Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா பொறியில் சிக்குமா அரசு

Featured Replies

ஜெனிவா பொறியில் சிக்குமா அரசு

[kasi-anandan3-237x300-copy.jpg

ஜெனிவாவில் இன்று தொடங்கப் போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 18-வது கூட்டத்தொடர் இலங்கைக்கு சவால் நிறைந்த ஒன்றாகவே அமையும் என்ற எதிர் பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தக் கூட்டத் தொடரில் விவாதங்கள் ஏதும் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையிலே, அரசாங்கம் அதனை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களில் தீவிரமாக இறங்கியுள்ளது.இந்த மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் ஏதும் கொண்டுவரப்படுவதற்கு முன்னறிவிப்புகள் ஏதும் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாதுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் கடந்த கூட்டத் தொடர்களிலேயே இலங்கைக்கு நெருக்கடிகள் ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, மேற்குலக நாடுகள் இந்த விடயத்தில் இலங்கைக்கு கடும் அழுத் தங்களைக் கொடுத்து வருகின்றன. கடந்த கூட்டத் தொடரிலேயே ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றிருந்தது. அப்போதே இலங்கைக்குச் சாதகமில்லாத போக்கு வெளிப்படத் தொடங்கியிருந்தது. ஆனால், கடைசிக் கட்டத்தில் இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை வரும்வரை பொறுத் திருக்குமாறு கால அவகாசம் கோரிப் பெற்றிருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 15-ம் திகதிக்குள் வெளியிடப்பட வேண்டிய நிலையில், அதற்கு முன்னதாகவே அதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிறது அமெரிக்கா.

kasi-anandan3-237x30000.jpg

இது தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த யோசனையை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அமெரிக்கா அந்தப் பிடியில் இருந்து விலகுவதாகத் தெரியவில்லை.

இப்போது நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை ஜெனிவாவில் முன்வைக்கலாம். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் 19-வது கூட்டத் தொடரில் அது பற்றி விவாதிக்கலாம் என்கிறது அமெரிக்கா. ஆனால் இலங்கை அரசோ அதனை ஜெனிவாவுக்கு கொண்டு செல்ல முடியாது என்கிறது. இப்போது ஒருவழியாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி சுருக்கமாக விவரிக்கலாம் என்று கூறியுள்ளது அரசாங்கம். அதுவும் இப்போது இல்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரில் தான் என்கிறது அரசாங்கம். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கவோ அது பற்றி விவாதம் நடத்தவோ அரசாங்கம் தயாராக இல்லை. காரணம் அது இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தி விடும் என்ற அச்சம்தான். அதை விட இன்னொரு விவகாரமும் இதற்குள் முடிச்சுப்போடப்பட்டு கிடக்கிறது.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகி பல மாதங்களாகி விட்டன. ஆனால் அதன் மீதான மேல் நடவடிக்கை என்னவென்று இது வரை எந்தத் தகவலும் இல்லை. அறிக்கையை வெளியிட்ட பின்னர் பான் கீ மூன் தன் கையில் ஏதும் இல்லை என்று கையை விரித்துவிட்டார். ஆனால் அவர் அதனை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கோ அல்லது மனித உரிமைகள் பேரவைக்கோ மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்திருக்க முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. அதை அவர் இன்னமும் செய்யவில்லை. தன் கையில் எதுவும் இல்லை என்று கூறும் பான் கீ மூன் அதை மேல் நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரம் படைத்த சபைகளுக்கு அனுப்பாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. இது பற்றி ஐ.நா. பொதுச் செயலரின் பேச்சாளரிடம் கேள்வி கேட்டால், இலங்கை அரசின் பதிலுக்காக காத்திருக்கிறார். மேல் நடவடிக்கை பற்றி ஆராய்கிறார் என்றுதான் பதில் கூறுகின்றனர்.

san.jpg

இலங்கை அரசோ அது ஐ.நாவின் அறிக்கையல்ல மூன்று பேர் தயாரித்த அந்த அறிக்கைக்கு பதில் சொல்ல வேண் டிய அவசியம் இல்லை என்கிறது.

இந்நிலையில்இலங்கை அரசுக்கு சார்பாக பான் கீ மூன் நடந்து கொள்வதான விமர்சனங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னர்சிற்றி பிரஸ் போன்ற ஊடகங்கள் ஐ.நா. பொதுச் செயலரின் பேச்சாளர்களை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் இதுபற்றி கேட்காமல் இருப்பதில்லை. அதற்கு அவர்களும் மேல் நடவடிக்கை குறித்து ஆராய்கிறார் என்று கூறிக்கூறியே களைத்து விட்டனர். ஆனால் பான் கீ மூன் எந்தவொரு மேல் நடவடிக்கையையும் விரும்ப வில்லை போலவே தெரிகிறது. அவரிடம் இலங்கை விடயத்தில் முன்னர் இருந்த கடும்போக்கு இப்போது இருப்பதாக தெரியவில்லை.எனவே அவர் மூலம் ஐ.நாவின் எந்தவொரு சபைக்கும் இந்த அறிக்கை வரப்போவதில்லை என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது. இதனை அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளும் உணர்ந் திருக்காது என்று கருத முடியாது.

இந்தக் கட்டத்தில் தான் அந்த அறிக்கையை ஐ.நா வுக்கு கொண்டு வரும் மறைமுக நிகழ்ச்சிநிரல் ஒன்றை மேற்குலகம் முன்னெடுப்பதாகத் தெரிகிறது. இலங்கை அரசைக் கொண்டே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விவாதத்துக்கு கொண்டுவர வைத்து அதனூடாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பற்றிய விவாதத்தையும் முனனெடுப்பதே மேற்குலகின் திட்டம் போலுள்ளது. மேற்குலகின் இந்தத் தந்திரத்தை இலங்கை புரிந்து கொள்ளாமல் இல்லை. அதனால் தான் இலங்கை பற்றிய எந்தவொரு விவாத்தையும் அது அச்சத்துடன் நோக்குகிறது. அதேவேளை நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை வரும் வரை பொறுத்திருங்கள் என்று கூறிய இலங்கை அரசு இப்போது அதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்க முடியாது என்றும் கூறுகிறது. இதுவொரு முரண்பாடான விடயம். இந்த விவகாரத்தில் அரசாங்கம் இந்தக் கூட்டத்தொடரில் இல்லாது போனாலும் அடுத்த கூட்டத் தொடரில் கடும் அழுத்தங்களைச் சந்திக்கலாம்.

samar-copy.jpg

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவா கூட்டத்தெடரில் சமர்ப்பித்து அது பற்றி விவாதிக்கப்பட்டால் மேற்குலகம் நிச்சயம் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும். அதுமட்டுமன்றி இயல்பாவே ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அது ஜெனிவாவரை இழுத்து வந்துவிடும். இதனைத் தவிர்க்கவே இப்போது அரசாங்கம் போராடுகின்றது. அதற்குள் மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா இந்தக் கூட்டத்தொடரிலேயே இலங்கையை வழிக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கிவிட்டது. கடந்த மாத இறுதியில் கொழும்பு வரவிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுப்பார் என்று தகவல்கள வெளியாகின. ஆனால் அவர் கடந்த மாத இறுதியில் வரமுடியாமல் போனது. அவர் இந்த வாரம் கொழும்புக்கு வரும் வகையில் பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். இந்நிலையில் இந்தக் கூட்டத் தொடரே அரசுக்கு நெருக்கடியான தாகத்தான் அமையப் போகின்றது.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணிய மறுத்தால் அது வேறு விதமான நகர்வுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும். அமெரிக்காவுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை கடுமையாக வலியுறுத்தி வருகிறது. எனவே ஐரோப்பிய ஒன்றியம் மூலமோ அல்லது வேறு எந்த நாடு மூலமோ இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்து விடலாம் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளதில் நியாயம் உள்ளது. இதனால்தான் அரசாங்கம் முழு வேகத்தில் முறியடிப்புச் சமருக்கு தயார் படுத்திக்கொண்டிருக்கிறது. இம்முறை ஜெனிவா கூட்டத் தொடருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் என்ற பெரியதொரு அனுபவம் மிக்க இராஜதந்திரிகள் குழுவே செல்கிறது. ஜெனிவா கூட்டத் தொடருக்கு அப்பாலும் இலங்கையின் இராஜதந்திரிகள் ஓவர்ரைம் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இதெல்லாம் இந்தக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்படாமல் தடுப்பதற்கு மட்டுமன்றி அவ்வாறான தீர்மானங்கள் ஏதும் கொண்டு வரப்பட்டால் அதனை முறியடிப்பதற்கும்தான். இலங்கை அரசாங்கம் தன்மீதான தீர்மானங்களை முறியடிக்கின்ற முனைப்பில் இறங்கியுள்ள அதே வேளை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமோ அழுத்தங்களை எவ்வாறு தீவிரப்படுத்தலாம் என்று முயன்று கொண்டிருக்கின்றன. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக மேற்கு நாடுகளிடம் அரசாங்கம் பிடி கொடுத்து விட்டது அதனை விக்கிலீக்ஸ் வெளியிடும் தகவல்கள் ஆதாரப்படுத்துகின்றன. இவை எல்லாம் பிற்காலத்தில் கழுத்தை நெரிக்கும் என்று அரசாங்கம் அப்போது கனவுகூடக் கண்டிருக்காது. அப்போது அரசாங்கத்திற்கு போரில் பெற்ற வெற்றியும் அது பற்றிய மாயைகளுமே பெரிதாகத் தென்பட்டன.

இப்போது அதையயல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் மேற்குலகம் இலங்கையை அழுத்திப் பிடிக்க முனைகிறது. மேற்குலகின் அழுத்தங்களுக்கு கொஞ்சமேனும் வளைந்து கொடுக்காத கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்குமேயானால் மேற்குலகின் அழுத்தங்கள் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். ஜெனிவாவில் தொடங்கப் போகும் கூட்டத் தொடரை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது பெரிய தொரு கேள்வியாகவே இருக்கிறது. ஒருவேளை அரசாங்கம் சாமர்த்தியமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ இந்தக் கூட்டத் தொடரை சமாளித்தால கூட அதைவிடப் பெரிய கண்டமாக அடுத்த கூட்டத் தொடர் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

(நன்றி: தமிழ்மிரர்)

  • தொடங்கியவர்

Statement by Gary Anandasangaree at UNHRC

By: Gary Anandasangaree

On Spet 12, 2011, at the UN Human Rights Council's 18th Session, Gary Anandasangaree made the following statement on behalf of Lawyers Rights Watch Canada.

gary_a_1.jpg

Good Afternoon Mme. President.

Lawyers Rights Watch Canada welcomes the report of Her Excellency Ms. Navi Pillay wherein she recalled the tragic events of September 11, 2001 and remembered those who perished in the United States. The world changed that day Mme. President, and so did the fates of so many peoples.

The international effort that ensued in the name of fighting terrorism has allowed many governments to trample on individual liberties, and liberally suspend civil rights. Over the past ten years, tens of thousands of innocent lives became collateral damage. Truth and justice have become victims in what we refer to as the post-9/11 era.

One such tragedy, and one that her Excellency refers to in her report, is the deteriorating situation in Sri Lanka. The government of Sri Lanka embarked on a no-holds barred attack against the Liberation Tigers of Tamil Eelam, and in doing so, ignored the plight of innocent Tamil civilians. The laws of war were broken by all sides of the conflict.

His Excellency, the United Nations Secretary General Ban Ki-Moon named a panel of international experts to advise him on accountability issues in Sri Lanka. The report found credible evidence, if proven, will establish that the Sri Lankan government and the LTTE, committed war crimes and crimes against humanity.

I note that the Minister of Plantation and Industries of Sri Lanka, Mr. Samarasinghe, has once again visited the Human Rights Council and has made statements, that vilify any attempts to hold the parties to the war in Sri Lanka to account. The Sri Lankan government is relying on an internal mechanism established immediately following the end of the war, called the Lessons Learnt and Reconciliation Commission. The Commission is flawed for various reasons, the most troubling of which, as illustrated in Amnesty International’s most recent report, is the lack of independence, jurisdiction, due process, and protection for witnesses to the commission. The people affected by the war do not have the confidence that this commission will bring about reconciliation of any form, let alone accountability.

Unfortunately, many governments have placed a great deal of trust in this internal process, and as flawed as it maybe, there is a tendency to defer to the internal process undertaken by member states, including Sri Lanka. This may be an appropriate time in the mandate of the Human Rights Council to embark on a fundamental debate on the role of the UN bodies, including this Council. It is imperative that the UN Human Rights system act as a deterrent to breaches of international human rights laws, and war crimes, and deterrence can only take place where there is consistency in the application of the law, and proper investigation and prosecution of it. Mme. President, the Human Rights Council must act swiftly to bring about justice in Sri Lanka. The first step to that long process is to adopt the recommendations of the Secretary Generals Panel of Experts on Accountability in Sri Lanka.

Thank you, Mme. President.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.