Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் அரசியற் தீர்வு தொடர்பான முயற்சியில் இந்தியா தளரக்கூடாது - இந்திய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 08:09 GMT ] [ நித்தியபாரதி ]

Indian_Parliament.jpgசிறிலங்காவில் நிலவும் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்குகந்த அரசியற் தீர்வொன்றை உருவாக்குவதில் இந்தியா தன்னை ஈடுபடுத்திவருகின்றது. இந்நிலையில், இந்தியாவானது அரசியற் தீர்வு தொடர்பான தனது முயற்சியில் தளர்வுறாது செயற்படவேண்டும்.

இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட Deccan Herald ஆங்கில நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் சீனாவிற்கான தனது பயணத்தை மேற்கொண்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது மேலும் நெருக்கமடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, இராணுவ ரீதியிலான உறவானது அண்மைய ஆண்டுகளில் துரித வளர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் ஒரு நாடாக சீனா உள்ளதுடன், இங்கு மேற்கொள்ளப்படும் பாரியளவிலான திட்டங்களுக்கான நிதியை சீனா வழங்கியுள்ளது.

அண்மையில் ராஜபக்ச, சீனாவிற்கான தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டபோது சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தனது உறுதிப்பாட்டை மட்டுமன்றி அனைத்துலக சமூகத்தின் முன் சிறிலங்காவிற்குத் தேவைப்படும் எந்த வகையான உதவிகளையும் தான் மேற்கொள்ளத் தயாராக இருப்பதான உறுதிப்பாட்டையும் சீனா வழங்கியுள்ளது.

சிறிலங்கா மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா பாதுகாப்புச் சபை மற்றும் ஏனைய அனைத்துலக அமைப்புக்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சீனாவானது எப்போதும் கொழும்பிற்குத் தனது ஆதரவை வழங்கும் என்பதே இதன் கருத்தாகும்.

இந்த விடயத்தில் சிறிலங்காவிற்கு சீனாவானது தனது ஆதரவை வழங்குவதென்பது ஆச்சரியப்படத்தக்க ஒரு விடயமல்ல. இது தவிர, சீனாவானது தற்போது இக்கட்டான சூழலை எதிர்நோக்குகின்ற ராஜபக்சவிற்கு தனது ஆதரவை வழங்குவதன் மூலம் சிறிலங்கா மீது சீனா சொந்த நலனைப் பிரயோகிக்கின்றது.

சீனா மற்றும் தென் திசையில் அமைந்துள்ள அயல்நாடான சிறிலங்கா ஆகியவற்றிற்கு இடையில் பேணப்படும் ஒத்துழைப்புத் தொடர்பாக இந்தியா தனது கவனத்தில் எடுத்துள்ளது.

சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டத்திற்காக சீனாவானது முதலீடு செய்து தனது தலையீட்டை மேற்கொள்வதானது எதிர்காலத்தில் சீனக் கடற்படையினரின் பிரசன்னம் சிறிலங்காவில் இருக்கும் என சில ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது சிறிலங்காவின் அயல்நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

இது விடயத்தில் சிறிலங்காவானது இந்தியாவின் ஆதங்கத்தைத் தனது கவனத்தில் எடுக்காதுள்ள அதேவேளையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவானது சீனாவின் உதவியை நாடவேண்டிய தேவையுள்ளதால் சீனாவுடன் அதிக நெருக்கத்தையும் ஒத்துழைப்பையும் பேணவேண்டிய நிலையில் சிறிலங்கா உள்ளது.

சிறிலங்கா மீதான சீனா மற்றும் மேற்குலக சக்திகளின் அணுகுமுறை தொடர்பான தனது மனக்குழப்பத்தை இந்தியா தவிர்க்கவேண்டும். சிறிலங்கா மீதான இந்தியாவின் கொள்கை என்பது ஏனைய நாடுகளின் அணுகுமுறையிலிருந்து அடிப்படையில் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

சிறிலங்காவில் நிலவும் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்குகந்த அரசியற் தீர்வொன்றை உருவாக்குவதில் இந்தியா தன்னை ஈடுபடுத்திவருகின்றது. இந்நிலையில், இந்தியாவானது அரசியற் தீர்வு தொடர்பான தனது முயற்சியில் தளர்வுறாது செயற்படவேண்டும்.

இந்தியாவானது சிறிலங்காவின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போருக்குப் பிந்திய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றது. இதற்கப்பால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இனங்கண்டு அவர்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மேற்குலக நாடுகள் அல்லது சீனா ஆகியவற்றால் சிறிலங்கா மீது காட்டப்படுகின்ற தம் சுயநலம் சார் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா தனது கவனத்தில் எடுக்கக் கூடாது.

ராஜபக்ச அரசாங்கம் மீது உண்மையான, நீதியான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கான முழு முயற்சியையும் இந்தியா மேற்கொள்ளவேண்டும். மேற்கைப் போன்று ராஜபக்சவிற்கு எதிராக ஊடகங்களின் ஊடாக எதிர்ப்பைத் தெரிவிப்பதென்பது மட்டும் எமது அணுகுமுறையாக இருக்கக்கூடாது.

http://www.puthinappalakai.com/view.php?20110819104503

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தளர்ந்தால் இந்தியாவுக்குதான் பாதகமாக அமையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.