Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசால் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை அமெரிக்காவுக்கு தெரிந்திருந்தது - விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 08:07 GMT ] [ நித்தியபாரதி ] vanni%20-%20civilian.jpg

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிற்கும் வெளியேயும் நாளொன்றிற்கு சராசரி 63 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் யுத்தம் தீவிரமடைந்திருந்த போது அங்கு கொல்லப்பட்ட மக்களின் சராசரி எண்ணிக்கையானது மாதாந்தம் அதிகரித்துக் கொண்டு சென்றதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது நாட்டின் இராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தது.

07.04.2009 அன்றய தினம் ஐ.நாவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் ஜனவரி 20 தொடக்கம் ஏப்ரல் 06 வரை 4164 தமிழ்ப் பொதுமக்கள் சிறிலங்காவில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டதாக அமெரிக்கத் தூதர் றொபேற் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

Vanni-civilian01.jpg

இதே காலப்பகுதியில் 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் வோசிங்டனுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பகமான வட்டாரங்களின் மூலம் தொகுக்கப்பட்ட பொதுமக்கள் இழப்புக்கள் தொடர்பான எண்ணிக்கையை ஐ.நா வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 07 அன்று சிறிலங்கா இராணுவமானது "மிக ஒடுங்கிய 17 கிலோமீற்றா நீளமான முல்லைத்தீவின் கரையோரப் பிரதேசத்தில்" அகப்பட்டுக் கொண்ட பல ஆயிரக்கணக்கான மக்களை இலக்கு வைத்து இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக அமெரிக்கத் தூதரகத்தால் வழங்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறிருப்பினும், "இது பாதுகாப்பு வலயத்திற்குள்ளா அல்லது அதற்கு வெளியே மேற்கொள்ளப்பட்டதா" என்பது தொடர்பாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்படவில்லை.

ஜனவரி 2009 இல் இடம்பெற்ற யுத்தத்தில் நாளொன்றிற்கு 33 பேர் கொல்லப்பட்டதாகவும் அது பின்னர் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் 63 ஆக அதிகரித்ததாகவும் அமெரிக்கத் தூதரகத்தின் தகவற் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஜனவரி 2009ல் நாளாந்தம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 184 ஆகவும், பெப்ரவரியில் அது 145 ஆகவும், மார்ச்சில் 115 ஆகவும் இருந்துள்ளது" என இது தொடர்பான இரகசியங்களை அம்பலப்படுத்திய இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் இடம்பெற்ற பொதுமக்கள் இழப்புக்கள் தொடர்பான நம்பகமான இப்புள்ளிவிபரங்களானது, குறைந்த எண்ணிக்கையாக உள்ளதுடன், சுகாதார சேவையின் பிராந்தியப் பணிப்பாளர்கள், கத்தோலிக்க மதகுருமார், உதவி அரசாங்க அதிபர்கள், அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த 213 தேசிய பணியாளர்கள் ஆகியோரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே ஐ.நாவானது தனது புள்ளிவிபரத்தைத் தயாரித்ததாகவும் அமெரிக்கத் தூதர் பிளேக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கமானது பெப்ரவரி 12,2009 அன்று முல்லைத்தீவுக் கரையோரப் பிரதேசத்தில் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனப்படுத்தியதன் பின்னர் 2452 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 5000 பேர் வரை காயமடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களுக்கு மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பொருட்டே பொதுமக்கள் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்டது" என சிறிலங்கா இராணுவம் தெரிவித்திருந்தது.

"பாதுகாப்பு வலயத்திலுள்ள ஐ.நாப் பணியாளர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வலயத்தின் மீது நாளாந்தம் எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதுடன், வான்குண்டுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுகின்றன" என ஏப்ரல் 07, 2009ல் அனுப்பப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ-35 நெடுஞ்சாலைக்கு அருகில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் 860 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 3339 பேர் வரை காயமடைந்ததாகவும் ஐ.நாவின் புள்ளிவிபரம் தெரிவிப்பதாக அத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தோலிக்க தேவாலயம் ஒன்றால் பலாத்காரமாகப் படையில் இணைக்கப்பட்ட சிறார்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்திலிருந்த தேவாலயம் ஒன்றில் தஞ்சம் கோரியிருந்த 400 வரையான சிறார்களைப் பலாத்காரமாகப் படையில் இணைப்பதற்காக, "தமிழீழ விடுதலைப் புலிகள் அத்தேவாலயத்தை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து அச்சிறார்களைப் பலவந்தமாகக் கொண்டுசென்றதாகவும்" மன்னார் ஆயார் தெரிவித்ததாக அமெரிக்கத் தூதர் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் பங்குகொண்ட சிறிலங்காப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் பல்வேறு போர்க்குற்றங்களை மேற்கொண்டுள்ளனர் என்பதை சாட்சியங்களுடன் உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையானது தற்போது ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஐ.நா செயலாளர் நாயகத்தால் கையளிக்கப்பட்டிருந்தது.

செய்தி வழிமூலம்: பிபிசி

மொழியாக்கம்: நித்தியபாரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.