Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுநீரக நோயாளியாகிய தமிழ் அரசியல் கைதியின் உடல் நிலை மோசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுநீரக நோயாளியாகிய தமிழ் அரசியல் கைதியின் உடல் நிலை மோசம்

  • Friday, October 21, 2011, 9:49

சிறுநீரக நோய்க்கு உள்ளாகிய நிலையில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மன்னார் திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த இராஜேந்திரம் ஜெகதீஸ்வரனின் (32 வயது) உடல் நிலை மோசமடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஜெகதீஸ்வரனின் குடும்பத்தினர் இந்தத் தகலை வெளியிட்டுள்ளனர்.

யுத்தத்தின்போது காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வரனின் சிறு நீரகங்கள் இரண்டும் பின்னர் பாதிக்கப்பட்டு அதற்காக அவர் சிறைச்õலை வைத்தி யசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது நிலைமை மோசமடைந்ததையடுத்து இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் விலங்கிடப்பட்ட நிலையிலேயே சிகி சசை பெற்று வந்தார். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை அவசரமாக செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெவித்திருந்தனர்.

பணச் செலவுமிக்க அந்த சிகிச்சைக்குய ஏற்பாடுகளில் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். எனினும் இவரது நோய் குணமாகாத நிலையில் சிறைச்சாலை நிர்வாகத்தினால் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைககு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மீண்டும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் இந்த நிலையில் எந்தவித சத்திரசிகிச்சையும் செய்ய முடியாதுள்ளதாகவும் வைத்தியர்கள் அவ து உறவினர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

இவருடைய சிறுநீரக மாற்று சிகிச்சை க்குத் தேவையான நிதி உதவிகள் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள போதிலும் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சையளிப்பதற்கு வசதியாக அவர் முதலில் தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என வைத்தியர்கள் கூறியிருந்தார்கள் என்பதும் அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai.com/?p=28795

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.