Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றின் முன்னால் ஈழத்தமிழருக்காக ஆர்ப்பாட்டம்

Featured Replies

நாடாளுமன்றின் முன்னால் ஈழத்தமிழருக்காக ஆர்ப்பாட்டம்;

கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில்

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வலியுறுத்தி நேற்றுப் புதன்கிழமை

இந்திய நாடாளுமன்றம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ஈழத் தமிழர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம அந்தஸ்து, சம உரிமை, மாநில சுயாட்சி அதிகாரம் உள்ளடக்கிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இலங்கையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கான நடவடிக்கையை உடனடியாக உறுதி செய்திட வேண்டும்; இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீத்தாராம் யெச்ரி, தில்லி மாநிலச் செயலாளர் பி.எம்.எஸ்.கிரேவால், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.கே.ரங்கராஜன், பி.ஆர். நடராஜன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலத் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே நடந்த யுத்தத்தால் நாட்டிற்குள்ளேயே புலம் பெயர்ந்த இந்த மக்கள் கடுமையான விளைவுகளை ந்திக்க நேர்ந்தது. அந்த யுத்தம் முடிந்து 2 ஆண்டுகள் கழிந்த பன்னும் விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பன்பும், இலங்கை அரசு ஒரு அரசியல் தீர்வு காண எந்த உருப்படியான நடவடிக்கையினையும் எடுக்கவில்லை; அவர்களிடமிருந்து வரும் ஆலோசனைகள் அப்படி ஒரு தீர்வு உருவாவதை கால தாமதமாக்கி தடுக்கும் முறையில் உள்ளன. நிவாரண முகாம்களில் உள்ள அப்பாவி மக்கள் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் மறுவாழ்விற்காக இந்திய அரசு அளித்த நிதியும், உதவிகளும் முழுமையாக அவர்களை சென்றடையவில்லை. தமிழ் பேசும் பகுதிகளில் அவசரகால நிலை போன்ற நிலைமை நிலவுகிறது. ராணுவம் அங்கே இருப்பது பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அமைத்த ஆலோசனைக்குழு யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகளும் போர் குற்றங்களோடு மனித உரிமைகளை மீறும் செயல்களில் ஈடுபட்டனர் என்று கண்டறிந்திருக்கிறது. அந்த கால கட்டத்தில் 40,000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர் என்ற செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது. மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் பாலியல் ரீதியாக பெண்களின் மீதான தாக்குதல், கொடுமையான சித்திரவதை திட்டமிட்ட படுகொலைகள் நடந்து முடிந்திருக்கின்றன.

இந்த சூழலில் இலங்கை நாட்டிற்குள்ளேயே தமிழ் சிறுபான்மை மக்கள் கௌரவத்துடன் சம உரிமைகள் பெற்ற குடிமக்களாக வாழ்வதற்கான ஒரு அரசியல் தீர்வு காண இந்திய அரசு ராஜதந்திர வழிமுறைகளை பயன்படுத்தி அனைத்து தேவையான முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறோம். இலங்கை அரசு எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் சிலவற்றை கீழே தருகிறோம்.

  • *இலங்கை ராணுவம் நடத்திய போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டறிய ஒரு சுயேட்சையான உயர்மட்டக்குழு அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட குழு நடத்தும் விசாரணை இலங்கை நாட்டு சட்டங்களுக்கும், சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஐ.நா. சபையின் முடிவுகளுக்கும் ஒப்புடையதாக இருக்க வேண்டும். தனி நபர்கள் மீதான பொறுப்பு தீர்மானிக்கப்பட்டு அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

  • சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
  • அவசர கால நிலை சட்டங்கள் திரும்பப்பெற வேண்டும். ராணுவம் அதன் பாசறைகளுக்கு திருப்பச் செல்ல வேண்டும். சகஜமான ஜனநாயக வாழ்வு உத்தரவாதம் செய்யப்படவேண்டும்.

  • முகாம்களில் உள்ளவர்களையும், புலம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்களையும் ஒரு குறிப்பட்ட கால அட்டவணைக்குள் மறு குடியமர்த்தப்பட வேண்டும்; அடிப்படை உரிமைகளும், பொருளாதார உதவிகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.

  • பெரிய அளவில் தமிழ் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து அதற்கு அதிகபட் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். காவல்துறை, நிலம் போன்ற விஷயங்களில் அந்த மாநில அரசாங்கங்களுக்கு நிர்வாக அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். விரிந்த அளவில் அரசியல் ரீதியான கலந்தாலோசனை நடத்தப்பட வேண்டும்; இனப்பரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

  • வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் சம உரிமை பெற்ற குடிமக்களாக அவர்கள் நடத்தப்பட வேண்டும். தமிழ் மொழிக்கு சம அந்தஸ்தது வழங்கப்பட வேண்டும். நிர்வாகம், நீதிமன்றம் காவல்துறைகளில் தமிழர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
  • இந்திய அரசும், அது கொடுக்கக்கூடிய நிவாரணம்(வீட்டு வசதிக்காக, மற்றும் அதுபோல்) யாவும் இலங்கை தமிழர்களுக்கே போய் சேருவதை உத்திரவாதம் செய்ய வேண்டும். என்றுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=45847543408564073#

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.