Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனைகளின் கீழேயே மீண்டும் பேச்சுக்கு இணங்கினோம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suresh%20pireemachchandiran.jpg

அரசுடனான பேச்சுகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பதற்கான சாத்தியம் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது. எவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு இணங்கினோம் என்பதை விரைவில் அறியத்தருவோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச்செயலர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவந்த பேச்சுகள் அண்மையில் முறிவடைந்தன.

10ஆம் சுற்றுப் பேச்சுகள் கடந்த மாதம் 04ஆம் திகதி நடைபெற்றன. இதன் போது இதுவரை நடந்து முடிந்த பேச்சுகளில் எந்தவித முன்னேற்றமுமில்லை.

எனவே, நாம் முன்வைக்கும் மூன்று கோரிக்கைகளுக்கு அரசு இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலம் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் பேச்சுகளைத் தொடர்வதில் பயனில்லை என அறிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுகளிலிருந்து தற்காலிகமாக விலகியது.இரு சாராரும் தத்தமது பக்கங்களின் நியாயங்களை எடுத்துரைத்து அனல் பறக்கும் அறிக்கைகளை விடுத்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகள் அமைப்பு போன்று செயற்படுகின்றது என அரச தரப்பு குற்றம் சுமத்தியிருந்தது. அதேபோன்று, முன்னேற்றம் எதுவுமின்றி பேச்சைத் தொடர்வதில் என்ன பயன் என்று கூட்டமைப்பு சுட்டிக் காட்டியிருந்தது. கூட்டமைப்பு வழங்கிய கால அவகாசமும் முடிந்தது. ஆனால் அரச தரப்பு எவ்வித பதில்களையும் கூட்டமைப்புக்கு அறிவிக்கவில்லை. மாறாக மீண்டும் பேச்சுகளை ஆரம்பிப்பதற்குத் தயார் என்றே கூறிவந்தது.

அரசு கூறுவதுபோல எம்முடன் பேச்சுகளைத் தொடர உண்மையாகவே விரும்பினால் நாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எழுத்துமூலம் பதிலளிக்கட்டும். அதன் பின்னர் ஏனைய நடவடிக்கைகள் குறித்து சிந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது.

இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் முறிவடைந்துள்ள பேச்சுகளைத் தொடர்வதற்கு இருதரப்பும் இணங்கியுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கேட்கப்பட்டபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

எமது கோரிக்கைகளுக்கு எழுத்து மூலம் பதிலளிக்கத் தயார் என அரச தரப்பே முதலில் எமக்கு உறுதியளித்தது. அவ்வாறு உறுதியளித்தபின்னர் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். எனினும், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேச்சுகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான சாத்தியம் உள்ளது.

அது நாளையாகவும் இருக்கலாம்.(அதாவது இன்று)எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் இணங்கினோம் என்பதையும் விரைவில் அறியத்தருவோம் என்றார்.ஆட்சி அதிகாரமுறைமை, மத்திய மாநில அரசுக்கிடையிலான விடயதானம், செயற்பாடுகள் மற்றும் வரி நிதி அதிகாரங்கள் ஆகிய மூன்று விடயங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளாகும் என்றார்.

http://www.eeladhesa...ndex.php?option

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டலுக்குப் பணிந்தாரா சம்பந்தன்? மஹிந்தவுடனான இரகசிய சந்திப்பில் நடந்தது என்ன?!

Published on September 16, 2011-1:21 pm No Comments

mahinda_sampanthan-150x150.jpgபத்துச் சுற்றுப் பேச்சுக்களுடன் இடைநடுவில் முறிந்துபோன அரசு கூட்டமைப்பு இடையிலான பேச்சு இன்று மீண்டும் ஆரம்பமாக உள்ளது. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான அரச குழுவினரும் நாடாளுமன்றத் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான குழுவினரும் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த மாத ஆரம்பத்தில் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தனை தனிப்பட அழைத்து ஜனாதிபதி பேசியதன் அடிப்படையில் இன்றைய பேச்சுக்கு இரு தரப்பினரும் இணங்கினர் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்துத் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

எனினும் பேச்சுக்களின் போது என்ன விடயங்கள் குறித்து ஆராய்வது என்பது தொடர்பிலும் இணக்கம் காணப்படும் விடயங்களை உடன் நடைமுறைப்படுத்துவது என்றும் இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டனர் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் ஊடகமான உதயன் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பமான அரசுகூட்டமைப்பு பேச்சுக்கள் 10 சுற்றுக்கள் இடம்பெற்றன. எனினும் அடைவுகள் எவையும் காணப்படவில்லை. இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி வந்தது.

இறுதியில் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுக்களில் கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை முன் வைத்தது. ஆட்சி அதிகாரக் கட்டமைப்பு, மத்திய அரசுக்கும் அதிகாரப் பகிர்வு அலகுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட உள்ள பகிர்வுகள் மற்றும் பங்கீடுகள், நிதிக் கையாளுகை மற்றும் வரி அறவீடு என்பன தொடர்பான அரசின் நிலைப்பாட்டை விளக்க இருவார கால அவகாசம் கொடுத்த கூட்டமைப்பு, அதுவரை அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதியைக் குறிப்பிட மறுப்புத் தெரிவித்தது.

எனினும், கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது என்று தெரிவித்த அரசு, விடுதலைப் புலிகள் போன்ற நடத்தையை கூட்டமைப்பு வெளிப்படுத்துவதாகவும் சாடி இருந்தது. கூட்டமைப்பின் கோரிக்கைகள் குறித்து அரசு எதனையும் வெளிப்படையாகப் பதிலளிக்காத நிலையில் இன்றைய பேச்சு ஆரம்பிக்கப்படுகிறது என்று அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சனல் 4 காணொளி வெளியாகிய காலப் பகுதியிலும் இரா.சம்பந்தனை அழைத்து அமெரிகாவிற்கோ, இந்தியாவிற்கோ அஞ்சப் போவதில்லை என்று மஹிந்தராஜபக்ச மிரட்டல் விடுத்திருந்ததாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந் நிலையில் சம்பந்தனை அழைத்த மஹிந்த மிரட்டியே பேச்சுக்கு சம்மதிக்க வைத்திருக்கலாம் என்கின்றனர் நோக்கர்கள்.

http://www.saritham.com/?p=34645

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.