Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டுகிறது பி.ஜே.பி.

Featured Replies

இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டுகிறது பி.ஜே.பி.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி.) சென்னையில் நிதிதிரட்டும் நடவடடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஓகஸ்ட் 25 ஆம் திகதிவரை இந்நிதி திரட்டும் நடவடிக்கை தொடரும் என அக்கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு அங்கத்தவரான எல். கணேசன் தெரிவித்துள்ளார்.

25 ஆம் திகதி தமிழ் நாடு மாநில பி.ஜே.பி. அங்கத்தவர்கள் நிதி திரட்டுவதற்காக வீதிப்பிரசாரங்களில் ஈடுபடுவார்கள் எனவும் பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்நடவடிக்கை விஸ்தரிக்கப்படும் எனவும் எல். கணேசன் கூறியுள்ளார். இறுதியில், இலங்கையில் இம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சேவா இண்டர்நெஷனல் எனும் அமைப்பிடம் இந்நிதி கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அண்மையில் சென்னைக்கு விஜயம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி இலங்கைத் தமிழர்களுக்காக 10 லட்சம் இந்திய ரூபா வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எல். கணேசன் மேலும் கூறுகையில், இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவது வெளிவிவகார அமைச்சுக்குட்ட விடயமாகும். எனவே இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்த மாத்திரமே முடியும்.

காங்கிரஸும் பி.ஜே.பி.யும் மாத்திரமே இதை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளன. ஆனால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஐக்கயி முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் நிலையில் காங்கிரஸ் எதுவும் செய்வதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உதவியது என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவருக்குமான மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு இந்திய; மத்திய அரசை வலியுறுத்துமாறு அனைத்து கட்சிகளும் ஏக மனதாக தமிழக முதலமைச்சரிடம் கோர வேண்டும் என வைகோ கூறியிருப்பது குறித்து கேட்டபோது, இவ்விடயத்தில் பி.ஜே.பி. மத்திய குழு கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளும் என கணேசன் பதிலளித்தார்.

http://www.tamil.dai...0-06-07-55.html

Edited by akootha

சேவா இண்டர்நெஷனல் என்பது லண்டனிலும் கனடாவிலும் அமெரிக்காவிலும் கிளைகளை உடையது. வட இந்தியர் கட்டுப்பாடில் இலங்கையில் இயங்கும் இந்து சேவா சங்கம் (HSS) என்னும் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இவர்கள் சிங்களப் பயங்கரவாதிகளுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணுபவர்கள். இந்தக் குழுவினர் இராணுவத்தினர் உதவியுடன் 2010 முதல் வன்னியிலும் (மலையாளபுரம், ஒட்டிசுட்டான் உட்பட) இயங்கி வருகின்றனர்.

இவர்கள் முன்பும் புலம்பெயர் தமிழரிடம் சுனாமி, வெள்ளம் என்று நிதி பறிக்க கடும் முயற்சி செய்தார்கள். இந்த நிதியில் பெரும்பகுதியை இந்தியாவுக்கு கொண்டுசெல்வதே அவர்கள் திட்டமாக இருந்தது. கதிர்காம தெய்வயானை அம்மன் கோவிலும் இவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. அங்கு கிடைக்கும் பெருமளவு நிதியையும் இலங்கையில் பயன்படுத்தாமல் இந்தியாவுக்கு கொண்டுசெல்ல முயலுகிறார்கள்.

எனவே இப்போது தமிழகத்தில் பா.ஜா. க. அரசியல் நாடகம் ஆடுகின்றனர் என்றே கருதவேண்டியுள்ளது. இந்தியா முழுவதும் வியாபித்திருக்கும் இவர்கள் ஏன் ஏனைய மாநிலங்களில் நிதி திரட்டவில்லை? பார்பனியர்களிடம் தமிழனை இலகுவில் ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் தான்.

இவர்கள் உதவிகளை கவனத்துடன் பெற்றுக்கொள்ளலாம். செய்யுமளவுக்கு செய்யட்டும். ஆனால் புலம் பெயர் தமிழர் இவர்கள் பித்தலாட்டத்தில் ஏமாந்து நிதி வழங்காமல் இருந்தால் போதும்.

எமது தாய்மண்ணை அழித்தவர்கள் தமது நிதியிலிருந்து பாரிய நட்ட ஈட்டை செலுத்தும் கடப்பாடுடையவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.