Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 15 இலங்கைத் தமிழர்கள் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 15 இலங்கைத் தமிழர்கள் விடுதலை

  • Monday, October 3, 2011, 10:53

தமிழ்நாடு செங்கல்பட்டு இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 15 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 41 இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீது சில வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதில் 15 இலங்கை தமிழர்கள் மீதான வழக்குகள் முடிவுற்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுவித்து தங்கள் உறவினர்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர்.

அவர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சு நடத்தி, வழக்குகள் முடிந்தவர்களை மட்டும் விடுவிப்பதாக உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், வழக்குகள் முடிவடைந்த பின்னரும், இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, காஞ்சீபுரம் மாவட்ட ஆளுநர் எஸ்.சிவசண்முகராஜா, அந்த 15 பேரையும் விடுவிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியிருந்த டேனியல், தேவகரன், ஆனந்தகுமார், சந்திரகாந்தன், சுதர்சன், பிரசன்னா, தர்மராஜா, சுதாகர், கிரிதரன், நாராயணதாஸ், சங்கர், சீலன், சுதன், ஷேக்பரீத், சூரியகுமார் ஆகிய 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் சிலர் தங்களுடைய உறவினர்கள் வசித்து வரும் இலங்கை அகதிகள் முகாமுக்கும், சிலர் தங்களது உறவினர் வீடுகளுக்கும் சென்றனர்.

விடுதலை அளித்து, தங்கள் மனைவி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கும் இலங்கைத் தமிழர்கள் நன்றி தெரிவித்தனர்.

http://www.tamilthai.com/?p=27612

விடுதலை அளித்து, தங்கள் மனைவி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கும் இலங்கைத் தமிழர்கள் நன்றி தெரிவித்தனர்.

மிகுதி 26 உட்பட வேறு முகாம்களில் அநியாயமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.