Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் குடியமர முடியாது; அரசு நேற்று ஆணித்தரமாக அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் குடியமர முடியாது; அரசு நேற்று ஆணித்தரமாக அறிவிப்பு

  • Friday, August 19, 2011, 9:00

இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களான புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது தற்போதைக்கு சாத்தியமாகாத விடயமாகும் என்று அரசு அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

வடக்கின் மீள்குடியேற்றம் குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களிலேயே இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றது. இதனால் அப்பகுதிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த பகுதிகள் என மதிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த பகுதிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை. இந்நிலையில் அப்பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவது தற்போதைக்கு சாத்தியமாகாத விடயமாகும்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் 95 வீதமானவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 5 வீதமானவர்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு தேவையானவற்றை வழங்குதல், இன்னமும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றாத பகுதிகளிலிருந்து அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இவை எல்லாவற்றையும் ஒரே தறுவாயில் நிறைவேற்ற எண்ணினால் அதற்கு சுமார் 25 வருடங்களாவது தேவைப்படும். அதனால் மக்களின் தேவை கருதி அனைத்தையும் கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கம் தெளிவாகவே உள்ளது. வெகு விரைவில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க் குற்ற ஆதாரமான இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய் ஆகியோர் வழங்கிய சாட்சியங்களில் அரசாங்கம் மீள்குடியேற்ற முடியாது என்று அறிவித்துள்ள பிரதேசங்களிலேயே பொதுமக்கள் படையினரால் ஈவுஇரக்கமற்றுச் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்திருந்தனர்.

ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுக் கிடந்த மக்களைப் புதைக்க முடியாத நிலையில், சடலங்களை ஒரே இடத்தில் போட்டு பெக்கோ இயந்திரத்தின் மூலம் அதன் மீது மண்ணைக் குவித்து மண் அணையை ஏற்படுத்தியிருந்தனர் என்றும் இராணுவச் சிப்பாய் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai.com/?p=24515

  • கருத்துக்கள உறவுகள்

குடியேறவிட்டால் சிங்கள இராணுவத்தினரினால் அப்பாவி தமிழர்கள் பலரின் கொன்று புதைக்க பட்ட புதை குழிகள் வெளிவரும் என்பதினாலேயே அனுமதிக்கவில்லை.

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.