Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் மன்ற தலைவர் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் மன்ற தலைவர் மீது தாக்குதல்

  • Sunday, October 16, 2011, 16:20

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவர் மன்ற தலைவர் தவபாலன் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலையில் கடுமையான தாக்குதலுக்குள்ளான 24 வயதுடைய தவபாலன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தர்மடம் பகுதியினூடாக வந்துகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தவபாலன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilthai.com/?p=28554

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பலக்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.தவபாலன் மீது தாக்குதல்- அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதி

16 அக்டோபர் 2011

குளோபல் தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் :

யாழ் பலக்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.தவபாலன் இன்று தாக்கப்பட்டுள்ளார். இன்று யாழ்நகரின் கந்தர்மடம் பழம் வீதியூடாக அவர் மீது 8க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்த சந்தேக நபர்கள் மோசமாக தாக்கியிருக்கின்றனர். தாக்குதலாளிகளிடம் இருந்து தப்புவதற்காக தவபாலன் தனது மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓடியிருக்கின்றார். எனினும் தாக்குதலாளிகள் தொடர்ந்து வந்து தாக்கியதில் படுகாயமடைந்த தவபாலன் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

வன்னியைச் சேர்ந்த தவபாலன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக கடந்த ஆண்டில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஈபிடிபி மற்றும் அரச புலனாய்வுத் துறையினர் விடுத்த அழுத்தங்கள் காரணமாக அவரை பல்கலைக்ககழக மாணவர் ஒன்றியத் தலைவராக ஏற்றுக் கொள்வதில் இழுபறிகள் ஏற்பட்டிருந்தது. எனினும் அவருக்காதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்தியதை அடுத்து மீண்டும் தவபாலனுக்கான தலைவர் பதவியை உறுதிப்படுத்துவதாக பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி வழங்கியிருந்தது. எனினும் இதுவரை அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத வகையிலும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக தவபாலனே செயற்பட்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் மற்றும் கிறிஸ் மனிதர்கள் தொடர்பான சம்பவங்களிலும்;; முன்னின்று செயற்பட்டு வந்துள்ளார்.

இன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த கும்பல் கூரிய இரும்பு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கியுள்ளது. பத்திரிகைத்தாள்களில் மறைத்து எடுத்துவரப்பட்டிருந்த ஆயுதங்களினால் இவர் தாக்கப்பட்டுள்ளார்.

குடாநாட்டில் அண்மைக்காலங்களில் இவ்வாறு மறைத்து எடுத்து வரப்படுகின்ற இரும்பு மற்றும் பொல்லுகளால் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் பல இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் உதவியாளர் ரமேஸ் மற்றும் ஊடகவிலாளர் குகநாதன் மீதும் இதேபாணியில் தாக்குல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68739/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.