Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எது நடந்தால் நமக்கென்ன? -தமிழருவி மணியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15.jpg 02.11.11 தொடர்கள்

லகில் மிக மோசமான துயரங்களைச் சந்தித்த இனங்கள் இரண்டு. ஒன்று யூத இனம்; இன்னொன்று தமிழினம். தாய் மண்ணில் வாழ வழியின்றி பூமிப் பந்து முழுவதும் தமிழரும் யூதரும் பரவிக் கிடக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு சர்வதேச நாடுகளின் சமரசத்தால் யூதர்களின் தாய்மண் இஸ்ரேலாகப் பரிணமித்தது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தனிநாடு காண்பதை இதே சர்வதேச சமுதாயம் தடுக்க முயல்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு. இந்த இரட்டை அளவுகோல் அணுகுமுறைக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதுதான் காந்திதேசம் கண்டெடுத்த சமதர்மம்.

ஈழமண்ணில் தமிழர்கள் கி.மு. 500 முதற்கொண்டே மூத்த குடிமகனாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். பீகார், ஒரிஸா போன்ற பகுதிகளிலிருந்து பின்னர் சென்று சேர்ந்தவர்கள்தான் சிங்களர். மானுடவியலாளர்களின் ஆய்வின் மூலம் ஐயத்திற்கு இடமின்றி இந்த உண்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் இலங்கையை ஆக்கிரமித்த பின்பு மலைப்பகுதிகளில் காப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அமைப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து அவர்களால் குடியமர்த்தப்பட்டவர்கள்தான் மலையகத் தமிழர். இந்த வேற்றுமையை நம் இந்திய ஆட்சியாளர்களும், ‘அறிவு ஜீவி’களும் கவனத்தில் கொள்வதில்லை என்பதுதான் கொடுமை.

இலங்கையில் அதிகார மாற்றம் 1948-இல் ஏற்பட்டபின்பு, முதல் அதிபராகப் பொறுப்பேற்ற டட்லி சேனநாயகா முதல், இரத்தவெறி பிடித்த ராஜபக்ஷே வரை தமிழரை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதிலேயே முனைப்பாக முற்பட்டனர். சிங்களர் ஆட்சியமைந்த அடுத்த கணமே மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. ஈழத் தமிழர் வாழ்விடங்களில் சிங்களர் குடியிருப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. பௌத்த மதம் சார்ந்த சிங்களர்கள் மட்டுமே அதிகாரத்தில் அமர்வதற்கேற்ப அரசியலமைப்பு அரங்கேற்றப்பட்டது. ஒரு மதம், ஓரினம், ஒருமொழி என்பதே சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனையாக வடிவமைக்கப்பட்டது தொன்மைத் தமிழினம் ‘கள்ளத் தோணிகள்’ என்று எள்ளி நகையாடப்பட்டது. உலகம் இந்த வேற்றுமையை வேடிக்கை பார்த்தது. இந்தியப் பெருங்கடலில் தன் ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள நம் இந்தியா சிங்களர்களுக்கு இதமாக சாமரம் வீசியது.

சேனநாயகா - செல்வா ஒப்பந்தம் கருவிலேயே சிதைக்கப்பட்டது. பண்டாரநாயகா-செல்வா உடன்பாடு உயிர் பெறாமலேயே புதைகுழியில் புதைக்கப்பட்டது. ராஜீவ்-ஜெயவர்த்தனே அரசியல் தீர்வு ஆதரிப்பாரின்றி அனாதைப் பிணமானது. காந்திய வழியில் செல்வநாயகம் தலைமையில் 30 ஆண்டுகள் நடந்த அறப் போராட்டங்களால் தமிழர் வாழ்வு தழைக்கவில்லை. ஆயுதமேந்தி பிரபாகரன் நடத்திய 30 ஆண்டு இராணுவ நடவடிக்கைகள் முள்ளிவாய்க்கால் குருதிக் குளியலில் முற்றுப்பெற்றது. இனி ஈழத் தமிழருக்கு யார் துணை? அரசியல் தீர்வுக்கு என்ன வழி?

‘தனி ஈழம்’ தாகம் தகாது என்று இலங்கை இறையாண்மைக்கு முட்டுக் கொடுப்பவர்கள் ‘இலங்கைத் தீவு தமிழர்-சிங்களர் என்ற இரண்டு தேசிய இனங்களுக்கும் சொந்தமானது. தமிழும் சிங்களமும் ஒரே மதிப்புள்ள இரண்டு ஆட்சி மொழிகள் என்று பிரகடனம் செய்யப்படும். அனைத்து மதங்களும் ஒரே நிலையில் அங்கீகரிக்கப்படும். வடக்கிலும் கிழக்கிலும் மாநில சுயாட்சி வழங்கப்படும். இராணுவத்திலும், காவல்துறையிலும் மக்கள் தொகைக்கேற்ப தமிழருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும். தகுதி அடிப்படையில் கல்வியும், அரசு வேலை வாய்ப்பும் வந்து சேரும்’ என்று ஓர் இணக்கமான அரசியல் தீர்வை உருவாக்க முன்வருவார்களா? தொன்றுதொட்டு தமிழர் வாழும் நிலப்பரப்பில் சிங்களரின் பிரதேச ஆக்கிரமிப்பு நிகழ்வதை நிறுத்துவார்களா? சுயநல ஆட்சியாளர்களாலும், வழி தவறிய புத்த பிக்குகளாலும் சூடேற்றப்பட்ட சிங்களரிடையே இதுபோன்ற சமூக நீதி சாத்தியம் இல்லையெனில், ஈழமன்றித் தமிழர்க்கு வேறேது தீர்வு?

சோவியத் ரஷ்யாவிலிருந்து தேசிய இனங்கள் தனித்தனி நாடுகளானபோதும், இந்தோனேஷியாவி லிருந்து திமோர் விடுபட்டபோதும், கொசோவோ, லித்துவேனியா, தெற்கு சூடான் போன்றவை புதிய நாடுகளாகப் பூத்தபோதும் அவற்றை ஆதரித்து அங்கீகரித்த உலக ஏகாதிபத்தியம், தமிழ்த் தேசிய இனம் மட்டும் தனிநாடு காணத் தடைக்கல்லாய் நிற்பது ஏன்? பாலஸ்தீனியர்களுக்காக ஐ.நா. சபையில் மனமுருகப் பேசிய நம் மன்மோகன்சிங் ஈழம் குறித்து இதழ் திறக்க மறுப்பது ஏன்? இதற்குப் பெயர்தான் ‘தாராளமயமாக்கல்’ என்னும் சுயநலமே வடிவெடுத்த ‘சந்தை அரசியல்’.

‘மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தைத் திருடுபவரைச் சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது’ என்றார் ஹென்றி மெய்ன். ஈழம் பொறுத்தவரை இது எவ்வளவு அர்த்தமுள்ள வாசகம். ‘சகோதரனின் கைகளை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிடில், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகள் அல்லவா!’ என்று சாட்டையால் அறைந்தார் ஜேம்ஸ் ரஸ்ஸல். எது நடந்தால் நமக்கென்ன? நம் இனமும் மொழியும் சேர்ந்து அழிந்தால்தான் நமக்கென்? ‘மானாட மயிலாட’, ‘சூப்பர் சிங்கர்’, ‘செக்ஸ் அப்பீல் தருவது சிவப்பு நிறமா? மாநிறமா?’ என்று தீர்வு காணும் ‘நீயா நானா’ ... இவை போதாதா தமிழர் ‘நெருப்பாய்’ இருக்க!.

- படம்: சித்ரம் மத்தியாஸ்

-குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.