Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் நீதிக்கான நடைப்பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் நீதிக்கான நடைப்பயணம்

  • Sunday, October 23, 2011, 11:20

பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான நீதிக்கான நடைப்பயணமொன்று ஜெயசங்கர் முருகையா என்பவரால் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 29-10-2011 முதல் 7-11-2011 வரையான காலப்பகுதியில் இந்த நடைபயணம் பிரதான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்த பிரதான ஐந்து கோரிக்கைகளாவன:-

01. ஈழத்தமிழர்களின் மீதான இலங்கையின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.

02. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு, தமிழீழத்தில் சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்தத்துடன் கூடிய ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.

03. ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இன அழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் தனியாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும்.

04. இலங்கை சிறைகளில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழ் பொதுமக்களும், முன்னாள் போராளிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.

05. தமிழீழத்தில் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படல் வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகள் அடங்கிய மனு நீதிக்கான நடைப்பயணத்தின் போது பிரித்தானியப் பிரதமரிடமும், அமைச்சர்களிடமும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கையளிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

http://www.tamilthai.com/?p=28879

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.