Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியார் தீர்வு தவிர்க்க முடியாது போகலாம்

Featured Replies

சிறிலங்காவின் இராஜ தந்திரியான பாலிகக்கார ஒருமுறை கூறி இருக்கின்றார் வெளியார் தீர்வுகள் தவிர்க்க முடியதனவாக “external prescriptions become inevitable” போகலாம் என்று. இந்த பீதி மஹிந்த இராஜபக்‌ஷவிற்கும் உண்டு..

அதனால்தான் மஹிந்த இந்த முறை ரொபேர்ட் பிளேக்கினை சந்தித்ததும், பிளேக்கிற்கு எதிர்ப்பு காட்டாமல் விட்டதும் ஆகும் என்றாலும் பிளேக்கினை புறக்கணிக்கும் வேலையினை இந்த முறை தனது வளர்ப்பு நாய்களான டக்ளஸ் மற்றும் கருணா ஊடாக தமிழ் பிராண்ட் போட்டு செய்து முடித்துள்ளார். இது பிளேக்கிற்கு புரியாத விடயம் அல்ல.

.

அடுத்து 40 நாட்களுக்கும் முன்னர் கூட்டமைப்புடன் பேச முடியாது அவர்கள் தமிழர்களின் பிரதி நிதிகள் என ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய மஹிந்த இப்போ அலரி மாளிகையில் தானாக அழைத்து பேசுகின்றார்..

இவை எல்லாம் ஜெனீவா மாநாட்டில் தமக்கு எதிராக வரும் அழுத்தங்களை சரிசெய்வதற்கும் எதிர்ப்பதற்குமான இராஜ தந்திர நடவடிக்கைகளே. மறுவளமாக சர்வதேசத்தை ஏமாற்றும் உத்திகளே. ஆனால் இந்த உத்திகள் எதுவரை செல்லும் என்பதுதான் அடுத்த கட்ட கேள்வி. ஒருவழியாக இந்த முறை ஜெனீவா கூட்டத்தொடரில் தமக்கு எதிரான தீர்மானம் இன்றி மஹிந்த அரசாங்கம் தப்பிவிட்டது..

இது ஒரு மஹிந்த அரசாங்கத்திற்கு ஒரு தற்காலிக வெற்றியாக இருக்கலாம். ஆனால் சர்வதேசத்தை பொறுத்தவரை சிறிலங்காவிற்கு ஒரு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறலாம். இந்த சந்தர்ப்பத்திற்கான காலம் 2012 மார்ச் மாதம் ஆகும்..

இதில் சிறிலங்காவிற்கு இரண்டு முக்கியமான விடயங்கள் உள்ளன. ஒன்று நவம்பர் மாதம் வெளியிடப்போவதாக கூறும் நல்லிணக்க ஆணிக்குழு அறிக்கையினை எப்படி வெளியிடுவது? எவற்றை உள்ளடக்குவது? யாரைப் பலிக்கடாவாக்குவது?அதனை ஐக்கிய நாடுகளுக்கு சமர்ப்பிப்பதா இல்லையா?.

அடுத்ததாக கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை இதில் எவ்வாறான தீர்வு ஒன்றினை வழங்குவது? இந்த இரண்டு விடயங்களிலும் நியாயமாக செயற்படாவிட்டால் 2012 மார்ச் மாதம் மனித உரிமை கூட்டத்தொடரில் சிறிலங்கா நிச்சயமாக தாக்கப்படும்..

அமெரிக்கா உட்பட்ட மேற்கத்தைய நாடுகளின் மார்ச் வரைக்குமான சிறிலங்காவிற்கான காலக்கெடுவினை சிறிலங்காவின் ஆதரவு சக்திகளும் நியாயமானதொன்று என கருத தொடங்கிவிட்டன..

இந்த காலப்பகுதி மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு ஒரு சோதனைக்காலமாகத்தான் இருக்கும் என அயல் நாட்டு ஊடகக்ங்களும் கூறுகின்றன. அமெரிக்க முன் நாள் தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்,ஹிட்லர், முசோலினி ஆகியோர்கள் தமது வெளி நாட்டுக்கொள்கையில்; எம்முடன் சேர்ந்திருப்போர்கள் எல்லோரும் நண்பர்கள் மற்ற அனைவரும் பகைவர்கள் என்றனர். அல்லது எம்முடன் சேராதிருப்போர்கள் துரோகிகள் அல்லது பயங்கரவாதிகள் என்றனர். உண்மையில் மஹிந்த இராஜபக்‌ஷவும் அப்படித்தான் தனக்கு எதிரான உள்ளூர் மற்றும் வெளியூர் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகளை அவ்வாறுதான் அழைத்தார். மட்டுமன்றி உலக நாடுகளையும் அவ்வாறே பிரித்துப்பார்த்தார்..

ஆனால் அண்மையில் அமெரிக்க துணை இராஜாங்க செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் கருத்துரைக்கையில்; நாம் மனித உரிமை ஆணையகம் மற்றும் மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்காவின் உரிமை மீறல் தொடர்பில் ஆக்கபூர்வமாக இணைந்து பணி செய்வோம் என கூறினார். அத்துடன் இந்த செயற்பாடுகளில் எல்லாவற்றையும் விடுதலைப்புலிகள் என சாயம் பூசும் கொள்கையினை புறக்கணிப்போம் எனவும் கூறினார். இது மஹிந்த இராஜபக்‌ஷ குடும்பத்திற்கான நேரடியான எச்சரிக்கையாகவும் பார்க்க முடியும்.

.

இந்த சூழலில் மஹிந்த இராஜபக்‌ஷ சில நடவடிக்கைகளை எடுத்தே ஆகவேண்டும் அல்லது வெளியர் தீர்வுகள் தவிர்க்க முடியாதவையாக போகலாம். இது துஷி ரணதுங்க அவர்களினால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் சுருக்கம்

Eelanatham

அடுத்ததாக கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை இதில் எவ்வாறான தீர்வு ஒன்றினை வழங்குவது? இந்த இரண்டு விடயங்களிலும் நியாயமாக செயற்படாவிட்டால் 2012 மார்ச் மாதம் மனித உரிமை கூட்டத்தொடரில் சிறிலங்கா நிச்சயமாக தாக்கப்படும்..

இந்த எதிர்வு கூறல் சரியா பிழையா தெரியாது.

ஆனால் அண்மையில் அமெரிக்க துணை இராஜாங்க செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் கருத்துரைக்கையில்; நாம் மனித உரிமை ஆணையகம் மற்றும் மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்காவின் உரிமை மீறல் தொடர்பில் ஆக்கபூர்வமாக இணைந்து பணி செய்வோம் என கூறினார். அத்துடன் இந்த செயற்பாடுகளில் எல்லாவற்றையும் விடுதலைப்புலிகள் என சாயம் பூசும் கொள்கையினை புறக்கணிப்போம் எனவும் கூறினார். இது மஹிந்த இராஜபக்‌ஷ குடும்பத்திற்கான நேரடியான எச்சரிக்கையாகவும் பார்க்க முடியும்.

Eelanatham

தமிழர்கள் எல்லோரும் புலிகள் என்பதை பிளெக் ஒத்துகொள்ள வேண்டும். இதில் சம்பந்தர், உருத்திரா உள்ளடங்க எல்லோரும் அடங்குவர். இவர்களில் யாரும் மயிலே, மயிலே இறகுபோடு என்று மயிலிடம் இறகு வாங்கி வரலாம் என்று எண்ணுபவர்கள் இல்லை. அதேநேரம் புலிகளும் பயங்கரவாதிகள் அல்ல, சுதந்திர போரளிகள் என்பது வெளிநாடுகளுக்கு நிரூபிக்கபடாவிட்டால் சம்பந்தர் ஏன் உரிமைப்பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பது யாருக்கும் விளங்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.