசாலித்தனம்

Featured Replies

நிலைமைகள் எப்போதும் மாறலாம்; இதை உணர்வதே புத்திசாலித்தனம்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இலங்கை அரசிற்கு எதிரானதல்ல. அது தமிழர்கள் உரிமையோடு வாழ்வதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. எனினும் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிபுகளுக்கு ஒவ்வொருவரும் தத்தம்பாட்டில் வியாக்கியானம் கொடுப்பர்.

அவர்கள் கொடுக்கின்ற வியாக்கியானங்கள் அனைத்திற்கும் தாளம் போடுவது என்பது முடியாத காரியம். எனவே உள்ளூராட்சித் தேர்தல் முடிபுகள் தமிழ் மக்களின் கருத்துக் குவியல் என்பதை அரசு மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முப்பது வருடகால விடுதலைப் போராட்டம் இந்த மண்ணில் நின்று நிலைத்தது என்றால், அதற்குள் இருக்கக்கூடிய உரிமை பற்றிய வேட்கை எத்துணை காத்திரமானதென்பதை உணர்வது கட்டாயமானதாகும்.

இலங்கை மண் கடந்த முப்பது வருட காலமாக யுத்தத்தால் நொருங்குண்டது எனக் கூறுவோர் அதன் மறுபக்கத்தில் முப்பது வருடமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாமல் இலங்கை அரசுகள் திக்குமுக்காடின என்ற உண்மையை மறந்துவிடுகின்றன.

விடுதலைப்புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதனைக் கொண்டாடவும் தோற்கடிக்கப்பட்ட வியூகங்களுக்கு மாநாடு கூட்டி விளக்கம் கொடுக்கவும் தலைப்படுவோர், முப்பது வருடகாலமாக விடுதலைப் புலிகள் அமைப்பு எங்ஙனம் நின்று நிலைத்தது. அதன் அபார வளர்ச்சி எப்படிச் சாத்தியமாயிற்று என்பதனை இம்மியும் உணரத் தலைப்படவில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்துவிட்டோம் என்ற சாதனைக்கு உரிமை கோருவோர் அந்தச் சாதனையை நிலைநாட்டுவதற்கு இருந்த களநிலைகளையும் இந்திய தேசத்தின் உதவிகளையும் சர்வதேசத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் ஒருகணம் சிந்தித்தாக வேண்டும்.

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த வேளையிலிருந்த அதே களநிலை, சர்வதேசத்தின் அதே நிலைப்பாடு தொடர்ந்தும் இருக்கும் என்றோ, அல்லது விடுதலைப்புலிகளை தோற்கடிக்க வியூகம் அமைத்த ஆட்சியும் படைப்பலமும் தொடரும் என்றோ கூறமுடியாது. எனவே வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது தெரிந்தாக வேண்டும். இப்பொழுது பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகக் குரல் தரும் சர்வதேசம் இன்னும் சில வருடங்களில் அரச பயங்கரவாதத்தை அழிக்க புதிய அமைப்புகளுக்கு உயிரேற்றவும் தயங்காது அல்லவா?

உலகம் எப்போதும் ஒரேமாதிரியாக இருக்கும் என எவர் நினைத்தாலும் அது அறியாமையின் பாற்பட்டதாகும். பின்லேடன் கொல்லப்பட்டபோது அமெரிக்க ஜனாதிபதி வாழ்க எனக் கோசமிட்ட அமெரிக்கர்கள் பின்லேடன் இறந்து மூன்று மாதங்கள் கழிவதற்குள் ஒபாமா மீதான புகழாரத்தைக் கீழே இறக்கிவிட்டனர் என்ற கருத்துக் கணிப்புகள். இந்நிலை எவருக்கும் ஏற்பட அதிக காலம் ஆகாது என்பதையே நிரூபிக்கின்றன.

ஆக, இலங்கை அரசு போரின் வெற்றியை பெறுமதி உடையதாக ஆக்கவேண்டுமானால், இதயசுத்தியோடு சிங்களவர்கள் போன்று தமிழர்களும் ஆண்டனுபவிக்கும் உரிமையை வழங்கவேண்டும். அதுவே புத்திசாலித்தனமான முடிவாகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=21245

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.