Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சிறிலங்காவை நெருக்கும் மனித உரிமை அமைப்புக்கள் ! (காணொளி இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

temp_sep11-300x225.jpg

(ஜெனீவா) ஐ நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வெளிப்படுத்தி வருவதாக கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் நாதம் ஊடகசேவைக்கு தெரிவித்துள்ளனர்.

Lawyers Rights Watch Canada, Asian Forum for Human Rights and Development, Amnesty International போன்ற மனித உரிமை அமைப்புக்கள் சிறிலங்கா தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன.

போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என்பதை தமது அமைப்பு தரவுகளுடன் நிருபித்துள்ளதாக Amnesty International பிரதிநிதி தெரிவித்தார்.

சிறிலங்கா அரசின் முக்கிய பதவிகளில் உள்ளவர்களின் அனுசரணையுடன் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அதை செய்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்கள் தமது நிபுணர் குழு தயாரித்து அளித்த சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை, மனித உரிமைகள் பேரவையின் இக்கூட்டதொடருக்கு சமர்பித்திருப்பதை தாம் வரவேற்பதாகவும் Amnesty International பிரதிநிதி தெரிவித்தார்.

சிறிலங்கா அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீன தன்மை அற்றது எனவும் அதன் அதிகாரங்கள் போர்குற்ற விசாரணைகளை நடத்த போதுமானதல்ல என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ நா நிபுணர் குழுவினது அறிக்கையையும், சிறிலங்கா அரசினது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும், மனித உரிமைகள் பேரவை ஆராய்ந்து எதிர்வரும் மார்ச் 2012 கூட்டத் தொடரில் சிறிலங்காவிற்கு உதவியாக ஒரு சுயாதீன சர்வதேச அமைப்பை நிறுவி சிறிலங்காவில் மனித உரிமைகள் காக்க நடவடிக்கை எடுக்கும்படியும் Amnesty International பிரதிநிதி நிறைவாக கேட்டுக்கொண்டார்.

ஆசிய நாடுகளில் பயங்கரவாத்துக்க எதிரான நடவடிக்கைகள் என கூறப்பட்டு நீதிக்கு புறம்பாக மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தனதுரையை மையமிட்ட Asian Forum for Human Rights and Developmentபிரதிநிதி சிறிலங்காவை தனதுரையின் ஆதாரபுள்ளியாக கொண்டு உரையை வழங்கினார்.

சிறிலங்காவில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலீடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள், அவசகால சட்டத்தைவிட பலமடங்கு மோசமானதென Asian Forum for Human Rights and Developmentபிரதிநிதி தனுதுரையில் தெரிவித்தார்.

http://youtu.be/0FJSBRR5EvY

http://youtu.be/DBbu7JOMIUg

http://youtu.be/HlcpDkgqG2g

இராணுவம், காவல்துறை, நீதித்துறை, சிவில் அதிகாரிகள் என சகலமட்டங்களில் இருந்தும் பொதுமக்களுடைய மனித உரிமைகள் அப்பட்டமாக மீற்றபடுவதோடு, அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விசாரணையின்றி தடுத்தல், கைது செய்தல், காணமல் போதல் போன்ற மனித உரிமை மீற்கள் தொடர்சியாக மீறப்பட்டுவருவதாக குறிப்பிட்டு பேசிய பிரிதிநிதி, விரைவில் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்யவிருக்கின்ற மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், மனித உரிமைகள் குறித்தான உறுதிப்பாட்டை அந்தந்த நாடுகளுக்கு இடித்துரைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, மொறிசியஸ் தீவில் இடம்பெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் மனித உரிமைகள் குறித்தான தங்களது தெளிவான நிலைப்பாட்டடை சார்க் உறுப்பு நாடுகள் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் Asian Forum for Human Rights and Development பிரதிநிதி கேட்டுக் கொண்டார்.

நாதம் ஊடகசேவை

http://mykathiravan....a-news/?p=14663

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.