Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறையற்ற மீள்குடியேற்றத்தினால் தொண்டு நிறுவனங்களின் உதவி நிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ina%20alippu585.jpg

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சிறீலங்கா அரசாங்கத்தினால் மீள்குடியேற்றம் இடம்பெறாமையால் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிப்பு, பொக்கன, வட்டுவாள், புதுமாத்தளன், போன்ற 16 கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தாது வேறு இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவதனால் தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

கோம்பாவில் பகுதியல் மீள்குடியேற்றம் எனத் தெரிவித்து கோம்பாவிலிருந்து வெகுதூரத்தில் உள்ள “திம்பிலி” எனும் காட்டுப்பகுதிக்குள் குடிநீர், மருத்துவம், மலசல கூடவசதிகள் இன்றி கால்நடைகளைப் போன்று எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் மரநிழலின் கீழ் சிறீலங்கா அரசினால் விடப்பட்டுள்ளனர்.

தற்காலிய கொட்டகை என்ற பெயரில் 5ஒ3 (மீற்றர்) என்ற அளவுத் திட்டத்திற்கு அமைவாக போதிய இடவசதியின்றி கொடுக்கப்பட்ட குடிசையில், ஒருவர் நிமிர்ந்து படுக்கக் கூட முடியாத அளவில் அமைத்துள்ளனர்.

வீதிகள் புனரமைப்பு செய்து கொடுக்கப்படவில்லை, நோய்க்கு மருந்து எடுக்க வேண்டுமாயின் பல கிலோமீற்றர் தூரம் கால் நடையாகச் சென்றே மருத்துவம் பெறவேண்டியுள்ளது.

மாணவர்கள் பாடசாலை செல்ல வேண்டுமாயின் சுமார் 3 கிலோமீற்றர் தூரம் சென்றுதான் கல்வி கற்க வேண்டும். இவ்வாறு பல அடிப்படை பிரச்சினைகள் உள்ளன.

இந்நிலையில் மிகவும் முக்கியமான பிரச்சினையாக பருவ மழை தொடங்கியுள்ளதால் மரநிழலிலும் இருக்க முடியாது என்றார்கள்.

சுற்றிவர காடுகள் நிறைந்துள்ளதால் பல விஷ ஊர்வான்கள் உள்ள இடத்தில், அவற்றினால் ஏற்படும் தாக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்ற பகுதியில் எங்களை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதால் என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லை. எனத் தெரிவித்த குடும்பத் தலைவர் ஒருவர் ஏதும் தொழில்களை செய்வதற்கான எவ்வித உதவிகளையும் செய்து கொடுக்கவில்லை என்றார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிறுத்திவிட்ட நிலையில் பெருமளவில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மக்கள் காணப்படுகின்றார்கள்.

இங்கு இடம்பெறும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் படையினரின் பிரசன்னமே அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எந்த ஒரு பொது அமைப்புக்களும் உள் நுழைய படையினர் அனுமதியளிக்கவில்லை.

காடுகளை அகற்றுவதிலிருந்து மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் அனைத்தும் படையினரால் மேற்கொள்ளப்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

http://www.eeladhesa...ndex.php?option

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.