Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த குடும்பத்துக்கென விசேட ஹெலிகள் கொள்வனவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த குடும்பத்துக்கென விசேட ஹெலிகள் கொள்வனவு!

Published on September 13, 2011-9:20 am

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருக்கு மிக நெருக்கமானவர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காகவே ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகள் வாங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரச வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ரஷ்யநாட்டு கடனுதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ள ஹெலிகளின் பெறுமதி 135 கோடி ரூபாவாகும். அதற்கமைய அரசு ரஷ்யாவிடமிருந்து கடனுக்கு வாங்கவுள்ள 14 ஹெலிகளுக்கும் 1895 கோடி ரூபாவைச் செலுத்த வேண்டியுள்ளது.

அரசு வாங்கவுள்ள இந்த ஹெலிகள் பிரபுக்களின் பயன்பாட்டுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளன.

விசேட இலங்கை விமானப்படை மற்றும் ரஷ்யாவிலுள்ள “ரொசொ பொரொன் எக்ஸ்போர்ட்” நிறுவனத்துக்குமிடையே இந்த ஹெலிகளின் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவற்றைத் தருவிப்பது தொடர்பாக அரசும் விமானப்படையும் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே தெரிவிக்கின்றன.இந்த ஹெலிகள் இலங்கையின் கடல் வலயத்தைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் தொடர்பாகவே தருவிக்கப்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஆனால் விமானப்படைத்தளபதி எயார்னவஸ்மாஷல் அர்ஸ அபேகுண வர்த்தனவின் கூற்றுக்கு அமைய, இந்த ஹெலிகள் சிவில் விமானப்போக்குவரத்துச் செயற்பாடுகளை விரிவுபடுத்தவே தருவிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உலங்குவானூர்தியொன்றில் ஒரு தடவை ஒன்பது பயணிகள் மட்டுமே பயணிக்கும் வசதிகளைக் கொண்டுள்ளது. இரண்டு ஹெலிகளை முன்பு தருவிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு அதுதொடர்பாக 231 கோடி ரூபாய்கள் செலவு ஏற்படும் என்று “லங்கா” செய்திப்பத்திரிகை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=34288

எப்படி இருந்தாலும் மகிந்த வட்டத்திற்குள் வெடிப்புக்கள் நிச்சயம் பெருக்கும்.

பலரும் 'எரிகின்ற வீட்டில் பிடுங்கியது மிச்சம்' என பொருளாதார கொள்ளைகளில் ஈடுபடுவர். தான் தான் தப்ப தாழும் கப்பலில் இருந்து பாயும் எலிகள் போல பலரும் பாயலாம், காட்டியும் கொடுக்கலாம். தம்பிமாரே அண்ணன்மாரை போட்டுக்கொடுக்கலாம்; புரூட்டஸ் முதுகில் குத்த ஜூலியஸ் 'நீயுமா?' எனக்கேட்கலாம்.

தப்பி சீனாவுக்கு ஓட ஹெலிகள் காணாது, மாலைதீவுக்காக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.