Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்கள்: அவுஸ்திரேலிய விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பு!

Featured Replies

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை: அவுஸ்திரேலிய விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பு!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மீள் விசாரணை நடத்த வேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் விடுத்த இக்கோரிக்கையை அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க நேற்று (16.08.11) முற்றாக நிராகரித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு மீள் விசாரணை நடத்த வேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டின் பேச்சாளர் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டே அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் இவ்வாறு கூறியுள்ளதாக அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரித்தானியத் தொலைக்காட்சியின் இந்த ஆவணப்படம் பொய்யான தகவல்களைக் கொண்டு பக்கச் சார்பாக தயாரிக்கப்பட்டதாகவும் அட்மிரல் திசார சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இது அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டின் அறிக்கையே எனக் குறிப்பிட்டுள்ள அவர், இக்கோரிக்கைக்கான காரணங்களையும் அவர் குறிப்பிட்டிருந்தால் அதை சிறிலஙடகா அரசாங்கம் கவனத்தில் எடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை விவகாரம் ஒன்றும் சர்வதெசப் பிரச்சினை அல்ல என்றும், அது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்தியதாகவும், எனவே அதுபற்றி விசாரிக்க சர்வதேச விசாரணைகள் தேவையில்லை என்றும் அட்மிரல் திசார சமரசிங்க கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்படும் கருத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={6B8E5985-8DED-4408-8BEA-6498C8E2B947}

  • தொடங்கியவர்

Tamil killings were just collateral damage, says Sri Lanka

THE top Sri Lankan diplomat in Australia has rejected a call by the Foreign Minister, Kevin Rudd, for the United Nations to re-examine allegations of war crimes during the bloody end to the country's three decades of civil war.

Last month a spokeswoman for Mr Rudd called on the UN Human Rights Council to revisit the claims of war crimes and to ''examine whether their original findings on the civil war can still be regarded as well-founded.'' But the Sri Lankan high commissioner, Thisara Samarasinghe, said yesterday the allegations upon which Mr Rudd based his call - including video footage from a British documentary which showed unarmed Tamils being shot dead - were ''biased and unsubstantiated''.

'That is a statement made by your honourable Foreign Minister,'' Admiral Samarasinghe said. ''He had his reasons to make that request and it will take its natural course, if anybody is interested.'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.