Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விசாரணையை ஆதரியுங்கள்: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மனு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Monday, 2011-10-03 09:07:37]

amnesty_150seithy.jpg

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் நிபுணரான ஜிம் மக் டொனால்ட் இந்த மனுவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

போரின்போது விடுதலைப் புலிகளும், அரச படையினரும் போர்க் குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருந்தனர் எனவும் மனுவில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுக்களை நம்புவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

தமது படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ளத்தவறியுள்ளது எனவும் இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு போரின்போது இருதரப்பினரும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச விசாரணைக ளுக்கு வெளிப்படையான ஆதரவை அமெரிக்கா வழங்கவேண்டும் என்றும், அதன்மூலம் இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கான நகர்வில் முதலடியை எடுத்து வைக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு முன்னர் ஐயாயிரம் பேரின் கையொப்பங்களுடன் இந்த மனுவைக் கையளித்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெள்ளைமாளிகை தமக்கு அறிவித்துள்ளது எனவும் ஜிம் மக் டொனால்ட் தெரிவித்துள்ளார். எனினும் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கும் போர்க் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அவை அடிப்படை ஆதாரங்கள் அற்றவை என்று அவை கூறுகின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=50568&category=TamilNews&language=tamil

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை வெள்ளை மாளிகையிடம் கையளித்த மனு தொடர்பில், ஐயாயிரம் பேரின் கையொப்பத்துடன் குறித்த மனு கையளிக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இலங்கையில் படையினர் மேற்கொண்ட போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்திவரும் சர்வதேச மன்னிப்புச் சபை, போர்க் குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு வெள்ளை மாளிகையில் மனுவொன்றைக் கையளித்துள்ளது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாக வெள்ளை மாளிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், எதிர்வரும் 29-ம் திகதிக்கு முன்னதாக போர்க்குற்ற விசாரணை தேவை என்ற கோரிக்கை அடங்கிய மனுவை,5,000 பேரின் கையொப்பத்துடன் அனுப்பி வைத்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தது.

இது இவ்வாறிருக்க இவ்வறிவித்தல் வெளியான கையோடு இணையத்தளம் மூலமாக சுமார் 3,000 பேர் தங்கள் சம்மதத்தை தெரிவித்து தகவல் அனுப்பியுளளனர். இதேவேளை இது இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கான அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தின் முதற்கட்ட நடவடிக்கை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.