Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவாந்துறையில் ஊரடங்கு-மக்கள் ஆலயங்களில் அடைப்பு .பதட்டம் தொடர்கிறது!(Photo in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

50802383-150x150.jpgகடந்த இரவு ஐந்து கிரிஸ் மர்ம நபர்கள் நாவாந்துறை மக்கள் குடியிருப்பில் உள் நுழைந்து திருட்ட முற்பட்டுள்ளனர் .இதை அடுத்து அவர்களை கண்ட மக்கள் குறித்த ஐவரையும் விரட்டி சென்று தாக்கியுள்ளனர் .அப்போது அங்கே புதிதாக அமைக்க பட்ட கடல் படை முகாமில் இருந்து வந்த ஜீப்பில் அவர்கள் ஏற்ற பட்டுபாதுகாப்பாக அழைத்து செல்ல முற்ப்பட்ட வேளையே அந்த ஜீப் வண்டியை மக்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர் . இதை அடுத்து அங்கு வரவளைக்க பட்ட நூற்றி ஐம்பது இராணுவத்தினர் மக்களை அடித்து துன்புறுத்தி நூற்றுக்கு மேற்பட்டவர்களைகைது செய்து சென்றுள்ளனர் .

23_08_2011_Navaanthurai_03-1024x751.jpg

இராணுவத்தினர் தற்போது அந்த பகுதியினை சூனிய பகுதியாக அறிவித்துள்ளனர் .அத்துடன் அங்கு எவரும் தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ள முடியாத படி தடை விதிக்க பட்டுள்ளது .மக்கள் கொக்குவில் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் .அத்துடன் நாவந்துறை தேவலாயத்தில் மக்கள் அடைத்து வைக்க பட்டுள்ளனர்தொடர்ந்து இராணுவத்தின் அராயகம் அடாவடி தொடர்கின்றது .

குறித்த பகுதிக்கு எவரும் உள் செல்ல முடியாதபடி இராணுவம் தடை விதித்துள்ளது .

இந்த சம்பவத்தில் பாதிக்க பட்டவர்களின் உறவினர் தந்த செவ்வியினை விரைவில் இங்கே இணைக்கின்றோம் .அதுவரை காத்திருங்கள் .இங்கே பிறப்பிக்க பட்ட ஊரடங்கு வெளியில் உள்ள மக்களுக்கு தெரியாதபடி இராணுவம் விடுத்துள்ளது .

இது தொடர்பான செய்திகள் .

படையினர் – பொதுமக்களிடையே யாழ்ப்பாணத்தில் மோதல்: (Photo in)

யாழ்ப்பாணத்திலும் கிரீஸ் பூத பதற்றம் – படையினர் துப்பாக்கிச் சூடு (Photo in)

வடமராட்சியிலும் மக்கள் பதற்றம் ராணுவத்தினருடன் முறுகல் நிலை

யாழ். நாவாந்துறையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களில் 25 இளைஞர்கள் படுகாயம்!

நாவாந்துறையில் இராணுவத்தால் பிடிக்கப்பட்டோருக்கு 26ஆம் திகதி வரை விளக்கமறியல்!

நாவாந்துறையில் நடந்தது என்ன?

நாவாந்துறையில் உள்ள கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் கிறீஸ் மனிதன் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சென்றதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த நபர்களை பொது மக்கள் துரத்திச் சென்றுள்ளனர்.இதன்போது அந் நபர்கள் நாவாந்துறையில் உள்ள இராணுவ காவலரணுக்குள் புகுந்ததாக தெரிவித்து பொதுமக்கள் இராணுவ காவலரண் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.அதனைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன் உதவிக்கு கலகமடக்கும் பொலிஸாரை வரவழைத்தனர்.உடனடியாக பெருமளவு பொலிஸாரும்,இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.வீதிகளில் காணப்பட்ட மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மக்கள் பீதியில் உறைந்தனர்.இதேவேளை இன்று அதிகாலை வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை விசாரணைக்கென அழைத்துச் சென்று தாக்கியதாக பிரதேச தகவல்கள் தெரிவித்தன.

23_08_2011_Navaanthurai_01-1024x736.jpg

பொலிஸ் வாகனங்கள் மீது பொதுமக்கள் தாக்குதல்.

இதேவேளை நாவாந்துறையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸ் வாகனங்கள் மீது பொதுமக்கள் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் 2 பொலிஸ் வாகனங்கள் சேதமடைந்ததாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவித்தன.இராணுவத்தினரால் பலர் கைதுநாவாந்துறையில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து இன்று அதிகாலை தொடக்கம் பலர் கைது செய்யப்பட்டதாகப் பிரதேசதகவல்கள் தெரிவித்தன.பலர் காயம்இதேவேளை பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாக கூறப்பட்டது.செய்தி அச்சுக்கு போகும் வரை நாவாந்துறையில் பதற்றமான சூழ்நிலையே காணப்பட்து.

வடமராட்சியில் பிடிபட்டான் கிறீஸ் மனிதன்.

வடமராட்சியில் கொற்றாவத்தையில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு கிறீஸ் மனிதன் என சந்தேகிக்கப்படும் நபர் சென்றதை அவதானித்த பொதுமக்கள் அவனைத் துரத்திச் சென்று ஆலங்கட்டை மயானத்திற்கு அண்மையில் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து வாகனமொன்றில் வந்த இராணுவத்தினர் சிலர் அந்நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.எனினும் அங்கு திரண்ட பொது மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே நிலைமை மோசமடைந்தது. இதனையடுத்து பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.எனினும் பொதுமக்கள் பிடியிலிருந்த கிறீஸ் மனிதனை மீட்க முடியவில்லை எனக் கூறப்பட்டது. பொது மக்களை கலைக்க இராணுவத்தினரும் பொலிஸாரும் எடுத்த முயற்சி பலனளிக்காது போனதாக கூறப்பட்டது.அப்பகுதியிலும் இன்று அதிகாலை வரை பதற்றநிலை காணப்பட்டதுடன் தமது வீடுகளை பாதுகாக்கும் முயற்சியிலும் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை கிறீஸ் மனிதன் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மூவர் வந்ததாகவும் அவர்களில் இருவர் தப்பிச்சென்றதாகவும் கூறப்பட்டது எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இதேவேளை இச் சம்பவம் குறித்து ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்.இராணுவக் கட்டளைத்தளபதியுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

http://www.tamilthai.com/?p=24902

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுதா .........?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.