Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழ் எழுத்தாளர்களே - கலைஞர்களே மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்போம் வாரீர் !

Featured Replies

உலகப் பரப்பெங்கும் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் மரணதண்டனைக்கு எதிரான குரலைப் பதிவு செய்யும் முகமாக, தங்களது ஒப்புதலை, மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு வழங்குமாறு வேண்டுகின்றேன் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன்(சுதன்ராஜ்) கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் கொலை வழக்கில் சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

மரண தண்டஅனையை நிறுத்துமாறு தமிழகத்தில் எழுத்தாளர்கள் கலைஞர்கள் அணிதிரண்டு வரும் நிலையிலேயே, உலகத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு துணை அமைச்சர் இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அறிக்கையின் முழுவிபரம் :

மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன,; முருகன், பேரறிவாளன், ஆகியோரது மரண தண்டனையை நிறுத்துமாறு கோரும் குரல்கள் தமிழகமெங்கும் தீவிரமாக ஒலிக்க தொடங்கியுள்ளன. கட்சி, அமைப்பு, இயக்க வேறுபாடுகள் கடந்து ஒருமித்த குரலாக ஒலிக்கும் சமவேளை, எழுத்தாளர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் என பன்முக பரப்பில் இருந்தும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஒருங்கிணைப்புக் குழு தனது குரலையும் பதிவு செய்துள்ளது.

எந்த ஒரு மனித உயிருக்கும் மரணதண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை எனும் உன்னதமான கருத்து உலகின் மனச் சாட்சியாக மேலெழுந்து வருகையில் இந்திய அரசே -மரண தண்டனையை ரத்து செய் என்ற கோரிக்கையுடன் பொன்னீலன், புவியரசு, ஈரோடு தமிழன்பன், இன்குலாப், இராசேந்திரசோழன், பா.செயப்பிரகாசம், தாமரை, ஓவியர் மருது, மாலதி மைத்ரி ஆகியோரது ஒருங்கிணைப்பில் மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக எழுத்தாளர்களது கலைஞர்களது ஒப்புதல்கள் கோரப்பட்டுள்ளது.

இவ்வேளை உலகப் பரப்பெங்கும் உள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் அனைவரும் மரணதண்டனைக்கு எதிரான குரலைப் பதிவு செய்யும் முகமாக தங்களது ஒப்புதலை மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு வழங்குமாறு வேண்டுகின்றேன்.

ஒப்புதல் அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞச்ல் முகவரி :

jpirakasam@gmail.com

s.tamarai@gmail.com

இவ்வாறு துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒப்புதல் அளித்தவர்கள்:

நோம் சாம்ஸ்கி /பினாயக் சென் /ஆனந்த் பட்வர்த்தன் / மார்கரெட் ட்ராவிக் /வரவரராவ் /மகாசுவேதா தேவி /மகேஷ் தத்தானி /புலவர் புலமைப்பித்தன் / பிரபஞ்சன் / கலாப்ரியா /எஸ்.பொ./ தமிழவன் / சிவசங்கரி /கிருஷாங்கினி / நெய்வேலி பாலு / அ.மார்க்ஸ் / ஞாநி / ரவிசுப்ரமணியன் / பழநிபாரதி / கபிலன் / யுகபாரதி / கிருதியா / பிரான்சிஸ் கிருபா / சல்மா / தமிழச்சி தங்கபாண்டியன் / சிநேகன் / பா.விஜய் /ந.முத்துக்குமார் / தமிழ்நதி / விவேகா / அ.வெண்ணிலா /பிறைசூடன் /அஜயன் பாலா / குழந்தை வேலப்பன் / பாஸ்கர் சக்தி /இயக்குனர் தாமிரா / நடிகர் ஆர்.பார்த்திபன் /நடிகை ரோகிணி / நடிகர் சத்யராஜ் /இயக்குனர் அமீர் / இயக்குனர் மணிவண்ணன் / இயக்குனர் சேரன் / இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் / இயக்குனர் சீனு ராமசாமி /ஜமாலன் /பாமரன் / ச.பாலமுருகன் /இரா.முருகவேள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.