Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பிக்க ரணவக்க தனது கருத்தை உடன் மீளப் பெற வேண்டும் - மனோ கணேசன் எச்சரிக்கை

Featured Replies

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமான இனவாத பிரகடனமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய கருத்தை சம்பிக்க ரணவக்க உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

இலங்கை அரசாங்கத் தலைவர்கள், எந்த நாடுகளுடன் இணைந்து யுத்தம் நடத்தினார்களோ, அந்த நாடுகளுடனையே பேசி தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாடுகளுடனான இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர முரண்பாடுகளில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்களை இழுக்கக்கூடாது.

அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுக்கக்கூடாது. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டால், அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்பதுவே சம்பிக்க ரணவக்கவின் அடிப்படை கருத்தாக அமைகின்றது.

முதலில் இத்தகைய ஒரு ஆபத்தை தமிழர்களுக்கு ஏற்படுத்தப்போவது யார் என்பதை சம்பிக்க ரணவக்க பகிரங்கப்படுத்தவேண்டும்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பிலேயே ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் கவனம் திரும்பியுள்ளது. இந்த யுத்தத்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், இந்தியாவும் பாரிய ஒத்தாசைகளை வழங்கியிருந்தன.

இந்நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாதிருந்தால் இந்த யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றிருக்க முடியாது. இது தொடர்பாக ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் பகிரங்கமாக ஏற்கனவே பலமுறை கூறியுள்ளனர்.

தற்போது இதே நாடுகள் இலங்கை அரசாங்கத்தை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சாட்டுவதாக சம்பிக்க ரணவக்கவும், அவரது கட்சியினரும் கூறுகின்றார்கள். இது இலங்கை அரசாங்கத்திற்கும், அமெரிக்க உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடைப்பட்ட பிரச்சினையாகும்.

சர்வதேச சட்டங்களுக்கு அமைய ஐநா சபைத்தான் இதை தீர்த்து வைக்கவேண்டும். யுத்தத்தின் போது அப்பாவி தமிழ் மக்கள்தான் சொல்லொண்ணா துன்பங்களுக்கு உள்ளானார்கள். பெருந்தொகையான உறவுகளை பறிகொடுத்து, அங்க அவயங்களை இழந்து, இலங்கையிலும், புலத்திலும் நிலையற்ற வாழ்க்கையை தமிழ் மக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதை இலங்கை அரசாங்கமும், சம்பிக்க ரணவக்கவும் மறந்துவிடக்கூடாது.

இப்பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து, பாரதூரமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்றதாகும். சர்வதேச நாடுகளுடனான நட்புறவுடன் யுத்தம் நடத்தும்பொழுதும், தமிழர்கள்தான் பலிகடா. தற்போது அந்த நட்புறவு முரண்பாடாக மாறிவிட்ட நிலையிலும் தமிழர்கள்தான் பலிகடா. இதுதான் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்தாக இருக்கின்றது.

எந்த நாடுகளுடன் இணைந்து யுத்தம் நடத்தினீர்களோ, அந்த நாடுகளுடனையே பேசி உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள். தயவு செய்து சர்வதேச நாடுகளுடனான இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர முரண்பாடுகளில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்களை இதில் இழுக்காதீர்கள். தமிழ் மக்களுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுக்காதீர்கள்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.