Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழரின் நீதி தேடும் போராட்டத்திற்கு இந்தியாவின் வடக்கே ஆதரவுண்டா?

Featured Replies

சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரிலான யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வட- இந்தியர்களும் தற்போது குரல் கொடுத்து வருவதானது சிறிலங்காத் தமிழர்களுக்கு புதியதோர் நம்பிக்கையை அளித்துள்ளது.

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பழம்பெரும் சமூகத் தலைவரான றாம் விலாஸ் பஸ்வனிடமிருந்து [Ram Vilas Paswan] தற்போது சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பான புதிய நம்பிக்கைக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்காத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டமை தொடர்பாக தற்போது சிறிலங்காவை அரசாங்கத்தை தலைமையேற்றிருக்கும் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக றாம் விலாஸ் பஸ்வன் கடும் கண்டனங்களை எழுப்பிவருகிறார்.

புதுடில்லியில் இடம்பெற்ற 'சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு' [‘Convention on war crimes in Sri Lanka’] ஒன்றில் உரையாற்றிய மூத்த அரசியல்வாதியான றாம் விலாஸ் தனது லோக் ஜனசக்திக் கட்சி இந்திய நாடாளுமன்றில் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கேள்வியெழுப்பும் எனவும் இது தொடர்பான உறுதியான பதிலைத் தெரிந்து கொள்ள நடவடிக்கைகள் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

"அண்மையில் ஐ.நா வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் சிறிலங்காப் போரானது ஒரு இனப்படுகொலைப் போராகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா தற்போது சிறிலங்கா தொடர்பான தனது அறிக்கையைக் கொடுத்துள்ளது. ஆகவே இது விடயத்தில் ஐ.நாவானது தனது அழுத்தத்தை மேலும் அதிகரிப்பதுடன், தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி சிறிலங்கா விவகாரத்தில் சரியானதொரு தீர்வை எட்டவேண்டும். இந்திய அரசாங்கமும், இந்திய நாடாளுமன்றமும் இது விடயத்தில் தமது அமைதியைக் கலைத்து சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டும்" எனவும் பஸ்வன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"சிறிலங்காவில் வாழும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பாக நான் எனது கண்டனக் கருத்துக்களை முன்வைத்திருந்தேன். இதன் பின்னர் இவ்வாறான உனது கண்டனக் கருத்துக்கனை தமிழ் மக்களின் நீதிக்காக குரல் கொடுப்பதற்கேற்ப ஒழுங்குபடுத்துவதென நான் தீர்மானித்தேன்" எனவும் பஸ்வன் The Weekend Leader ஊகத்திடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விடயம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் முதன்மைப்படுத்துவதில்லை எனத் தெரிவித்த பஸ்வன், "சிறிலங்கா தொடர்பாகப் பேசப்படும் போதெல்லாம் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வன்முறைகள் மட்டுமே முதன்மைப்படுத்தப்படுகின்றன. தமிழ் நாடு தவிர வேறிடங்களிலுள்ளவர்களுக்கு உண்மையில் சிறிலங்காவில் என்ன நடந்ததென்பது தொடர்பாகத் தெரியாது. பங்களாதேசப் போர், பாலஸ்தீனியர்களின் போராட்டம், அல்லது ஒசாமாவின் படுகொலை போன்ற விடயங்கள் மட்டும் ஊடகங்களில் முக்கியப்படுத்தப்பட்டன. ஆனால் சிறிலங்கா விடயத்தில் மட்டும் இதே முன்னுரிமை பேணப்படவில்லை" எனவும் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தலித் மக்களின் தலைவரான பஸ்வான் எப்போதும் நசுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த தேவதூதனைப் போலவே செயற்பட்டு வருகின்றார். இவர் பீகார் மாநிலத்தின் கார்ஜியா மாவட்டத்தில் உள்ள மிகச்சிறிய கிராமமான Shaharbanni யில் இடம்பெற்ற சில போராட்டங்கள் தொடக்கம் பல்வேறு வகையான போராட்டங்களுக்காக குரல் கொடுத்தவராவார்.

தலித் குடும்பத்தில் பிறந்த இவ் இந்திய அமைச்சர் வடக்கு இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறுவகையான போராட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்கியவர் ஆவார். சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள், சமூகத்தில் ஏழைவர்க்கத்தினராக உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளப் பெரிதும் தனக்கு உதவியிருப்பதாகவும் பஸ்வன் தெரிவித்துள்ளார்.

அடல் பிகாரி வாஜ்பாயின் அரசாங்கத்தில் நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சராகக் கடமையாற்றிய பஸ்வன் 2002ல் குஜராத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக சீற்றங்கொண்டு அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.

முதன் முதலில் பஸ்வன் தனது 23 ஆவது வயதில் சமூக நீதித்துறையின் கீழ் பீகார் சட்டசபையில் உள்நுழைந்தார். அரசியல் வாழ்வின் ஆரம்பத்தில், இந்த இளைய அரசியல்வாதியை நாக்சலைட்டுக்களின் நடவடிக்கைகள் கவர்ந்திழுந்தன. இவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்காக இவரது இளைய வயதில் கைதுசெய்யப்பட்டிருந்தார். எதுஎவ்வாறிருப்பினும், இவர் 1974 ல் ஜனதாக் கட்சியின் உறுப்பினராகி, ஜெயப்பிரகாஸ் நாராயணனின் வழியைப் பின்பற்றுபவராக மாறிய போதே இவரது உண்மையான அரசியல் பங்களிப்பு ஆரம்பமாகியது.

சிறிலங்காவானது அழிவை நோக்கிச் செல்லவுள்ளதாக பஸ்வன் 1982ல் அறவித்தது போன்று தற்போதும் சிறிலங்காவின் எதிர்காலம் தொடர்பாகத் தான் கவலை கொள்வதாகவும், "தமிழ்மக்கள் சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையினராவார். சிங்களப் பெரும்பான்மை மக்கள், தமிழ் மக்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக அவர்களையும் மதித்து நடக்க வேண்டும். இவ்விரோதப் போக்கானது இனப்போராக வெடித்தது. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் உதயமாகினர். இதனால் சிறிலங்காவில் யுத்தம் ஆரம்பமானது" எனவும் பஸ்வன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட யுத்தத்திற்கு இந்திய அரசாங்கம் தனது ஆதரவை வழங்கியிருந்தது எனக் குற்றம் சாட்டியுள்ள பஸ்வன், "சிறிலங்காத் தமிழர்கள் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகக் கூறும் இந்திய அரசாங்கம், மறுபுறம் இந்தியக் குடியரசு தினம் அன்று சிறிலங்கா அதிபர் ராஜபக்சவை பிரதம விருந்தினராக அழைத்துள்ளது. ஆகவே இது விடயத்தில் இந்திய அரசாங்கமானது தீவிரமாக யோசிக்க வேண்டிய தேவையுள்ளதுடன், மனிதாபிமான விடயங்களைக் கருத்திற் கொண்டு அரசியல் ரீதியான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது" எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதுடில்லியில் இடம்பெற்ற கருத்தரங்கில், சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மிக வக்கிரமான சித்திரவதைக் காட்சிகளை உள்ளடக்கிய திரைப்படத்தைப் பார்த்த பஸ்வன், "மிகப் பெரிய திரையில் இவ்வாறான கொலை மற்றும் சித்திரவதைக் காட்சிகள் சிலவற்றைப் பார்த்த போது நான் எனது கண்களை மூடிக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறான கருத்தரங்கானது இந்தியா முழுவதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

"இந்தியாவின் 90 வீதமான மக்கள் நீதி மற்றும் மதசார்பின்மைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்களாவர். ஆனால் அவர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்பான உண்மை நிலைப்பாடு தெரியாது. மனிதாபிமானம் என்பது எங்கு ஆபத்திலிருந்தாலும், இது தொடர்பாகப் பேசுகின்ற கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு. சிறிலங்காவில் வாழும் அப்பாவித் தமிழ் மக்கள் அவர்களது சொந்த அரசாங்கத்தினால் குறிவைக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், நாம் அனைவரும் அதில் தலையிட வேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பஸ்வன் கருத்தரங்கில் கூறியது போன்று இவ்வாறான கருத்தமர்வுகளை இந்தியா முழுவதும் மேற்கொள்வது தொடர்பாக தீவிரமாக ஆலோசிப்பதாகவும், இவர் கூறிய கருத்துக்கள் மற்றும் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட முக்கிய குறிப்புக்களை Hindi பத்திரிகையில் பிரசுரிக்க ஏற்பாடு செய்வதாகவும் இதனை ஒழுங்குபடுத்தியவர்கள் தெரிவித்தனர்.

http://www.puthinappalakai.com/view.php?20111020104903

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட யுத்தத்திற்கு இந்திய அரசாங்கம் தனது ஆதரவை வழங்கியிருந்தது எனக் குற்றம் சாட்டியுள்ள பஸ்வன்"

புலிகளுக்கு எதிராக அல்ல. ஈழ தமிழருக்கு எதிராக தொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் யுத்தம். சின்ன திருத்தம்.

வடக்கில் தமிழ் ஈழ விடயத்தை இந்துக்களுக்கு எதிரான யுத்தமாக பிரச்சாரம் செய்வது உகந்தது. அவர்களுக்கு ஏற்கனவே ஒரு மதராசி தங்களது தலைவனை போட்டு தள்ளியது உறுத்துகிறது.

காங்கிரஸ் இப்போது சரிந்து வருவதால் பி. ஜே. பி. க்கு இந்த புத்த மத வெறியர் ஈழ இந்துக்களை அழிப்பது தேர்தல் பிரசாரத்தில் உதவும். அத்வானியும், இத்தாலிய கிறிஸ்டியன் இந்து மதத்தை ராமர் வென்ற இலங்கையில் அழிக்க உதவுகிறார் என்று கூவலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.