Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மலேசியாவின் தீர்வு தீர்வாகாது" அகதிகளைத் திருப்பி அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும்! ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மலேசியாவின் தீர்வு தீர்வாகாது" அகதிகளைத் திருப்பி அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும்! ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

[Thursday, 2011-09-15 09:05:40]

அகதிகள் கடல் வழியாக வந்த வண்ணம் இருப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மலேசிய அரசுடன் ஆஸ்திரேலிய அரசு "மலேசிய தீர்வு" ஒப்பந்தத்தை மேற்கொண்டது.இந்த அகதிப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் படி இங்கு வந்து இறங்கியுள்ள 800 அகதிகள் ஏற்கனவே மலேசியாவில் வந்து தங்கி இருக்கும் பரிந்துரைக்கப் பட்ட 4000 அகதிகளுக்குப் பதிலாக 'அகதிப் பரிமாற்றம்� செய்யப் படுவர்கள் என்பதே அரசின் திட்டமாகும்.

இந்த விவகாரம் உச்ச நீதி மன்றம் வரை எட்டிப் பார்த்தது.கடந்த சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.. தலைமை நீதிபதி ராபர்ட் ஃப்ரென்ச் உள்ளிட்ட நீதிபதிகள் குழு அரசின் திட்டத்துக்கு எதிரானத் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி அகதிகளை வெளியேற்றுவது நிரந்தரமாக , உடனடியாக நிறுத்தப்படவேண்டும்என்று உத்தரவிடப்பட்டுள்ளது. s 198A of the Migration Act 1958 (Cth) சட்டப் பிரிவின் படி, அமைச்சர் அகதிகளை வேறு நாட்டுக்கு அனுப்ப ,அந்நாடு மூன்று தகுதிகளை பெற்ற்றிருக்க வேண்டும்.

முதலாவது, சர்வதேசச் சட்டத்தின் கீழ் அல்லது அதன் உள்னாட்டு சட்டத்தின் கீழ் அந்தநாடு அகதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை சட்ட பூர்வமாக மேற்கொள்ளும் உரிமைகளையும் வசதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.அடுத்து அந்தநாடு அகதி உரிமையைத் தீர்மானித்து வழங்கும் அதிகாரத்தை பெற்றிருக்கவேண்டும்.அப்படி அந்தநாடு அகதி உரிமை தீர்மானிக்கும் பட்சத்தில் அகதிகள் தாமாகவே விரும்பி தங்கள்மூலநாட்டுக்கு திரும்பிட விரும்பாவிடில் தகுந்த பாதுகாப்பு வழங்கும் வசதியை பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்றையும் தவிரஆபைசயவiடிn ஹஉவ 1958 சட்டத்தின் கீழ் 'தகுந்த பாதுகாப்பு' வழங்கிட சர்வதேச தரத்தில் மனித உரிமைகளின் தரம் அங்குஇருக்க வேண்டும். மலேசியமனித உரிமைகளின் தரம் சர்வதேச தரத்தில் இல்லை என்பதை இத்தீர்ப்பில் உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் உச்ச நீதி மன்றம், மலேசியாவினால் அகதிப் பாதுகாப்புக்கு உறுதியளிக்கமுடியாது. மலேசியா ஐக்கிய நாடுகளின் அகதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. மலேசியாவில் சர்வதேச சட்டங்களுக்கு இசைந்தஉள் நாட்டு அகதிச் சட்டங்கள் இல்லை.இந்தக்காரணங்களின் அடிப்படையில் அகதிகளை மலேசியாவிற்கு அனுப்ப முடியாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதி மன்றத்தின் இந்த முடிவை விடியலுக்காக ஏங்கும் அகதிகளும் அகதி ஆதரவு மற்றும் மனித உரிமை இயக்கங்களும் பாராட்டி உள்ளன. இந்த உச்சநீதிமன்றத்தீர்ப்பு உலக அளவில் வரவேற்புபெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அரசுக்கு இது பெரும் தோல்வியாக அமைந்துள்ளது. பல மனித உரிமை ஆய்வாளர்களும் பேராசிரியர்களும் உச்ச நீதி மன்றத்தின் தீர்வை பாராட்டி உள்ளனர். 'க் ரின் மற்றும்' 'கூட்டு எதிர்கட்சி' ஏற்கனவே அகதிப் பரிமாற்றம் குறித்து அதிருப்தி தெரிவித்து உள்ளன.இதனால் தற்போதைய அரசு இவ்விவகாரத்தில் மாற்று முடிவை எடுக்கவிரும்பிசட்டம் இயற்றப் போதுமான ஆதரவு கிட்டாது என்பதே உண்மையாகும். ஆப்பிழுத்த கதையாக அரசு அகதிகள் விவகாரத்தில் மாட்டிக் கொண்டு முழிக்கிறது. அடுத்த முடிவு என்ன என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=49774&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உடணடியாக தொழிற் கட்ச்சி ஒரு இரவிலே பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட வெளிவிவகார அமைச்சர் கெவின் ரட்டை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் மீண்டும் தொழிற் கடச்சி ஆட்சிக்கு வரவேண்டுமா இருந்தால் அதான் ஒரு வழி................

இல்லை பிரதமர் ஜீலியா கி;ல்லாhட்.....எந்த தொகுதியில் நிண்டாலும் சுண்டலுடன் கடுமையாக மோதவேண்டி வரும்......எது வசதி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.