Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்காசியாவில் அதிக இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை!

Featured Replies

தெற்காசியாவில் அதிக இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை! - நியூசிலாந்து ஊடகம் செய்தி!!

தெற்காசியாவில் அதிக இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை இருப்பதாக நியூசிலாந்து ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மூன்று இலட்சம் படைத்தரப்பினரைக் கொண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் குடியியல் நடவடிக்கைகளில் படைத்தரப்பினரை ஈடுபடுத்தி வருவது குடியியல் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் இவ்வூடகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து 'நியூசிலன்ட் ஹெரால்ம்' எனும் ஊடகத்தில் ராகுல் பேடி என்பவர் எழுதியுள்ள கட்டுரையில், மரக்கறி விற்பனை, பயண முகவர் நிலையங்கள், தங்கு விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்ற பல்வேறுபட்ட தொழில்களில் படைத்தரப்பினரை ஈடுபத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடபகுதியில் 22 அறைகளைக் கொண்ட தங்கு விடுதி ஒன்றை சிறிலங்கா படைத்தரப்பினர் நடத்தி வருவதுடன், படகுச் சேவைகள் போன்றவற்றை சிறிலங்கா கடற்படையினர் ஒழுங்கு செய்ர் வருவதாகவும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் பல்கலைக்கழக மாணவர்களுக்கு படை முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டதையும் இவ்வூடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் பல்வேறுபட்ட துறைகளிலும் படைத்தரப்பினர் மேற்கொண்டு வரும் பல பில்லியன் டொலர் முதலீடுகள் குடியியல் அதிகாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இக்கட்டுரையாளர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.c...82-80EEFDAAA2EB}

Edited by akootha

  • தொடங்கியவர்

சிறிலங்காவின் இராஜதந்திர செயற்பாடுகளில் அதிகரித்துவரும் முன்னாள் படை அதிகாரிகளின் ஆதிக்கம்!

இலங்கை என்ற நாடு மட்டுமன்றி அதன் வெளிநாட்டு இராஜதந்திர நடவடிக்கைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாகி வருவதாக லங்கா நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஜப்பானுக்கான சிறிலங்கா தூதுவரான கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த சரன்னாகொடவின் பாதுகாப்புக்காக கடற்படையைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு இராஜதந்திர அலுவல்களில் படை அதிகாரிகளை நியமிப்பது சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் மூளையில் உதித்த திட்டமாகும்.

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களில் பணி வெற்றிடங்கள் இருப்பின் தமக்குத் தெரியப்படுத்துமாறு கோத்தபாய ராஜபக்சவால் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு பணிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிடங்களுக்கு படைத்துறை அதிகாரிகளை நியமிக்கும் நோக்கிலேயே அவரால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர துணைப் பிரதிநிதியாகவுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குவதற்காக தற்பொழுது படைத்துறைக் கொமாண்டோ அணி ஒன்று நியூயோர்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டிற்கான சிறிலங்கா தூதுவராகவுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸின் பாதுகாப்பிற்காக இதே வகை அணி ஒன்று ஜேர்மன் தலைநகர் பேர்லினுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் திஸரா சமரசிங்கவினால் கடற்படை ஆளணிகள் அவுஸ்ரேலியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தோனேசியாவிற்கான சிறிலங்கா தூதுவராகவுள்ள படைத்துறை ஆளணிப் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராய்ச்சிக்கு சமையல்காரர்கள் உட்பட படைத்துறை ஆளணிகளை சிறிலங்கா படைத்துறைத் தலைமையகம் அனுப்பி வைத்துள்ளது.

தாய்லாந்திற்கான சிறிலங்காத் தூதுவராகவுள்ள முன்னாள் படைத்துறைத் தளபதி லெப்.ஜெனரல் சாந்த கொட்டகொடவினாலும் படைத்துறை ஆளணிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறிலங்காவின் வெளிநாட்டு இராஜதந்திர அலுவல்களில் படைத்துறை அதிகாரிகள் அதிகமாக ஈடுபடுத்தப்படுவதையிட்டு தொழில்சார் இராஜதந்திரிகள் விசனமடைந்துள்ளனர்.

வெளிநாட்டு இராஜதந்திர அலுவல்களில் படை அதிகாரிகள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றமையால், படைத்தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை உள்ளது என்ற தவறான தோற்றம் வெளிநாடுகளைச் சென்றடையும் என தொழில்சார் இராஜதந்திரிகள் கருதுவதாக லங்கா நியூஸ் இணையம் தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகப் பிரதேசங்களை சிறிலங்கா அரசாங்கம் இராணுவ மயப்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.

அத்துடன், தெற்காசியாவில் அதிக இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கை இருப்பதாக நியூசிலாந்து ஊடகம் ஒன்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அதிகரித்து வரும் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் வெளிநாட்டு இராஜதந்திர அலுவல்களில் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருவதாக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={DF26C38F-25FC-4072-8183-E7DC1E62E5E0}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.