Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரளிவின் விளிம்பை நோக்கி செல்கிறது மனிதகுலம்-விக்டர் ஐவன்

Featured Replies

பிரச்சினைகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் உள்நாட்டில் இருந்து வருகின்ற போதும் உலகப் பிரச்சினைகள் குறித்த எந்தவிதமான கருத்துப் பரிமாறல்களும் இல்லையென்றே கூற வேண்டும்.

அமெரிக்க வங்கித்துறையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரி செய்வதற்காக இன்னமும் அமெரிக்காவுக்கு சாத்தியப்படவில்லை. அமெரிக்கா உலகின் மிகச் சக்தி வாய்ந்த நாடொன்றாக இருப்பதன் காரணமாக அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்த ஏனைய நாடுகளும் இதனால் பாதிப்புற்றன.

இப்போது ஐரோப்பாவும் பொருளாதார சரிவிற்குட்பட்ட ஒரு வலயமாகக் கருதப்படுகின்றது. இந்நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நலன்புரிச் சேவைகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந் நிலை, ஏற்கனவே துன்பப்பட்டிருந்த மக்களை வீதியில் இறங்கச் செய்துள்ளது.

அரபுலகில் ஏற்பட்ட பிரச்சினையை அமெரிக்கா ரொம்ப ரசனையுடனேயே பார்த்து. எனினும் அதன் பின்னர் அமெரிக்காவின் பொருளாதார மத்தியஸ்தானமாகக் கருதப்படும் மதில் வீதியை (Wall Street) கைப்பற்றுவதற்காக ஏற்பட்ட மக்கள் எழுச்சியினால் ஏற்பட்ட இயக்கம் இன்றைக்கு நாடு பூராகவும் வியாபித்து ஐரோப்பாவையும் ஆக்கிரமித்து பெரும் வெகுஜன இயக்கமாக மாறியுள்ளது.

மதில் வீதியைக் கைப்பற்றுவதற்கு இயக்கத்தில் கலந்து கொண்ட மக்கள், அமெரிக்கா நிதி நிறுவனங்களின் பேராசைக்கும் அவர்களின் கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனினும் இது முதலாளித்துவத்திற்கு எதிரான சோஷலிஸ கட்டுமானத்திற்கான ஒரு பொது மக்களின் இயக்கம் எனவும் கருத முடியாது.

அரபு நாடுகளிலே எழுந்துள்ள மக்கள் இயக்கத்தைப் போலவே இவ் வியக்கத்திற்கும் இதனை நடத்திச் செல்லும் தலைமைகள் இல்லாதிருந்ததுடன் எதிர்ப்புக் காட்டுவதற்கப்பால் ஏதேனும் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை.

அவர்களின் செயற்பாடுகள் சீர்திருத்தங்களை ஏற்படுத்தலாமென்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை மேலும் அதிகரிக்கவும் கூடும். வளர்சியடைந்த நாடுகளில் ஏழை, பணக்காரர் ஏற்றத் தாழ்வு உக்கிரமாயிருப்பது இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமேயாகும். சர்வதேச நாணய சபையின் கணிப்பின் படி இங்கிலாந்தின் முழு வருவாயில் 30 வீதம் மக்கள் தொகையின் மிகச் செல்வந்தர்களான ஐந்து வீதமானவர்களிடையேயாகும். அதேநேரம் அமெரிக்காவின் மிகச் செல்வந்தர்களான ஐந்து வீதமானோரிடையே 33 வீதம் பகிரப்படுகின்றது.

இலங்கையின் மிகச் செல்வந்தர்களான ஜனத்தொகையில் 10 வீதமானோர் முழு வருவாயில் 50 வீதத்திற்குக் கிட்டியதைப் பெறுகின்றார்கள். வளர்ச்சி பெற்ற நாடுகளில் வருவாய் நியாயமாகப் பகிரப்படுகின்ற நாடுகளாக முறையே டென்மார்க், நோர்வே, பின்லாந்து, கனடா, சுவீடன், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளாகும்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப 2020 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவின் முதன்மை ஸ்தான இழக்கப்பட்டு அவ்விடத்தை சீனா கைப்பற்றிக் கொள்ளும் என்ற பொதுவான கருத்தொன்று நிலவி வந்தது. எனினும் இப்போது உலகப் பொருளாதார நிலைமைகளின் காரணமாக இந்த கருத்தும் பலவீனமடைந்துள்ளது.

சீனா பிரதானமாக அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலேயே முதலீடுகளைச் செய்துள்ளது. மறுபுறத்தில் சீனாவின் உற்பத்திகளும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளை இலக்குகளை நோக்காகக் கொண்டே நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டுள்ள சரிவுகள் சீனாவின் பாலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துமென்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

சுனாமி மற்றும் கதிர்வீச்சினால் ஜப்பானில் ஏற்பட்ட குழப்ப நிலை ஜப்பானிய பொருளாதாரத்தைப் பாதித்தது. அதனால் தேசிய வருவாயின் பெறுமதியின்படி அந்நாடு பெற்றிருந்த இடத்தை இந்தியா கைப்பற்றிக் கொண்டது. இந்தியாவும் மிகச்சக்தி மிகு நாடாக விரைவாக வளர்ந்து வருகின்றது. சீனா தனது கைத் தொழில்நுட்பத்தில் பொருட்களின் அதிகளவானவைகளை உலகச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் அதே நேரம் இந்தியா உள் நாட்டுச் சந்தைக்காகவே உற்பத்தி செய்கின்றது. இந்த விசேட தன்மையினால் உலக பொருளாதார பிரச்சினைகளில் இந்தியாவுக்கு தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கின்றது.

மக்கள் தொகையில் ஏற்படவுள்ள வேறுபாடுகளின் அடிப்படையிலும் சீனாவுக்கு இல்லாத விசேட வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதென தெரியவருகின்றது. 2025இல் இந்தியா சீனாவை விஞ்சி உலகத்திலேயே அதிகளவான ஜனத் தொகையுடைய நாடாக மாறும். அடுத்த முக்கிய விடயம் எதிர்வரும் இரு தசாப்தங்கள் முடிவில் சீனா வயோதிபர்கள் நிறைந்த நாடாக ஆகுகையில் இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடாக ஆகும்.

இந்தியாவிற்குள்ள அடுத்த சாதகமான விஷயம், எத்தகைய பிரச்சினைக்கும் முகம் கொடுக்கத்தக்க நல்ல, இணக்கடைய உறுதியான ஜனநாயக ஆட்சி முறையொன்று இந்தியாவில் நிலை பெற்றிருப்பதே. சீனாவில் சர்வாதிகார ஆட்சி முறையே நிலவுகின்றது. சீனாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வளர்ச்சி பரந்த ஒரு மத்திய தரவர்க்கத்தினரை உருவாக்கியுள்ளது.

அவர்கள் நிலவும் சர்வாதிகார ஆட்சி முறையை ஏற்றுக் கொள்ளாதிருப்பதற்கும் அதற்கெதிராக கிளந்தெழுவதற்குமான வாய்ப்பு உள்ளது. அவ்வாறொரு நிலை ஏற்படின் சீனப் பொருளாதாரத்திலும் சரிவு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதுடன், அதனை மீண்டும் கட்டி எழுப்ப நீண்ட காலம் ஆகலாம். இந்த நிலையும் இந்தியாவுக்கு அனுகூலமானதாகும்.

அமெரிக்கா இன்று பெற்றிருக்கும் மிகச்சக்தி வாய்ந்த நாடு என்ற நிலை பெரும்பாலும் மிக விரைவில் இழக்கப்பட்டு விடும். உலக மயமாக்கலும் அந்நிலைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மிகப் பிரதானமான வர்த்தக நிறுவனங்களாகக் கருதப்படும்.

IBM, கொக்கா கோலா, பெப்சி கோலா, கூகுல், மைக்ரோசொப்ட், அப்பிள், இன்டெல் போன்ற நிறுவனங்கள் உலகம் தழுவிய அளவில் செயற்பட்டு வரும் நிறுவனங்கள் என்பதுடன் தற்போது அந் நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களாக அல்லாது உழைப்பிற்கு குறைந்த விலையுள்ள நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களாக ஆகியுள்ளன.

அமெரிக்க அளவு கோலின் படி அந் நிறுவனங்கள் வேறு நாடுகளிலே உழைப்பைப் பெறுவதற்கு வழங்கும் விலை குறைவேயாயினும் அந்நாடுகளின் அளவு கோலின்படி அந்நாடுகளில் சாதாரணமாக வழங்கப்படும் விலையை விட அதிகமாகும். இதனால் அமெரிக்காவில் வேலையில்லாப் பிரச்சினை தீவிரமாகியுள்ளதுடன் ஏனைய நாடுகளில் குறைந்துள்ளது.

இந்நிலைமையை அமெரிக்காவைப் போலவே ஐரோப்பாவிலும் வேலையில்லாத திண்டாட்டத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலே வேலையில்லாதோரின் தொகை 9.1 வீதம் ஐரோப்பாவிலே 9.4 வீதம் ஆகும்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் வீழச்சி அடைந்தாலும் அது ஓரளவான வீழ்ச்சியாயிருக்குமே தவிர முழுமையான வீழ்சியாயிருக்க மாட்டாது.

சூரியன் அஸ்தமிக்காத ஏகாதிபத்தியம், எனக் கருதப்பட்ட இங்கிலாந்து அதன் கொலனி நாடுகளின் ஆட்சியதிகாரத்தைதக் கைவிட்ட போதும் ஒரேயடியாக வீழ்ந்து விடவில்லை. பெரும் பிரச்சினைகள் இருந்தபோகும் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளினால் உருவாக்கப்பட்ட சக்தி மிகு குழுவொன்று இன்னம் குறிப்பிட்டதொரு நீண்ட காலத்திற்கு இன்னமும் குறிப்பிட்டதொரு பெரும் அதிகாரத்தைக்

கொண்டியங்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் அவர்களிலொருவர் உலகின் சக்திமிக்கவராக இல்லாவிடில் உலகின் சக்தி மிக்கவரைத் தீர்மானிக்கும் செயற்பாட்டில் அவர்கள் செல்வாக்கு செலுத்துவார்கள். அந்த இடத்திலே அவர்களுக்குத் தெரிவு செய்ய இருப்பது இந்தியா மற்றும் சீனா ஆயின் அவர்களின் தெரிவு பெரும்பாலும் இந்தியாவாக இருக்கவே வாய்ப்பு உண்டு. இதற்கு மிக முக்கிய காரணம் இந்தியா ஏற்றுக் கொள்ளும் பெறுமானங்கள், சீனா ஏற்றுக் கொள்ளும் பெறுமானங்களை விட அவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவிருப்பதே.

இந்த நிலைமைகளினால் எதிர்காலத்தில் உலகின் சக்தி மிகு நாடாக விளங்கும் வாய்ப்பு சீனாவை விட இந்தியாவுக்கே இருப்பது புலனாகின்றது.

உலகின் அதிகார மாற்றம் சம்பந்தப்பட்டமட்டில் வித்தியாசங்கள் ஏற்படக்கூடுமாயினும் சூழலைப் பொறுத்தமட்டில் உலகம் இன்று நல்ல நிலைமையில் இல்லை. மிக ஆபத்தான நிலையிலேயே உள்ளது. மனித இனத்தின் பேராசை, இயற்கையின் இருப்புக்கு தாக்குப் பிடிக்காத அளவுக்கு சுமையாகியிருப்பது புலனாகின்றது. அதனால் எந்தக் கணத்திலும் ஏற்படவிருக்கும் பேரழிவின் விளிம்பிற்கே மனிதகுலம் வந்துள்ளது. இயற்கையை வெற்றி கொள்வதற்கு மனித வர்க்கத்திற்கு இருக்கும் திறன் குறித்து மார்க்ஸும் எங்கல்கஸும் எழுதியது மனித வர்க்கத்தின் மீது ஏற்படுத்திக் கொண்ட பெரும் விசுவாசத்திலும் அபிமானத்தினாலேயாகும்.

எனினும் மனித வர்க்கத்தின் வளர்ச்சி தடுக்கப்பட முடியாதது என்னும் கூற்று இன்று பொருளற்றதாகிவிட்டது. டெட்பலன் கூற்றுக்கமைய மனித குல வரலாற்றை வரிசையாக வைத்துப் பார்த்தோமானால் இன்றைய மனிதன் இருப்பது அந்த வசையில் 680 ஆவது இடத்திலோ அல்லது அதற்குகிட்டிய இடத்திலோ ஆகும்.

முழு மனித குலத்திற்கும் ஏற்பட்ட மாற்றங் களைவிட 680 பேருக்கு ஏற்பட்ட மாற்றங்கள் மிக பாரிய அளவினதாகும்; ஆச்சரியம் நிறைந்ததாகும். அவ்வாறான பாரிய மாற்றங்களுக்குட்பட்ட காலத்தில் உயிர் வாழ்வது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியுமெனினும் மறுபக்கத்தில் பொதுவாகப் பார்க்குமிடத்து நாம் இருப்பது பேரழிவின் மிக அருகிலேயோகும். அந்த அழிவு முழு மனித வர்க்கத்தை அல்லது அதில் பெரும் பகுதியைக் காவு கொள்ளலாம். விஞ்ஞானத்திற்கோ தொழில்நுட்பத்திற்கோ இதனை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி இருப்பதாகத் தெரியவில்லை.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.