Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் வேட்டியை மடித்து கட்ட வைக்காதீர்! சிறீதரன் எம்.பி. எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sritharan-mp-300x228.jpg

பிரசுரித்தவர்: Sukkran August 23, 2011

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசபைத் தலைவர், உபதலைவர் மற்றும் உறுப் பினர்கள் நேற்றுத் தமது பணிகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்தனர். கிளிநொச்சி, விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசையின் பின், பிரதேச சபை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மங்கள வாத்திய இசையுடன் எமது மக்கள் புடைசூழ கரைச்சி பிரதேசசபை அலுவலகத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

சபை முன்றலில் தேசியக் கொடியை கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.நீல்தளுவத்தையும் பிரதேசசபைக் கொடியை பிரதேசசபைத் தலைவர் குகராஜாவும் ஏற்றி வைத்தனர். நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், வலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தலைவர் தியாகராசா பிரகாஷ் வலிகாமம் வடக்கு பிரதேசசபைத் தலைவர் சுகிர்தன் வவுனியா நகரசபை உபதலைவர் நந்தன் கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சில்வா கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொதுமக்கள் தொடர்பு அதிகாரி அரீப்டீன் உட்படக் கல்விமான்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சனசமூக நிலையங்கள் மற்றும் ஆலயங்களின் பொறுப் பாளர்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்தவைகள்:

பிரபாகரனின் பெயரை வரலாற்றில் இருந்து நீக்கிவிட முடியாது

ஆசியுரை வழங்கிய அருட் திரு துரைரட்ணம் தனது உரையில் தெரிவித்ததாவது:

வீரம் விளைந்த இந்த மண்ணில் மீண்டும் ஒளிக்கீற்று தென்பட்டுள்ளது. அதுதான் தமிழ் மக்களின் இலட்சிய நோக்கான தமிழ்த் தேசியத்துக்குக் கிடைத்த வெற்றி. கரைச்சி பிரதேசசபையின் வெற்றி இதனை உறுதிப்படுத்துகின்றது.கடந்த 30 வருடங்களாக தமிழர்கள் புலியின் பின்னும் சிங்களவர்கள் சிங்கத்தின் பின்னும் சென்றனர். இவ்வாறு தமிழர்களும் சிங்களவர்களும் இணக்கப்பாட்டுக்கு வரவேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் நாம் முகம் கொடுத்த பிரச்சினைகளும் பேரழிவுகளும் கணக்கிட முடியாது. நமது காலத்தில் கிளிநொச்சி வரலாற்றுச் சிறப்புமிக்கது.தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாடும் பாதுகாக்கப்பட்ட பூமி இது. பெண்ணுரிமை மறுக்கப்பட்ட ஒரு பூமி. ஆனால் இன்று அவை கேள்விக் குறியாகி விட்டன.

இந்த மண்ணின் வரலாற்றில் பிரபாகரனின் பெயரை அழித்துவிட முடியாது. புத்த பெருமானின் புனிதமான தர்மசக்கரத்தில் குறிப்பிட்டதுபோல ஜனநாயக வழியில் அனைவரையும் அரவணைத்து ஒரு முன் உதாரணமாக கரைச்சி பிரதேசசபை விளங்க வேண்டும் என்றார்.

பொலிஸ் நிலையம் வர வன்னி மக்கள் அச்சம்

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீல் தளுவத்த தெரிவித்ததாவது:

போரின் பின் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அஞ்சுகிறார்கள். அந்த உறவு பலவீனப்பட்டுள்ளது. நான் 1985 ஆம் ஆண்டில் கிளிநொச்சியின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தேன். அப்போது சிட்டிகள் கமிட்டி மிகவும் பலமுள்ளதாக இருந்தது. ஏதாவது பிரச் சினை ஏற்பட்டால் அல்லது எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் இந்த சிட்டிகள் கமிட்டியினர் பொலிஸ் நிலையங்களுக்கு வந்துவிடுவார்கள். பிரச்சினைகள் தீரும்வரை பொலிஸ் நிலையங்களை விட்டுப் போகமாட்டார்கள். இப்படியான ஒரு நல்லுறவு மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டம் வளம் மிக்க பிரதேசம். இங்கே இயற்கை வளங்கள் சூறையிடப்படுகின்றன. பெரும் செல்வமான காடுகள் அழிக்கப்படுகின்றன. நான் இங்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. அண்மையில் ஒரு முறை இரண்டு லட்சரூபா பெறுமதியான மரங்களும் இரண்டாவதாக ஐந்து லட்சரூபா பெறுமதியான மரங்களும் கடத்தப்பட்ட போது பொலிஸாரால் பிடிக்கப்பட்டன.

இந்தக் கடத்தல் சம்பவங்களில் தமிழர்களும் சிங்களவர்களும் சேர்ந்தே ஈடுபட்டுள்ளனர். எவராக இருந்தாலும் குற்றம் குற்றம் தான். இப்படியான சட்டவிரோத நடவடிக்கை களை தடுக்க பிரதேசத் தலைவர் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

தமிழரின் இரத்தம் மட்டுமா பரிசுத்தமானது?

செல்வம் அடைக்கலநாதன் தனது உரையில் தெரிவித்ததாவது:

இன்று கிறீஸ் பூத மர்மம் ஒரு தொடர்கதையாக நீள்கின்றது. இவர்கள் தமிழ்பேசும் மக் கள் வாழும் பகுதிகளில் பெண்களின் மார்பகத்தை மட்டுமே காயப்படுத்திச் செல்கின்றனர். கேரளாவில் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான புதையல் போன்று இங்கும் ஒரு பெரும் புதையலை எடுக்க இளம் பெண்களின் இரத்தம் ஒரு அதிகாரம் மிக்கவரின் பணிப்பின் பேரில் தான் சேர்க் கப்படுவதாகவும் வதந்தி அடி படுகிறது. அப்படியானால் தமிழ் மக்களின் இரத்தம் மட்டுமே புனிதமானதும் பரிசுத்த மானதும் என்று இவர்கள் உறு திப்படுத்துகின்றாரா?

இந்த அரசு கடைசிவரை அவசரகாலச் சட்டத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மாயை தான் இந்த கிறீஸ் பூதம் என்றார்.

பொறுமைக்கும் எல்லையுண்டு வேண்டாம் அரச பயங்கரவாதம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்ததாவது:

அடாவடித்தனமும் அரச பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும். சிவில் நிர்வாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எங்களுடைய வெற்றிக்குப் பின் பெரும் தியாகங்கள் இருக்கின்றன. அடக்கு முறைகளும் அடாவடித்தனங்களும் அரச பயங்கரவாதமும் தலை விரித்தாடிய போதும் எமது மக்கள் துணிச்சலாக வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். எமது ஜனநாயகப் போராட்டத்துக்கு மக்களே எமக்குக் கவசமாக இருக்கிறார்கள். இன்று பொலிஸார் சுயமாக செயற்பட முடியவில்லை? தேர்தல் தினத்தன்று எமது ஆதரவாளர் ஈ.பி. டி.பியினால் கடுமையாகத் தாக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் முன்பாகவே அவர் தாக்கப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் தாக்கியவர்களின் பெயர்கள் பதியப்பட்டும் கூட இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசுக்கு வால் பிடிக்கும் ஈ.பி.டி.பி அமைச்சரின் உத்தரவுக்ப் பயந்தே பொலிஸாரும் செயல்படுகின்றனர். பொறுமைக்கும் எல்லையுண்டு மீண்டும் வேட்டியை மடித்துக் கட் டும் நிலை உருவாக்கக் கூடாது என்றார்.

http://mykathiravan.com/ta-news/?p=13734

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.