Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனரக ஆயுதம் பாவிக்கப்பட்தை பசில் ஒத்துக்கொண்டுள்ளார்: ரொபேர்ட் ஓ பிளேக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனரக ஆயுதம் பாவிக்கப்பட்தை பசில் ஒத்துக்கொண்டுள்ளார்: ரொபேர்ட் ஓ பிளேக்

  • Monday, September 5, 2011, 0:45

போரின் போது பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்களை சிறிலங்காப்படைகள் பாவித்துள்ளமையினையும் அதனால் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதனையும் பசில் இராஜ பக்‌ஷ ஒத்துக்கொண்டுள்ளார் என ரொபேர்ட் ஓ பிளேக் கூரியுள்ளார். இது தொடர்பிலான விக்கிலீக்ஸ் செய்திகள்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விவகாரத்தை, ”தான்” இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ஷ அவர்களிடம் எழுப்பியதாக, கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத்தூதுவர் றொபேர்ட் பிளேக் அவர்கள், 2009 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி நடந்த சந்திப்பு ஒன்றில் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இணைத்தலைமை நாடுகளிடம் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது தொடர்ச்சியாக சில நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து வந்த நம்பகமான தகவல்கள் பற்றிய தூதுவரின் கரிசனைகளுக்கு, பசில் ராஜபக்ஷ அவர்கள், வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை என்று அமெரிக்க தூதரகத்தால் மார்ச் 5 ஆம் திகதி அனுப்பப்பட்ட தகவல் கூறுகிறது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் உறுதி வழங்கியிருந்தது.

”பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து விடுதலைப்புலிகளால் இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களை எதிர்த்து பாதுகாப்புப் படையினர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந்ததாக பசில் ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார்.

ஆனால், பதில் தாக்குதலாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்கள் பல பொதுமக்களைக் கொன்றதாகவும், அத்தகைய தாக்குதல்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் கடப்பாட்டை மீறுவதாக உள்ளதாகவும் அமெரிக்கத் தூதுவர் அவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அமெரிக்கத் தூதரகம் வாசிங்டனுக்கு அனுப்பியிருந்த ஆவணங்கள் கூறுகின்றன.

.

இந்தத் தகவல்கள், இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றிகொள்ளப்பட்டதாக அரசாங்கம் அறிவிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டிருந்தன.

பகிரங்கமாக கூறும் அறிக்கைகளுக்கு மாறாக, தாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக இலங்கை அரசாங்கம் உதவி வழங்கும் நாடுகளுக்கு கூறியிருந்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

.

பசில் ராஜபக்ஷ அவர்களுடனான இரு அண்மைய சந்திப்புக்களின் போது இலங்கைப் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக பசில் ராஜபக்ஷ அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அந்த விடயத்தைப் பேசுவதில் அவர் அவ்வளவு விருப்பமில்லாதவராக இருந்தார் என்றும் நோர்வே தூதுவர் கூறியிருக்கிறார்.

http://www.tamilthai.com/?p=25961

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.