Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்காக எழுப்பிய குரல் தொடர்ந்து ஒலிக்கும்

Featured Replies

தெஹிவளை கல்கிசை பகுதியில் மீண்டும் இடதுசாரிகளின் செயற்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களும் தொழிலாளர்களும் நிறைந்து காணப்பட்ட

இப்பகுதியில் முன்பு இடதுசாரித் தலைவர்கள் ஆதிக்கம் பெற்று விளங்கினர்.

தற்போது இடதுசாரித் தலைவர்களான தோழர்கள் பிட்டோ, ஜேம்ஸ் காரியவசம் போன்றோர் முன்னைய காலத்தில் தாம் சமூக நீதிக்காக போராடிய வரலாற்றை மக்களுக்கு தேர்தல் காலத்தில் தெரிவித்து வந்தனர். ஆனால், இவர்கள் இன்று அங்கம் வகிப்பதோ பேரினவாத கூட்டரசியல் ஆகும். ஆனாலும் இவர்கள் இடதுசாரிகள் வேறாக அணிதிரட்டப்பட வேண்டும் எனப் பேசி வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தெஹிவளை கல்கிசை மாநகர சபைக்கு அங்கத்தவர் ஆக தெரிவு செய்யப்பட்ட தோழர் விலேகொட எனது வெற்றி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ““தோழர் விக்கிரமபாகு அங்கத்தவராக வந்திருப்பதால் நாம் இப் பகுதியில் நிறைய சாதிக்க முடியும்'' என குறிப்பிட்டுள்ளார்.

இது எதைக் காட்டுகின்றது என்றால் சந்தர்ப்பவாதத்தின் காரணமாக கூட்டாட்சியில் இருக்கும் உயர் நிலையில் உள்ள இடதுசாரித் தலைவர்களின் கருத்தியலுக்கும் கீழ் நிலையில் உள்ள அங்கத்தவர்களின் சிந்தனைகளுக்கும் உள்ள வேறுபாட்டையே ஆகும். எது எப்படி இருந்தாலும் நான் தெஹிவளை கல்கிசை மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனது தெரிவு வடிகால்வாய்கள், வீதி செப்பனிடுதல், நீர் வசதிகள் என்பவற்றுக்காக அல்லாமல் அரசியல் பிரச்சினைக்கு உரிய தீர்வை வலியுறுத்தும் தலைவர் என்ற அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

வைத்தியா வீதியில் இருக்கும் எனது பழைய நண்பர் பிரேமரத்தின எனது வெற்றி தொடர்பாக எனக்கு வாழ்த்துத் தெவிக்கும் போது ““நீங்கள் அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதுடன் அதன் விளைவாக ஏற்படும் ஆபத்துகளைக் கண்டு அஞ்சாமல் செயற்படுவதாலேயே மக்கள் உங்களைத் தெரிவு செய்துள்ளனர். உங்களைப் போன்றவர்கள் தெஹிவளை கல்கிசைக்குத் தெரிவாகி இருப்பது எமக்கு பெருமையாக இருக்கிறது'' என அவர் குறிப்பிட்டார். எனது பிரசார காலத்தில் முதலில் நான் எனது பழைய நண்பர்களையே தேடிச் சென்றேன். அப்போதே நான் பிரேமரத்தினவை சந்தித்தேன்.

அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவராக இருப்பார் என்றே நான் கருதினேன். இவர் என்னை ஆதரிக்கமாட்டார் என்றே எனது உள் மனம் சொன்னது. ஆனாலும் அவருடன் உரையாடும் போதும் அவர் மகிழ்வாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். பலரிடம் நல்ல உணவு, வசதியான வீடு, வசதி ஆகியன இருந்தும் அவர்களிடம் மகிழ்ச்சி இருப்பதில்லை. சமூகத்தில் நிலவும் அநீதிகள் காரணமாக அவர்கள் கவலையுடன் வாழ்வது உண்டு. இன்றைய ஆட்சியிலும் நீதியில்லை. எனவே, பிரேமரத்தின போன்றவர்களுக்கு சமூக நீதி தேவைப்படுகின்றது.

நாம் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைப்பதன் மூலமே பேரினவாதத்துக்கும் பிற்போக்கு வாதத்துக்கும் எதிராக போராட முடியும். தமிழ் மக்கள் என்னை அதிகமாக ஆதரித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களுக்கு எதிராக புயப்பட்ட அனைத்து துயரங்களுக்கும் எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுடன் போராடியும் வருகின்றேன். இவை காரணமாக தமிழ் மக்கள் தாமாகவே முன் வந்து எனக்கு ஆதரவை வழங்கியுள்ளனர். இங்கே ஏழை, பணக்காரர் என்ற பேதம் எதுவும் இல்லாமல் தமிழ் சமூகத்தினர் என்னை ஆதரிதுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் எனக்கு ஆதரவை வழங்கியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை ஆதரிப்பதாக செய்திகளைக் கசியவிட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவரான மாவை சேனாதிராசா வெளிப்படையாகக் கருத்தை முன் வைத்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தமிழ்த் தலைவர்களின் இத்தகைய சிந்தனைப் போக்கே தமிழ் மக்களை எனது பக்கம் பார்க்கச் செய்தது. தமிழ் மக்களின் நிலை இப்படி இருக்க என்னுடன் பழகும் சாதாரண சிங்கள மக்கள் என்னிடம் நீங்கள் எங்களை வீதிக்கு வாருங்கள் போராடுவோம் என்றே அழைக்கின்றார்கள். வேறு எதையும் எங்களிடம் கேட்கவில்லை எனக் கூறுகின்றனர். இவற்றிற்காகவே மக்கள் என்னை ஆதரித்துள்ளனர். இவற்றை விட வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றே கூற வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசாங்கத்துக்கு எதிராக மாற்றுக் கொள்கைகள் எதுவும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனாலேயே அக்கட்சி தோல்வி கண்டுள்ளது. கொழும்பு மாநகர சபையில் அக்கட்சி வெற்றி கொண்டமைக்கு ரணில் விக்கிரமசிங்க காரணமல்ல. கொழும்பு நகரத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் காரணமாகவும் அரசாங்க மதமல்லாத ஏனைய மதப்பிரிவினன் ஆத்திர நிலை காரணமாகவுமே ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது.

வடக்கிலே மக்கள் எத்தகைய பதிலை அரசாங்கத்துக்கு வழங்கினார்களோ அதே பதிலையே தெற்கிலும் தமிழர்கள் வழங்கியுள்ளனர். குறிப்பிட்ட அளவு முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு ஆதரவை கொடுத்து உள்ளனர். இதுவே ஆட்சியாளர்களுக்கு சொற்ப மன நிம்மதியை வழங்கியுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற கொழும்பு மாநகர சபை தேர்தலில் வாசுதேவ நாணயக்கார 17 ஆசனங்களைப் பெற்று இருந்தார். பட்ட மிலிந்த மொரகொடவால் அதைக் கூட பெற முடியவில்லை.

16 ஆசனங்களை மட்டுமே அவரால் பெற முடிந்தது. இன்று ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு எதிரான செயற்பாட்டில் இல்லை. பாரம்பரிய இடதுசாரி கட்சிகளும் ஆட்சியாளருடன் ஒட்டி இருப்பதால் எதிர்ப்புகள் இல்லை. இன்று அரசாங்கத்திற்கு எதிர்ப்பு உள் வீட்டிலேயே தோன்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முரண்பாடுகளின் கூடாரமாக மாறியுள்ளது.

இன்று வர்க்கப் போராட்டங்கள் மஹிந்தவின் வீட்டுக்குள்ளேயே நடைபெறுகின்றன. இதன் பிரதிபலிப்புகளை நாடு முழுவதும் பார்க்கக் கூடியதாக உள்ளது. தெஹிவளை கல்கிசை முதல்வர் வேட்பாளர் தனசிறி மஹிந்த ராஜபக்ஷவின் அடியாளாக காணப்படுகின்றார். இவர் சக வேட்பாளர் கேசரலாலுக்கு எதிராக பல அநீதிகளைப் புரிந்தார். கேசரலால் தனசிறி அளவுக்கு சண்டித்தனம் உடையவராக இல்லாது இருந்ததால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. கொலன்னாவையில் விடயம் பெரிதாகியது. நெருப்பு சுவாலை பரவியுள்ளது. மறைந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை எனக்கு இளமைக் காலம் தொடக்கம் தெரியும். இவர் இடது சாரி சார்புடையவர்.

மஹிந்த ராஜபக்ஷ பக்கம் இவர் இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே செயற்பட்டு வந்தார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது பல சந்தர்ப்பங்களில் இவர் நேரடியாகவே தலையிட்டுள்ளார். இன்று அதற்காகவே தனது இன்னுயிரை ஈய்ந்துள்ளார். மேல் நிலையில் உள்ளவர்களால் இவர் இல்லாமல் செய்யப்பட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுமானால் அதற்கு ஆம் என்றே விடை கூறுவேன். இதற்கான நிலைமைகளை எதிர்கால நிகழ்வுகள் வெளிப்படுத்தும். இந்தத் தேர்தலில் எமது அணி 8 ஆசனங்களை வென்றுள்ளது. 30,000 இற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது. இது மக்கள் எழுச்சியின் தொடக்கமே. மக்கள் எழுச்சி மேலும் வலுப்பெற நாம் அமைப்பு ரீதியாக வலுப்பெற வேண்டும். இந்தத் தேர்தலில் பல இடங்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்று உள்ளனர். அரசாங்கத்தின் சர்வாதிகாரம் தொடர்ந்தால் மேலும் மேலும் எமது வளர்ச்சி உயர்வடையும்.

http://akkinikkunchu.com/new/

---கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன---

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.