Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘டாக்டர்’ பட்டம் என்ன விலை (தறு)தலைவா?

Featured Replies

‘டாக்டர்’ பட்டம் என்ன விலை (தறு)தலைவா?

மாட்சிமை தங்கிய, மேதகு, மாண்புமிகு , ‘கலாநிதி’ மகிந்த ராஜபக்ஸ என்றுதான் இனி அழைக்க வேண்டும்.

மகிந்தருக்கு அண்மையில் கடிதம் எழுதிய எம்.பீ. சுமந்திரனும் இதைக் கவனிக்க வேண்டுகிறோம்.

‘கலாநிதி’ என்று விளிக்காத கடிதங்களை ,குப்பையில் போடுமாறு மகிந்தர் கட்டளையிட்டு இருப்பதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தூங்கும்போதும் அந்தத் தொப்பியோடு படுப்பதாக துணைவியார் கவலைப்படுகிறார்.

ரஷ்யாவும் சீனாவும் ‘கலாநிதி’ பட்டத்தைக் கொடுத்து விட்டார்கள். அடுத்ததாக நம்ம காந்தி தேசம்தான்.

‘பிளீஸ் சிட் டவுன்’ என்று அ.தி.மு.க எம்பீக்களை அதட்டிய ”சபாநாயகி’ மீரா குமாரோ,அல்லது முருகன்,பேரறிவாளன், சாந்தன் போன்றோரின் கருணை மனுவினை நிராகரித்த ‘சனாதிபதி’ பிரதீபா பட்டேலோ , மகிந்தருக்கு மூன்றாவது ‘ கல்லாநிதி’ பட்டத்தை வழங்கலாம். வெளிநாட்டமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் SUO MOTU STATEMENT போல் , இதுவும் தன்னிச்சையாக வெளிவரலாம்.

சீனா புகுந்து விடுமோவென்று அச்சப்படும் மன மோகன் சிங், தனது ‘கலாநிதி’ பட்டத்தை, மகிந்தருக்கு தாரை வார்த்துக் கொடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. மாறி மாறி முதுகு சொறியும் பழக்கதோசமுள்ள ஆசியாவில், எதுவும் நடக்கலாம்.

டிசம்பரில் கொழும்பிற்கு வருகை தரும் சிங்கிற்கு , ‘பேயாசான்’ ஜி.எல்.பீரீஸ் தலைமையில், கௌரவ ‘கலாநிதி’ பட்டம், அம்பாந்தோட்டையில் வைத்து வழங்கப்படுமென பட்சி சொல்கிறது.

தமக்கு ஒருவரும் கலாநிதிப் பட்டத்தை தரவில்லை என்று கோத்தாவும்,பசிலும் கோபப்படலாம். அந்த அளவிற்கு மகிந்த குடும்பத்துக்குள் பெரிய குத்து வெட்டுக்கள் நடக்கின்றன. பிரதமர் கனவில் மிதக்கும் கோத்தபாயாவிற்கு, பசில் எமனா என்று தெரியவில்லை. சிலவேளை மகிந்தாவிற்கு ,கோத்தாவே எமனாக மாறலாம். பண்டார நாயக்க பரம்பரைகள் வரலாற்றில் எழுதி வைத்த செய்திகள் இவை.

”உலகத்திலுள்ள சனல்-4 , பிபிசி ,ஹெட் லைன்ஸ் டுடே போன்ற பெரிய தொலைக் காட்சி எல்லாவற்றிக்கும் நான் பேட்டி கொடுத்து விட்டேன். ஆகவே எனக்கும் ஒரு டாக்டர் பட்டம் தந்தால் என்ன” என்று, கோத்தபாய மனதுக்குள் குமுறுவது தெரிகிறது.

ஒரு காலத்தில்,சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை நடைபெறும் போது, 1945 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையிலுள்ள வீரகட்டிய என்னும் இடத்தில் பிறந்த ‘கலாநிதி’ பேர்சி மகேந்திரா ‘மகிந்த’ ராஜபக்ஸ என்றும், 1949 ஆம் ஆண்டு மாத்தறை மாவட்டத்திலுள்ள பாலதுவ என்ற இடத்தில் பிறந்த ‘டாக்டர்’ நந்தசேன கோத்தபாய ராஜபக்ஸ என்றும் மூன்று தடவைகள் அழைப்பார்கள் என்கிற பெருமை மட்டுமே மிஞ்சும்.

டாக்டரில், கௌரவமான ‘டாக்டர்’, கௌரவமில்லாத ‘டாக்டர்’ என்று இரண்டு வகை உண்டு. இதில் மகிந்தர் எந்த வகையராக்களுக்குள் அடங்குவார் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இந்த ‘டாக்டர்’ பட்டத்தை சீனா எதற்காகக் கொடுத்தது என்று மட்டும் கேட்டு விடாதீர்கள். அது பெரிய ராஜதந்திரம். புவிசார் அரசியலில் முத்துக் குளிப்பவர்களுக்கு மட்டும் அது புரியும்.

நாய்க்கேன் போர்த்தேங்காய் என்றா கேட்கிறீர்கள். அப்படிக் கேட்பது எம் காதில் விழுகிறது.

-வல்லிபுரத்தான்

http://www.alaikal.com/news/?p=79051

This is another thunderous achievement of China by awarding a Ph.D. for a person who have directed several mass murders and reaching a killing total of more than 50,000 people within 5 months, especially under the name of “humanitarian operation”, which is totally a new philosophy for the world.

Ph.D. – Philosophy of Death (Mass Murder): This degree is awarded for the people who have successfully cheated the world and executed more than 50,000 people of any community and not only that but also the person must have carried out murderous policies for a period of at least 3 years. This degree is awarded under the language department in recognition of one’s ability to cheat the entire world, with the new state of the art killing tactics, preferably under any cover.

இனி என்ன ஒரு பிரசவ வைத்தியசாலையை நிறுவி டாக்டர் மகிந்தா தனது சேவையைத்தொடரலாமே..........{லண்டனில் உள்ள சிங்கள வைத்தியரைப்போல}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.