Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயரில் மூழ்கியிருக்கும் தோழர் செங்கொடியின் குடுப்பத்தினர், உறவினர்களது துயரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொள்கிறது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-08-31 13:00:47]

Rudrakumaran_150A.jpg

தோழர் செங்கொடியின் மறைவால் ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடுப்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக தோழர்கள் மற்றும் அனைத்து உலகத் தமிழ் மக்களோடும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தனது கரங்களை தோழமையுடன் இணைத்துக் கொள்கிறது.

முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையினை நிறுத்தக் கோரி தமிழ்நாடு காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடி தீ மூட்டித் தன்னைத்தானே அழித்துக் கொண்ட செய்தியறிந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்ந்த துயர் அடைகிறது. தோழர் செங்கொடியின் மறைவால் ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடுப்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக தோழர்கள் மற்றும் அனைத்து உலகத் தமிழ் மக்களோடும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தனது கரங்களை தோழமையுடன் இணைத்துக் கொள்கிறது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தம் மீதான மரணதண்டனையினை இரத்துச் செய்யுமாறு விடுத்த வேண்டுகோளை இந்தியக் குடியரசுத் தலைவர் 11 வருடங்களின் பின் நிராகரித்த பின்னர் செப்படம்பர் மாதம் 9 ஆம் நாள் இவர்களை தூக்கிலிட இருப்பதான செய்தி ஊடகங்களினல் வெளிவந்திருந்த நிலையில் அதனைத் தடுத்து நிறுத்த தோழர் செங்கொடி தனது உயிரை ஈகம் செய்து மனிதத்துவத்தின் மனச்சாட்சியினை தட்டி எழுப்பியுள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிர் காக்கும் போராட்டத்தில் தமிழக மக்களின் உணர்வினதும் கொதிநிலையினையும் வெளிப்படுத்தும் குறியீடாக தோழர் செங்கொடியின் ஈகம் அமைந்திருக்கிறது. உயிர்களைப் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாம் இதற்கான போராட்டத்தில் மேலும் உயிர்களைள இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பது நமது துயரை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

தோழர் செங்கொடியின் ஈகத்துக்கும் வீரத்துக்கும் மதிப்பளித்து இவருக்குத் தலைசாய்த்து வணக்கம் செலுத்தும் அதேவேளை பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிர் காக்கும் போராட்டத்தில் மேலும் உயிர்களை நாம் இழக்கும் நிலை உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டியது அவசியமானது என நாம் கருதுகிறோம்.

இதற்கு வழிகோலும் வகையில் இந்திய மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் நம்மவர் மூவர் மீதான மரணதண்டனையினை இரத்துச் செய்யும் முடிவை காலமாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இம் மூவர் மீதான மரணதண்டனையினை இரத்துச் செய்யுக் கோரி தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் தலைமையில் தமிழக சட்டப்பேரவையில் அனைத்து அரசியல் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று இந்தியக்குடியரசுத் தலைவர் மூவர் மீதான மரணதண்டனையினை காலதாமதமின்றி இரத்துச் செய்யும் முடிவினை எடுக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது.

விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=49152&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.