Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவிடம் நீதி கேட்க தயாராகும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத்!; தமக்கெதிரான அரசின் செயற்பாடுகளை ஆட்சேபித்து

Featured Replies

அரசால் தமக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் முறையிடுவதற்கு முன்னாள் பிரதமநீதியரசர் சரத் என்.சில்வா தீர்மானித்திரு க்கிறார் என நம்பகரமாகத் தெரியவருகிறது.

பிரதம நீதியரசராகப் பதவிவகித்த காலத்தில் சரத் என்.சில்வாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், அரசின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தமது உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சபைகளுக்கு முறைப்பாடுகளைச் செய்வதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் தயாராகி வருவதாகத் தெரியவருகிறது. இதன்படி, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இந்த முறைப்பாடுகளை அவர் செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் சர்வதேச நீதிபதிகள் சபையின் பிரதி நிதிகளுக்கும் எழுத்துமூலம் அவர் முறையிடுவாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்துறையில் உயரிய அந்தஸ்தை, பதவியை வகித்த தமக்கெதிராக அடிப்படையற்ற விதத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது அடிப்படை மனித உரிமை மீறல் என்று முன்னாள் பிரதம நீதியரசர் அவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=45094624802473332

இவர் ஏற்கனேவே தனது மரண சாசனத்தை உலக நாடுகளின் தூதுவர்களுக்கு அனுப்பி வைத்திருப்பார் போல உள்ளது.

ஒரு முன்னாள் பிரதம நீதியரசருக்கே இந்த நிலை என்றால், சிங்களம் ஒரு 'கொள்ளிவாய்காலை' சந்திப்பது வரலாற்று நியதியே.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.