Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தன்பக்கம் இழுக்க மகிந்த மேற்கொண்ட இரகசிய முயற்சி அம்பலம்

Featured Replies

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தன்பக்கம் இழுக்க மகிந்த மேற்கொண்ட இரகசிய முயற்சி அம்பலம்

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை மாற்றயமைக்கும் நோக்குடனேயே மூத்த அமைச்சரான டி.யூ.குணசேகரவை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாக கொழும்பு ஊடக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

இலங்கைத் தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பில் கடும் போக்குடன் இருக்கின்ற வைகோ மற்றும் நெ;மாறன் போன்றவர்களைக் கையாள்வதைவிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை கையாள்வது இலகுவானது என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருதியுள்ளார்.

இது குறித்து அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்h ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கும் போது, 'விடுதலைப் புலிகளுக்குப் பின்னாலேயே வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் எப்போதும் நிற்பார்கள். ஆனால் இலங்கை தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு இது குறித்து எடுத்து விளக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருக்கும் நீங்கள் இங்குள்ள நிலைமைகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏன் விளக்கம் அளிக்க முடியாது' என டி.யூ.குணசேகரவைப் பார்த்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டி.யூ.குணசேகர, அதற்கான முயற்சிகளை தான் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறவே, அவரை உடனடியாகவே இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணித்துள்ளார். அத்துடன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து போருக்குப் பிற்பட்ட நிலலவரங்கள் குறித்து எடுத்துக் கூறுமாறும் டி.யூ.குணசேகரவிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸூம், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவும் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த நிலையில், டி.யூ. குணசேகரவை பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமித்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதி வெளிவிவகார அமைச்சர் பதவியுடன் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், இந்திய விஜயத்தின் போது தனக்குத் தேவையானன தகவல்களைத் திரட்டிக் கொண்ட சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டி.யூ.குணசேகர கடந்த 7ஆம் திகதி புதடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். அத்துடன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான டி.ராஜாவை அக்கட்சியின் தலைமையகத்தில் கடந்த 8ஆம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பின் போது பேரினவாத சிறிலங்கா அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வாறு கூட்டுச் சேர்ந்திருக்கின்றன என டி.ராஜா சிறிலங்காவின் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இக்கேள்விக்குப் பதிலளித்த டி.யூ.குணசேகர சிறிலங்கா அரசாங்கம் பேரினவாத அரசாங்கம் அல்ல என்றும், இலங்கையின் களநிலைமைகள் குறித்து இந்தியா தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஸ் கரட்டையும் சந்தித்து போருக்குப் பிற்பட்ட இலங்கையின் நிலைமைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதேவேளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்திய குழு உறுப்பினர்களையும் கடந்த 8ஆம் திகதி இரவு ஒன்றாகச் சந்தித்து சிறிலங்காவின் அமைச்சர் டி.யூ.குணசேகர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பில், போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கை, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் அவர் எடுத்துக் கூறியுள்ளார். அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட்ட மேற்கத்தைய நாடுகள் சில செயற்படுவதாகவும் டி.யூ.குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த 9ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய சிறிலங்காவின் அமைச்சர் டி.யூ.குணசேகர அன்று பிற்பகலே கொழும்பு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={42D8FA80-1239-4430-A726-B2448A89C3EC}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.