Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை விடவும் சீனாவுடன் இலங்கை அதிக உறவுகளைப் பேணுகின்றது – சுமித் கங்குலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

India China_CI.jpg

இந்தியாவை விடவும் சீனாவடன் இலங்கை அதிக உறவுகளைப் பேணி வருவதாக முன்னணி அரசியல் விஞ்ஞானியும், ஆய்வாளருமான டொக்டர் சுமித் கங்குலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரி;த்தானிய ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் டொக்டர் கங்குலி கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை விடவும், சீனாவுடனான உறவுகளை அதிகளவில் வலுப்படுத்திக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1980களில் இலங்கையில் அமெரிக்க மேலதிக்கம் நிலவக் கூடும் என பிழையான நிலைப்பாட்டினால், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தமிழ் பிரிவினைவாதத்தை போஷித்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தென் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுத பயிற்சியும் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளர்.

எனினும், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதாரத்தில் முன்னணி வகிப்பதற்கு சீனாவும் இந்தியாவும் போட்டியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தென் இந்திய அரசியல் தலைமைகளின் உதவியை நாட வேண்டியிருப்பதனால், இலங்கை விவகாரம் தொடர்பில் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68082/language/ta-IN/article.aspx

எனினும், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அது என்னவென்று அவருக்கே வெளிச்சம். நடைமுறையில் அவரின் 'மாறுபட்ட' நிலைப்பாடு நல்ல இருளையே தருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை சீனாவுடன் நல்லுறவைக் கொண்டிருப்பது தனது பாதுகாப்புக்கருதியே. ஏனெனில் இலங்கையில் நடச்த அனைத்து அனர்த்தங்களுக்கும் இந்தியாவே ஆசான். தமிழர்களைத்தனிநாடு கேட்க வைத்ததும், போரியல் பயிற்சி அளித்ததும், பின்னர் தமிழர்களை அழிக்க இலங்கை அரசுடன் கைகோர்த்ததும் தமிழர்கள் மீது போரியல் விதிகக்கு அப்பாற்பட்ட குண்டுகளைப் பின்னின்று வீசியதும் இந்தியாதான். கற்றுக்கொண்ட பாடத்தின்படி இலங்கை அரசு இந்தியாவை நம்பமுடியாது என்பதிலும் எங்களுக்கு எதிராகவும் அவர்களுடைய ஆயுதங்களை எப்பவும் திருப்பலாம். இது கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டது. திரும்பியும் தமிழர் பக்கம் சென்று எங்களுக்கெதிரான ஒரு சக்தியை உருவாக்கலாம். இந்தியாவினது நோக்கம் இலங்கையில் மற்றைய நாடுகளின் ஆதிக்கத்தைத் தடுப்பது தான். தன்னுடைய பாதுகாப்பு நலனைத்தான் இந்தியா 100 வீதம் கருதுகின்றது. எனவே இலங்கையில் அமைதி நிலைபெற வேண்டுமெனின் இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் பலவீனப்படுத்தவேண்டும்.

இந்தியாவிற்கு எதிராக நிலைகௌ;ளக்கூடிய நாடு சீனாவே. இலங்கை தனது பாதுகாப்புக்கருதி நடந்து கொள்ளும் முறைமை சரியானதே. புத்திச்சாதூரியமாக தமிழர்களுக்கும் உரிமையை வழங்கிவிட்டால் இலங்கையில் இந்தியாவின் தலையீடு ஒட்டநறுக்கப்பட்டுவிடும். இலங்கையில் அமைதி நிலைநாட்டப்படும். இலங்கை செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கல் கொடுப்பது தான். இந்தியாவை நம்பித் தமிழர்கள் இனிமேல் ஒருபோதும் போராட்டக்களத்தில் இறங்கமாட்டார்கள். சீனாவின் உறவை வலுப்படுத்துவது இலங்கையைப்பொநுத்தளவில் அவர்களின் பாதுகாப்பிற்கு வலுவானதும் நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தீர்க்கதரிசனமும் ஆகும். சீனா எதிர்கால வல்லரசு. ஒரு வல்லரசு நிற்கும்போது மற்றைய வல்லரசுகள் அங்கு ஆயுதபோரில் நேரிடையாக குதிக்காது. தமிழர்கள் தனியே இந்திய வல்லரசை நம்பி நின்றதால் தான் அவர்கள் காலைவாரிவிட்டதால் அழிவுக்குள்ளானோம். இந்தி வல்லரசு காத்தடிக்கும் பக்கம் திரும்பிக்கொள்ளும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.